கொல்கத்தா: பெட்ரோல், டீசல் மீதான வரியில் இருந்து ஒரு ரூபாயை குறைத்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

10 நாட்களாக நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இந் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியில் இருந்து ஒரு ரூபாயை குறைத்து மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா கூறியதாவது: மத்திய அரசானது பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ. 32.90ம், டீசலுக்கு லிட்டருக்கு ரூ. 31.80 ம் வருவாயாக பெறுகிறது. ஆனால் மாநில அரசோ பெட்ரோல், டீசலுக்கு முறையே ரூ.18.46ம், ரூ.12.77ம் மட்டுமே வருவாயாக பெறுகிறது.

மாநில அரசுடைய இத்தகைய நடவடிக்கை மக்களுக்கு சிறிய ஆறுதல் தருவதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.