டெல்லி; நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை நிரூபிக்கிறோம் என காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தலில் வாக்களித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறினார். வாக்குப்பதிவு மாலை 4.30மணியுடன் நிறைவுபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல்  22 ஆண்டுகளுக்கு பிறகு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று நடைபெற்றது. தலைவர் பதவியை பிடிக் கட்சியின் மூத்த தலைவர்களான கார்கே, சசிதரூர் இடையே நேரடி போட்டி உள்ளது.

இந்த நிலையில், வாக்குப்பதிவுக்காக டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. குமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத் ஜோடோ யாத்திரை நடைபயணம் மேற்கொள்ளும், ராகுல்காந்தி மற்றும் அவருடன் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள், தங்களது வாக்குகளை செலுத்தும் வகையில், அவர்களுடன் செல்லும் கண்டெய்னர் லாரி ஒன்றில், வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை 10மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், வாக்களிக்க தகுதி உள்ள தலைவர்கள், மாநிலங்களின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலையைகத்தில்,  சோனியா காந்தி, பிரியங்கா காந்தி வாக்களித்தனர். கர்நாடகா மாநிலத்தில் ராகுல்காந்தி தமது வாக்கை பதிவு செய்தார்.

கேரளா மாநிலத்தில திருவனந்தபுரத்தில்  காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தமது வாக்கை பதிவு செய்த, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கட்சி  தலைவரை ஜனநாயக முறையில் தேர்வு செய்யும் நிகழ்வில் பங்கேற்றிருப்பது ஒட்டுமொத்த காங்கிரஸுக்கும் பெருமையளிக்கும் தருணம். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இதுபோன்ற தேர்தல் மூலம் தலைவரை தேர்ந்தெடுக்க. இதன்மூலம் நாங்கள் உண்மையான ஜனநாயகத்தை வெளிபடுத்துகிறோம் என்றார்.

அப்போது செய்தியாளர்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், காந்தி குடும்பத்தை அனுசரித்து செல்லவேண்டிய நிலை உருவாகுமே என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த வேணுகோபால், அதுபோல இருக்காது, கட்சியில் ரப்பர் ஸ்டாம்ப் தலைவராக யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் அவர் உறுதிபட கூறினார்.

தேர்தல் குறித்து கருத்து கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் திரிவேதி , ஜனநாயக முறைப்படி நடைபெற்ற இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப்படியே வாக்களித்தனர்.  இதுபோன்ற தேர்தல் வேறு எந்த கட்சியிலும் நடந்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு  மாலை 4.30 மணியுடன் நிறைவு பெற்றது.  வாக்குப்பெட்டிகள் அனைத்தும் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 19-ந்தேதி (நாளை மறுநாள்) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.