டெல்லி: ஆப்கானிஸ்தானை முழுமையாக  இந்தியா கண்காணித்து வருகிறது என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

ஆப்கானிஸ்தானை முழுமையாக தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கிருந்து அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, அமைச்சர்கள்  உள்பட  பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காபூலில் இருந்து பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீகம் சென்று தஞ்சமடைந்தனர். இதையடுத்து ஆப்கன்மீது உலக நாடுகள் கடும் கோபத்தில் உள்ளது. அந்நாட்டுடனான உறவை இந்தியா உள்படபல துண்டித்துள்ளது.

இதையடுத்து, இந்தியாவுடன் உறவை தொடர விரும்புவதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.  இந்தியா ‘இந்த துணைக்கண்டத்திற்கு மிகவும் முக்கியமானது’ என்றும், தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ‘கலாச்சாரம்’, ‘பொருளாதாரம்’, ‘அரசியல்’ மற்றும் இந்தியாவுடனான ‘வர்த்தக உறவுகள்’ ‘கடந்த காலத்தைப் போல’ தொடர விரும்புவதாகவும் கூறியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று,நாட்டின் பாதுகாப்பு குறித்து பேசினார்.

அப்போது,, ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி நடக்கும் நிலையில்,நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விவகாரத்திலும் தீவிரமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் சமன்பாட்டை மாற்றுவது இந்தியாவிற்கு ஒரு சவால், மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலைகள் நம் நாட்டை அதன் மூலோபாயத்தை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. நாங்கள் எங்கள் மூலோபாயத்தை மாற்றுகிறோம் மற்றும் QUAD உருவாக்கம் இந்த மூலோபாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று கூறிய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், ஆப்கானிஸ்தானின் நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இந்தியர்களின் பாதுகாப்போடு, அங்குள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி, தேச விரோத சக்திகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முடியாது என்றதுடன்,  ஆகாயம்,கடல், தரை என அனைத்து மார்கத்திலும் கண்காணித்து வருகிறோம்,  எந்த சூழலையும் எதிர்கொள்ள நாடு தயாராகவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.