கொல்கத்தா

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மேற்கு வங்க பாஜக வேட்பாளர் பவன்சிங் மறுத்துள்ளார்

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இந்த பட்டியலில் 195 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன்படி பிரதமர் மோடி, வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மேலும் 34 மத்திய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்

நேற்று வெளியான பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் தொகுதி. வேட்பாளராக பவன் சிங் போட்டியிடுவார் என்று பாஜக  அறிவித்தது. ஆனால் தற்போது. போஜ்புரி மொழி பாடகரான பவன் சிங் தாம் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

இது குறித்து போஜ்புரி மொழி பாடகர் பவன்சிங் எக்ஸ் தளத்தில்,

நான் பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக என்னை நம்பி மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் வேட்பாளராக அறிவித்தது, ஆயினும் சில காரணங்களால் என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது

எனப் பதிவிட்டுள்ளார்.

பாஜக வேட்பாளர் போட்டியிட மறுப்பு தெரிவித்த சம்பவம் கட்சி.நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.