கொல்கத்தா: மேற்குவங்க ஆளுநர் தன்னிச்சையாக ஆய்வு மேற்கொண்டதால், மாநில ஆளுநரை உடனே பதவி நீக்கம் வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போர்க்கொடி தூக்கி உள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தில் பாஜக, திரிணாமுல் இடையே சர்ச்சை நீடித்து வருகிறது. மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்தபிறகும், பாஜகவினர் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல பகுதிகளில் பாஜகவினர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு உள்ளதாகவும் 15க்கும் மேற்பட்டோர் திரிணாமுல் காங்கிரசாரால் கொல்லப்பட்டு உள்ளதாகவும் புகார் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் மாநில அரசுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில், மாநில ஆளுநர் ஜகதீப் தங்கார் மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதிக்கு ஆளுநர் சென்று வந்தார். அப்போது அதிகாரிகளை சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடுப்படைந்துள்ள மம்தா, ஆளுநர் தங்கார் மாநிலத்தை பிளவுபடுத்த நினைப்பதாகக் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், ஆளுநர் ஜகதீப் தங்கார் ஒரு ஊழல்வாதி என்றும்,, 1996ம் ஆண்டு நடந்த ஜெயின் ஹவாலா வழக்கில் ஆளுநரின் பெயர் இருந்ததாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.மேற்கு வங்க ஆளுநரை நீக்குவதற்காக நான் மூன்று கடிதங்களை எழுதியுள்ளேன் என்றும் “எங்கள் அரசாங்கத்திற்கு மக்களிடையே அனுமதி மிகப்பெரிய அனுமதி கிடைத்த பின்னர், அவர் ஏன் அதிகாரிகளை சந்தித்து ஆணையிட வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஆளுநர் தங்கார் முதலமைச்சரின் குற்றச்சாட்டினால் தாம் அதிர்ச்சியடைந்திருப்பதாக ஆளுநர் ஜகதீப் தங்கார் தெரிவித்துள்ளார்.