வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

Must read

சகோதர சகோதரிகள் குடும்பத்தில் பன்னீர் சந்தனம் ரோஜா மாலை என்று அமர்க்களப்படும். நீங்கள்தான் அங்கு வி ஐ பி. நல்ல விஷயங்கள் நடக்கக் காரணமாய் இருக்கீங்க, கர்வம் கொள்ளலாம், ரொம்ப நாளாய்க் காத்திருந்த வீடு ரெஜிஸ்ட்ரேஷன் முடியும் வேளை வந்தாச்சும்மா. லட்டு எடுங்க, கொண்டாடுங்க. புது வேலையா?  மாறுங்களேன்? கலைசார்ந்த துறையில்  இருக்கீங்களா? அப்ப பெரிய பர்ஸ் வாங்குங்க, வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திடீர் என்ட்ரி குடுப்பாங்க, நல்லவங்களா நடந்துப்பாங்க, பழைய சின்னசின்ன உரசல்களை டெலிட் செய்து ரீசைக்கிளிங்க பின்-னில் போடுங்கம்மா. வருமானம் குவியும். மம்மீயின் நகைகள் உங்களுக்குக் கிடைக்கும். புது ஜாப் கிடைக்கப்போகுது. ரெடியா? ஆல் தபெஸ்ட்

செல்ல வேண்டிய சன்னிதி : குரு

சிஸ்டர்ஸ் மற்றும் சகோதரர்கள் அனுசரணையா இருப்பங்கம்மா.. பல காலம் முடங்கியிருந்த வியாபாரம் சோம்பல் முறிச்சு எழுந்து சந்தோஷ நடனத்துக்குத் தயாராய் இருக்கு. நீங்களும் அதற்கு சரியாய் ஈடு கொடுக்கணும். எழுமின். விழிமின் உடன் பிறந்தவர்களுக்குப் பிரச்சினை வந்து நீங்கள் உதவி செய்து பெரிய ஹீரோயின் ஆவீங்க.  பிரச்சினைகள் காணாமல் போயிடும். இவ்ளோ காலம் பகையா இருந்த வில்லிகள் எல்லாம் இப்ப சந்தானம் ரேஞ்சுக்கு (நண்பேண்டா) நட்பு பாராட்டுவாங்க. பிளாட்டின சிம்மாசனத்தில்தான் அதிகாரம் செய்வீங்க, டாடியை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க, இப்ப் பாருங்க, சுணக்கமான சூழலில் சற்றே சலிப்படைந்து போரடிச்சுக்கிட்டிருந்தீங்க, திடீரென்று வசந்தம் வீசும், மணங்களை சேர்க்கும், மனங்களையும்தான். டாடிக்கு பதவியும் சம்பளமும் உயரும். உடல் நலத்தைக் கெடுக்கும் எந்த விஷயத்தையும் நெருங்க அனுமதிக்காதீங்கம்மா. அதிருஷ்டம்னா அதிருஷ்டம் அவ்ளோ அதிருஷ்டம் நயாகராவாய்ப் பொழியும்.  செல்ல வேண்டிய சன்னிதி : துர்க்கை

சந்திராஷ்டமம் : 06.04.2017 முதல் 08.04.2017 வரை

நிறைய அன்பளிப்புக்களும் அதைவிட நிறைய வாழ்த்துக்களும் கிடைக்கும். உங்களை மகிழ்ச்சியில் துள்ளச் செய்யும் செய்தி ஒன்று மெயில்பாக்சில் இருக்கும். அதை இதை சாப்பிட்டு ஆரோக்யத்துக்கு எதிரியாயிடாதீங்க. ஒரு வழியா இப்பதான் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுதலையாகியிருக்கீங்கம்மா.  கடந்த சில வருடங்களாக உங்களுக்கு டென்ஷன் தந்தவர்களுக்கு ஆப்புதான். சற்று  அனுசரித்து வாழ  வேண்டியிருக்கும், மனசை ரெடியா வெச்சுக்குங்க. இந்த வருஷம் பெரிய சந்தோஷம் என்னன்னா… நண்பர்கள் மற்றும் சிநேகிதிகள் உங்களுக்கு மிகப் பெரிய பரிசாக விளங்குவாங்க. குடும்பத்தில் அடுத்ததுட்டு நல்ல நியூஸ் இருக்குங்க, சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அப்புறம் வாழ்க்கை நேராக சீராக நகரும்.. வெளிநாடு சம்பந்தப்பபட்ட நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

செல்ல வேண்டிய சன்னிதி : பெருமாள்

சந்திராஷ்டமம் : 08.04.2017 முதல் 11.04.2017 வரை

டாடியுடன் ரகளை வேண்டாம். ஜாக்கிரதைம்மா அவர் பக்கம்தான் நியாயம் இருக்கும், பாஸ்போர்ட் விசா எடுத்து பெட்டியைக் கட்டி வெச்சுட்டா உடனே கிளம்பிட முடியுமா? அததுக்கு வேளை வரணுமில்ல? இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பொறுமையா இருந்தாலே போதும்,

 ஆங்காரம் அகங்காரம் என்று எல்லா காரங்களையும் மூட்டை கட்டி வெச்சுட்டீங்க. சபாஷ். இருங்க. இதோ டேக் ஆஃப் ஆயிடுவீங்க. இத பாருங்க,.. கண்மூடித்தனமான அதிருஷ்டம் ஆன் த வே வந்துக்கிட்டிருக்கு என்று எண்ணி தப்பான ஸ்டேஷனில் காத்திருந்து ஏமாறாதீங்கம்மா. உழைப்பையும் நேர்மையையும் மட்டுமே நம்புங்க. திடுதிப்புனு வேலை மாற்றம்… அல்லது மாற்றல் வரும். சற்று அவசர கதியில் ரன்னிங்க பஸ்ஸில் ஏறுவது போல் ஜாயின் செய்வீங்க. ஆல் தபெஸ்ட்

செல்ல வேண்டிய சன்னிதி : சிவன்

சந்திராஷ்டமம் : 11.04.2017 முதல் 13.04.2017 வரை

பேசுவது பலிக்கும். பேசும் எந்த விஷயத்தையும் நல்லதாகவே பேசுங்க. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று மம்மியே சொன்னாலும் கோபத்தை ஆஃப் பண்ணிடுங்க. நெருங்கிய நண்பர்களுக்குப் பெரிய உதவிகள் செய்து அவர்கள் மனதில் இடம் பிடிப்பீங்கம்மா. செம ஜாலியாய்ப் பொழுது போகும். திடீர்னு பொன் மகள் வருவார். பொருள் கோடி தருவார். குழந்தைகளால் சந்தோஷமும் பெருமிதமும் நிறையும் என்றால் இரண்டாம் பாதியில் நண்பர்களால் சிநேகிதிகளால் நன்மையும் மகிழ்ச்சியும் பெருகும். அம்மாவுக்கோ அம்மாவாலோ சிறிய பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். உடனே சரியாகும். செல்ல வேண்டிய சன்னிதி : சாய்பாபா அல்லது தட்சிணா மூர்த்தி

மனதறிந்து எந்தத் தப்பும் செய்யாதீங்க. சனி உங்களைக் கண்ணிமைக்காம பார்த்துக்கிட்டிருக்கார். அலுவலகத்தில் திடீர் முன்னேற்றம் இருக்கும். எந்த விஷயத்தை எடுத்தாலும் சிறு தடை தாமதங்கள் இருக்கிறதே என்று கவலைப்படாதீங்கம்மா. வழி கிடைக்கும். வாகனங்களால் சிறு செலவுகள் இருக்கும். பாப்பாவுக்கு ஆசைப்பட்டவங்களுக்கு நற்செய்தி. முன்பைவிட இப்போதெல்லாம் நிதானமும் பொறுமையும் அமைதியான போக்கும் உங்க்ளை அழகாய் வழிநடத்திக்கிட்டிருக்கு. பாராட்ஸ். முயற்சிகள் எல்லாம் பலிக்காமல் இருந்த சோகம் வருடத்தின் இரண்டாம் பாதியில் வைப்பரால் துடைத்ததுபோல் விலகி பளிச் சந்தோஷம் பரவும். ஆல் தபெஸ்ட் செல்ல வேண்டிய சன்னிதி : விஷ்ணு

யாருக்காவது (குறிப்பா உயிர் சிநேகிதங்களுக்கு…. குறிப்பா  காதல் விவ காரங்களில்) உதவி செய்கிறேன் பேர்வழி என்று நீங்கள் சிக்கலில் மாட்டிக்க வேண்டாம். என்றைக்கோ வர வேண்டிய லாபங்கள் நீங்கள் மறந்து போன நிலையில் இப்போது வந்து கதவைத் தட்டும். வாகனம் வாங்கப்போறீங்க… வீடு வாங்கப்போறீங்கம்மா… செம ஜாலிதான். கொஞ்சம் திணறித்  தத்தளிச்சு முயற்சிகள் எல்லாம் சரியான பலன் கொடுக்கலைன்னு டென்ஷனையே தலை முழுக்க அணிந்திருந்தீர்கள் அல்லவா.  இப்ப அந்த டென்ஷன் தலையைவிட்டு இறங்கி தன் வழியில் போய்விடும். செல்ல வேண்டிய சன்னிதி : அம்மன்

சகோதர சகோதரிகள் வந்து ஐஸ் வைத்து காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். டாடிக்க நிறைய அரியர்(ஸ்) பணமெல்லாம் கிடைக்கும். அழகுன்னா அழகு அவ்ளோ அழகாய் ஒரு வீடு வாங்கி எல்லோர் காதிலும் புகை வரவழைக்கப் போறீங்க மேடம். வீட்டுக்குப் பூட்டு வாங்கறீங்களோ இல்லையோ… பூசணிக்காய் வாங்கிடுங்க, திருஷ்டி சுற்றிப்போடுவதற்கு. குடும்பத்தில் யாராச்சும் ஃபாரின் போக வாய்ப்பிருக்கு… நீங்கள் உள்பட. வாழ்க்கையின் ஓட்டம் சற்று  நிதானிக்க வாய்ப்பிருக்கு. வேகம் சில கிலோமீட்டர்கள் குறையலாம். அவ்ளோதான். அதுக்காக ஒரேயடியாய் அப்செட் ஆகி, ஒரு ஓரமாய்ப் போய் உட்கார்ந்துவிட வேண்டாம்.  செல்ல வேண்டிய சன்னிதி : அனுமார்

மம்மி எதிர்பார்த்திருந்த நன்மைகள் கிடைக்க கொஞ்சம்  தாமதமாகலாம். எனினும் கிடைக்கும். இத்தனை காலம் இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்மா. ரேஷன் கார்டில் புதிதாக ஒரு பெயர் சேர்க்க வேண்டி வரும். ஒரு பக்கம் உங்க பேச்சினால் பக்கம் பக்கமாய் நல்லது விளையும், இன்னொரு பக்கம் ஏண்டா பேசினோம் என்று ஒரே ஒரு வார்த்தைக்காகக் கண்ணாடி பார்த்துக் கேட்டுக் கொள்வீங்க, சும்மா உற்சாகத்தோட எழுந்து ஓடுங்க, இந்த வருடம் முன்பைவிட அதிகமாக சனிக்கிழமைகளில் உங்களால் எந்தக் கோயிலுக்கு முடியுமோ அந்தக் கோயிலுக்குப் போகும் வழக்கத்தை எற்படுத்திக்குங்க. செல்ல வேண்டிய சன்னிதி : ராமர்

தெய்வீக காரியங்களில் நிறைய ஈடுபடறீங்க.. பாராட்டுக்கள். கும்பலாய்க் காரை எடுத்துக்கிட்டுப் போய் சன்னிதி சன்னிதியா ஏறி இறங்கிப்புண்ணியம் பர்ச்சேஸ் பண்ணுவீங்கம்மா. பேச்சில் கவர்ச்சி அதிகரித்து மேடைகளில் கைதட்டல் பெற்றுத் தரும். இணைந்த இதயங்களை ஒட்ட வைக்கும் பசை உங்கள் பேச்சில் இருக்கும், எதை வேணும்னாலும் அலட்சியப்படுத்தலாம் ஆனா இந்த ஆரோக்யம் இருக்கு பாருங்க ஆரோக்யம் அதை அலட்சியப் படுத்தவே படுத்தாதீங்க, முக்கியமா சாப்பாட்டு விஷயத்தில் அதீத கவனத்தோட இருங்க ப்ளீஸ், அதுதான் உங்க ஆரோக்த்தைத் தீர்மானிக்கப் போகுதுங்க. ஆல் தபெஸ்ட் செல்ல வேண்டிய சன்னிதி : விஷ்ணு

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் டிஷ்யூ வைத்துத் துடைத்தாற்போல் காணாமல் போகும். சண்டைக்காட்சிகள் முடிந்து காதல் காட்சிகள் ஆரம்பம். குட்டிப்பாப்பா குடும்பத்துக்கு வர வழிகேட்டுக்கிட்டு மார்னிங் சிக்னஸ் தரும். சிநேகிதிகளுக்கெல்லாம் நீங்கள் மதர் தெரசா ரேஞ்சுக்கு உதவி செய்வதால் அவர்களின் பிரியத்துக்கும் பெருமைக்கும் ஆளாவீங்கம்மா. எவ்ளோ காலமாய் விழித்திருக்கும்போதும் உண்ணும்போதும் உறங்கும்போதும் கனவு கண்டீங்க… வெளிநாடு போவதற்காக நீங்க அதீத முயற்சிகள் எடுத்த சமயத்திலெல்லாம் உங்களுக்கு அந்த வாய்ப்பு என்னமாய் ஆட்டம் காண்பித்தது, இப்போது நீங்க இழுத்துப் போத்திக்கிட்டுப் படுத்தாலும்கூட அது கதவைத்தட்டி அரவணைக்கும். செல்ல வேண்டிய சன்னிதி : பிள்ளையார்

பாப்பாவைக் கொஞ்சப்போறீங்க. கங்கிராட்ஸ். எங்கும் நிதானப்போக்கு எதிலும் தாமதம் எப்பப்பாரு தடை என்று உங்களை நீங்களே நொந்துக்காதீங்க. நிற்காமல் நடந்துகிட்டிருக்கேன்னு சந்தோஷப் படுங்க. அதென்னமா உங்களுக்கு மம்மியைப் பார்த்தா வம்புக்கிழுத்து வசைபாடணும்னு ஒரு ஆசை? பாவம் இல்ல அவங்க?  அலுவலகத்தில் நல்ல மாறுதல்களை எதில்பார்க்கலாம்., குறிப்பாய்க் குழந்தைகள் பற்றி என்னவெல்லாம் பயந்தீங்களோ அதெல்லாம் இல்லை என்றாகும். மம்மி பற்றி இருந்த பிரச்சினைகள் எல்லாமும் சரியாகும். அவங்க ஆரோக்யம் அருமையாக இருக்கும். பழைய எதிரிகளை வலக்கையை நீட்டிக் கை குலுக்கி வரவேற்று ஹலோ சொல்லப் போறீங்க, அதோடு விட்டால் பரவாயில்லையே. காலம் எழுதும் கதை திரைக்கதை வசனமே வேறு ரகம். அவங்க உங்களுக்கு நிறைய நன்மைகள் செய்து உங்களை வெட்கப்படவே  வெச்சுடுவாங்க. செல்ல வேண்டிய சன்னிதி : முருகர்

More articles

Latest article