வார ராசி பலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

Must read

அலுவலகத்தில் எதிர்பாராத திடீர் மாற்றம் அல்லது முன்னேற்றம் இருக்கும். வேலைக்குத் தகுந்த மரியாதையும் காசோலையும் இல்லைன்னு பதற்றமா? அதைத் தூக்கி உடைப்பில் போடுங்க. எல்லாம் வரும்போது வரும். நமக்குத்தான்மா அவசரம். மகனும் மகளும் ப்ளாடினத் தட்டில் தாங்கறாங்களா! என்ஜாய்! புது தம்பதியா? பாப்பா பிறக்கப் போகிறது. ஹஸ்பெண்டுக்கு வங்கிக் கணக்கில் டிஜிட்ஸ் கூடும், கொஞ்சம் தெனாவெட்டாத்தான் பேசுவார், கண்டுக்காம விடுங்க, தானா இறங்கி வருவாரு.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் மஞ்சள் நிறம் உபயோகியுங்க.

அலுவலகத்தில் பலர் நமக்காக எவ்ளோ அனுசரிச்சுப்போனாங்க! நாமளும்தான் அட்ஜஸ்ட் செய்து கொள்வோமே! அலுவலக சூழல் சற்று அவசர கதியில்தான் இருக்கும். புது வண்டி ..வாகனம்.. வாங்குவீங்க. அருமையான மார்க் வங்குவீங்க. உடை மற்றும் உபயோகப் பொருட்க ளில்  ஆரஞ்சு அல்லது பிங்க் நிறம் உபயோகியுங்க. அடேயப்பா.. அதிருஷ்டம் டெர்ரஸைப் பிச்சுக்கிட்டக் கொட்டப் போகுது பார்த்துக் கிட்டே இருங்களேன். வரவுக்கு மேல் வரவு..லாபத்துக்குமேல் லாபம்.. செம.. ஆனால்… ஆரோக்யத்தை மட்டும் கிள்ளுக்கீரை மாதிரி அலட்சியப்படுத்திக்கிட்டு இருக்கீங்களே.. நியாயமா?

கன்னா பின்னா என்று குரல் உயர்த்திக் கத்த வேண்டாம்.. பின் விளைவு களை யோசித்துப் பேசுங்க! (குறிப்பாய் அலுவலகம் பள்ளி கல்லூரியில்…). தியானப் பயிற்சி செய்வது நல்லது. ஆசிரியராக இருப்பவங்களுக்கு இயன்றதை அளியுங்க.. அழகு சாதனங்களுக்கு கார்டைத்தேய்ப்பீங்க. ஜாலிதான்!! குடும்பத்தில் யாருக்கேனும் மெடிகல் செலவு வர்க்கூடும். எனினும் உங்களுக்கு முன்யோசனை அதிகம். காப்பீடும் இருக்கும். மனசும் ரெடியாக இருக்கும்.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில்  மஞ்சள் நிறம் உபயோகியுங்க

அலுவலகத்தில் பொறுப்புக்கு மேல் பொறுப்பு சுமத்தினாலும் புன்னகை யுடன் சமாளிக்கும் குணம் உள்ளவர் நீங்க. கணவர்/ மனைவி முன்பைவிட அதிகமாக அட்ஜஸ்ட் செய்து கொள்வார். அதிருஷ்டம்தான் போங்க. பேச்சினால் வானத்தை வில்லாய் வளைப்பீங்க. விமானத்தில் ஒரு கால் விமான நிலையத்தில் ஒரு கால்னு பறப்பீங்க. புது வேலை கிடைக்கும், அல்லது கிடைச்சிருக்குமே? சிஸ்டர் அல்லது பிரதர் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி இ மெயில் பண்ணுவாங்கம்மா. டாடியோட ஃபைட் சீன் முடிஞ்சாச்சா? மம்மி சப்போர்ட் நிறைய இருக்குமே? டாக்டர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் சிவப்பு நிறம் உபயோகியுங்க.

சிரமம் வருவது போல் தோனும்…  எல்லாம் சிம்ப்பிளாய்க் கடந்து போகும்போது நிம்மதியின் உச்சிக்குப்போவீங்க. சிறந்த பக்குவம் உங்களுக்கு இருக்கு. அலுவலகத்தில் மேலும் மேலும் நல்ல பெயர் கிடைச்சுக்கிட்டே போகும்.  காலை ஜப்பானில் காஃபீ.. மாலை நியூயார்க்கில் கட்லெட்னு ஓடுவீங்க. கட்டம் சம்பந்தமான லாபம் எதிர்பாத்திருந்தவங்களுக்கும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இருக்கறவங்களுக்கும் வீடு வாங்க விக்கறவங்களுக்கும் லாபம்ஸ் உண்டு.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் ஊதா நிறம் உபயோகியுங்க.

சட் சட்டென்று திரை  போட்டுத் திரை விலக்கிக் காட்சிகள் மாறும் நாடகம் போல் அதிருஷ்டம் எதிர்பாராத நேரங்களிலெல்லாம் கதவைக்கூடத் தட்டாமல் ஓடி வந்து உட்கார்ந்து கொள்ளும். மச்சம்தான் போங்க. கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். காதல் வளரும். வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்னா அது ஒண்ணுதான் நம்மால முடியாத விஷயம், என்ன செய்ய? குறிப்பா அண்ணன் தங்கை அக்கா தம்பின்னா தடாலடியா எடுத்தேன் கவிழ்த்தேன், ஏதோ எல்லாரும் உங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போறாங்களோ பிழைச்சீங்களோ.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் மெரூன் நிறம் உபயோகியுங்க.

 

பயந்தீங்களே! எல்லாம் நல்ல முறையில் முடிஞ்சிருக்குமே. ஹாப்பீ?

அலுவலகத்தில் சில மாறுதல்கள் ஏற்படும். பொறுமையை அணியுங்கள். எல்லாம் சீக்கிரத்தில் சரியாகும். வெளிநாடு வேலை கிடைச்சாச்சு! நம்புங்க.. எல்லாம் கொஞ்சம் ஸ்லோ மோஷன்ல இருந்தாலும் டென்ஷன் குறைவாய்த்தான் இருக்கும். ஈகோ போதும் நிப்பாட்டிக்குங்க. டாடி மூலம் பெரிய நன்மை ஒண்ணு கிடைக்கப்போதுகு. நீங்கதான் எப்பவுமே அவர் செல்லமாச்சே. மனசில் நல்ல எண்ணங்கள் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் இள மஞ்சள் நிறம் உபயோகியுங்க.

சந்திராஷ்டமம்: 31.03.2017 முதல் 02.04.2017 வரை

பல வித வருமானங்கள்  …லாபம் ..வரவு .. ஆதாயம் வரும். வங்கிக் கணக்கில் தொகை கூடும். கோயிலுக்குப் போகப் பயணத் திட்டங்கள் இப்போது நிறைவேறவில்லையா? டென்ஷனே வேண்டாம். நேரம் வரும்-மா வரும்! நீங்க நினைச்சபடி எதுவும் நடக்கலைன்னு வருந்தாதீங்க! நினைக்காத எவ்ளோ விஷயம் நிறைவேறிச்சு! குறுக்கு வழியில் சம்பாதிக்கவோ  … லாபம் பார்க்கவோ யாராவது நண்பர்கள் அல்லது சிநேகிதிகள் ஆலோசனை கூறினால் அவர்கள் இருக்கும் திக்கைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு உங்கள் மனசாட்சியின் பேச்சுக்கு மட்டும் காதைக் கொடுங்கள், இல்லையென்றால் சிரமப்படப்போவது யாருன்னு நான் சொல்லவும் வேண்டுமோ?

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பச்சை நிறம் உபயோகியுங்க.

சந்திராஷ்டமம்: 02.04.2017 முதல் 04.04.2017 வரை

வேலைப் பளுவா. அதுக்காகப் புலம்பாதீங்க! அந்த அளவுக்கு அளவுக்கு இருக்காது.  குழந்தைகள் பக்கெட் பக்கெட்டாக சந்தோஷத்தை அள்ளிக்கொட்டுவாங்க! நண்பர்களா பகைவர்களா என்று நல்லா ஆராய்ச்சி செய்தபிறகு பழகுங்கள். எதிர்பாலினத்தினர்கிட்ட கவனமா இருங்க! ப்ளீஸ்.  வேளை வந்துவிட்டது.. வேலைக்கும் மாலைக்கும் சேர்த்து ஒரு சேர நேரம் வந்துவிட்டது. அம்மாவின் உடல் நிலையின் மேல் நிறைய அக்கறை வைக்கணும்மா. புது வீடு/ ஃப்ளாட் வாங்கப் போறீங்க, கங்கிராட்ஸ். வேலை மாற எண்ணம் இருந்தால் அவசரம் வேணாம். யோசிச்சு டிஸைட் பண்ணுவது நல்லது. காதல் வலையில் கால்வைத்துச் சிக்க வாய்ப்பிருக்கு.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில்  மெரூன் நிறம் உபயோகியுங்க.

சந்திராஷ்டமம்: 04.04.2017 முதல் 06.04.2017 வரை

 

கோபமா! வேணாங்க.  சரியா ? முறையா சாப்பிடுங்க.. நேரம் தப்பாம சாப்பிடுங்க. வயுறு பிழைக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கு இன்னும் கொஞ்சமே கொஞ்சம் காத்திருங்க. வீட்ல யாருக்கோ உத்யோகமும் சம்பளமும் உயரும். நல்ல நல்ல காரணத்துக்காக செலவுங்க பண்ணுவீங்க. செலவு அதிகமாயிருக்கும்தான்.. ஆனால் வரும்படியும் கூடுதலாகப்போகுதே. அலுவலகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விடும்படி ஆடிட்டிங் முடியும். கடன் கிடன் என்று இப்போதைக்கு எதிலும் இறங்க வேண்டாம். லோன் மனு எதிலும் கையெழுத்து கைநாட்டு என்று ஆட்டோகிராஃப் போட்டுவிட்டு அப்புறம் புலம்பாதீங்க, ஆமாம், சொல்லிட்டேன்.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் பளிச்சென்று கண்ணைக் கவரும் வெள்ளையை  உபயோகியுங்க.

மேளம் கொட்டும் நேரம் வந்தது. உங்க சிறப்பு வெளியில் தெரிஞ்சு அவார்ட் ரிவார்டுனு ஜமாய்ப்பீங்க. மேலதிகாரிகள் இவ்ளோ காலமாய் அதிக அனுசரணை இல்லாம இருந்தாங்க. இனி அந்த நிலைமை மாறும்!! முன்னெல்லாம் எதை எடுத்தாலும் வெரி ஸ்லோ..வெரி வெரி… ஸ்லோவாய் இருந்தது! இல்ல வேகம் அதிவேகம்தான்! குழந்தைங்க ளைப் பற்றி என்னவோ அவ்ளோ கவலைப்பட்டீங்களே? ஒரு நாள் அப்படி இருந்தால் ஒரு நாள் இப்படியும் வயிற்றில் ரோஸ்மில்க் வார்ப்பார்கள் என்று இப்போதாவது புரிந்ததா? அதென்ன உங்களுக்கு பயப்பட வேண்டாததற்கு பயம் வருது? பயப்பட வேண்டிய இடத்தில் அசட்டுத் துணிச்சல் குபீர்னு வருது? ’அஞ்சுவது’ என்று ஆரம்பிக்கும் குரளுக்கு அர்த்தத்தைப் படிச்சு நிற்க அதற்கத்  தக.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் வெண்மையை உபயோகியுங்க.

நண்பர்கள் உதவி ஏராளமா உண்டு. வங்கில கடனுக்கு அப்ளை செய்தி ருந்தீங்க. கிடைச்சாச்சு. முன்பு வாங்கிய கடனும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அடையும். செலவுங்க எல்லாமே ஹாப்பி செலவுங்கதா. குழந்தைங்க பத்தி மனசில் இருந்த டென்ஷனெல்லாம் விலகும். துணிக்கடை.. நகைக்கடை..  படையெடுப்பெல்லாம் சந்தோஷமா முடியும், உங்களை ராத்திரியும் பகலுமாய்ப் பயமுறுத்திக்கிட்டிருந்த ஆரோக்யப் பிரச்சினை யெல்லாம் போயே போச். ரைட்டா? தேவையில்லாமல் கோபமும் வேண்டாத இடத்துல தைரியமும் வந்தால் அதுக்கெல்லாம் குட்பை சொல்லிடுங்கப்பா.

உடை மற்றும் உபயோகப் பொருட்களில் நீல நிறம் உபயோகியுங்க.                        

More articles

Latest article