சென்னை:

யோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்சநீதி மன்றம் நியமித்துள்ள முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, அயோத்தி  சிக்கலை தீர்க்க முயற்சிப்பேன் என்று தெரிவித்து உள்ளார்.

அயோத்தி சர்ச்சைக்குரிய  நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு மத்தியஸ்தர்களாக  3 தமிழர்களை நியமனம் செய்துள்ளது. மத்தியஸ்தர்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கலிபுல்லாவும், அவருடன்,  ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞரான  ஸ்ரீராம் பஞ்சு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த குழுவினர் பல ஆண்டுகளாக நீடித்து வரும் அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு கண்டு, இந்து  முஸ்லிம் சகோதர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுபெற்ற நீதியரசர் இப்ராகிம் கலிபுல்லா, உச்சநீதி மன்றம் ராம் ஜென்மபூமி-பாபர் மசூதி மீது நிலம் தொடர்பாக  என் தலைமையிலான நடுநிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். ஆனால், எனக்கு இன்னும் அதற்கான உத்தரவு கிடைக்கவில்லை. இந்த சிக்கலை தீர்க்க எங்களால் முடிந்த அளவிலான முயற்சிகளை எடுப்போம்  என்று தெரிவித்து உள்ளார்.