கல்யாண்ராமன் "குண்டு" எதிர்வினை
கல்யாண்ராமன் “குண்டு” எதிர்வினை

கடந்த 7ம் தேதி patrikai.com  இதழில், “அமித்ஷா கூட்டத்தில் காலி நாற்காலிகள்: பா.ஜ.கவினர் ஏமாற்றம்” என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
இதில் நாகர்கோவிலில் அமித்ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கூட்டம் இல்லாதது குறித்து குறிப்பிட்டிருந்தோம்.
இதைப் படித்த கல்யாண்ராமன் என்பவர், “அடுத்து உங்க மீட்டிங் நடக்கிற இடத்துல சாதாரண நாட்டு வெடிகுண்டை வெடிக்க விட்டோம்னா  அப்புறம் பாருங்க  உங்க மீட்டிங் நடக்கிற இடத்திலெல்லாம் நம்ம பசங்க வெறியோட  வேலை செய்வாங்க  10 துலுக்கனையும் உள்ளே புடிச்சி  போட்ட மாதிரியும் இருக்கும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
கல்யாண்ராமன்
கல்யாண்ராமன்

சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக இப்படி கருத்து தெரிவித்த இந்த கல்யாணராமன் என்பவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.
பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவர் என்று அறியப்படும் இவர், அக் கட்சி சார்பாக டிவி. விவாதங்களிலும் கலந்துகொண்டவர்.  தொடர்ந்து  திராவிடர் இயக்க, கட்சிகளின் தலைவர்கள், சிறுபான்மை இனத்தவர் மீது  கீழ்த்தரமான அவதூறு கருத்துக்களை பதிவிடுபவர் இவர் என்ற புகாரும் உண்டு.
ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம், இஸ்லாமியர்கள் மனம் புண்படி எழுதியதால், இவர் மீது புகார் கொடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழிசை
தமிழிசை

அப்போதும் நாம் செய்தி வெளியிட்டோம். அந்த சமயத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை புழல் சிறையில் இருந்த கல்யாண்ராமனை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார். இதுபற்றி அவரிடம் நாம் கேட்டபோது,   “அவன்  மோசமா எழுதறதா பலபேரு சொல்லியிருக்காங்க. என்னைக்கூட,  “அடிமைப்பெண்” அப்படினு கேலியா எழுதினானாம். ஜாதி கண்ணோட்டத்துல அவன் எழுதறதாவும் சொன்னங்க. ஆனா நான் கல்யாண்ராமன் முகநூல் பக்கத்தை  பார்க்கிறதே இல்லைப்பா! அதே நேரம் எந்த மதத்துக்காரங்களை யார் கீழ்த்தரமா எழுதினாலும் தப்புதான். அதை நான் ஆதரிக்கலை” என்றர்.
 
கல்யாண்ராமனுக்கு எதிர்ப்பு
கல்யாண்ராமனுக்கு எதிர்ப்பு

இப்போது patrikai.com செய்திக்கு சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கல்யாண்ராமன் எழுதி உள்ளார். இதற்கு சமூகவலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.