மேஷம்

கஷ்டம் ஒன்று காணாம போயி நிம்மதி உண்டாகும். ஒண்ணு ரெண்டு எதிர்ப்புகள் அகலும். ரொம்ப நாளா நீங்க செய்துக்கிட்டிருந்த ஒரு முயற்சி சாதகமான பலன் பெறும். ஆனால் ஒரே ஒரு சின்ன காஷன்.. வாகனங்களில் செல்லும் போதும் எந்திரங்களை கையாளும்போதும் தீ, மின்சாரம் ஆகியவற்றிலும் ஜாக்கிரதையா இருக்கறது நல்லது. வீட்ல சுபகாரியங்கள் நடக்க சான்ஸ் இருக்கு. நல்ல விஷயங்களுக்கு நெறைய செலவு செய்வீங்க. ஸோ.. செலவு சந்தோஷம் தரும். மேரேஜ் முயற்சிகள் கைகூடும்.துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்ளுவீங்க. தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள ரொம்ப அவசரம் வேணாங்க. குடும்பத்துல கலகலப்பான சூழ்நிலை உருவாகும். புதிய திட்டங்கள் தீட்டி அதில் வெற்றியும் அடைவீங்க. தொழில் செய்யறவங்களுக்கு, வேலைப்பளு அதிகரிச்சாலும், வருமானம் பார்த்துடுவீங்க. மொத்தத்துல கவலைப்பட வேண்டாத வாரம். மனசுல யார் மீதும் கோபமும் வன்மமும் வராம பார்த்துக்குங்க. இந்த வாரம் வியாழக்கிழமை நவகிரக சன்னிதியில் 3 நெய் வௌக்கு ஏத்துங்க.

ரிஷபம்

நிம்மதியும் சந்தோஷமும் உங்களோட கடின உழைப்பால கைகூடும். குடும்பத்துல இருந்துக்கிட்டிருந்த சிறுசிறு பிணக்குகளும் பிரச்னைகங்களும் மறையும். பொருளாதார முன்னேற்றமும், புதிய பொருள் வரவும் வீட்லயும் மனசுலயும் ஹாப்பினஸ் தரும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். உத்தியோகஸ்தர்கள், பணியில் ஏற்பட்ட தவறு ஒன்றைச் சரி செய்து உயர் அதிகாரியின் பாராட்டைப் பெற்றுப் பெருமிதம் அடைவீங்க. தொழில் செய்யறவங்க, வாடிக்கையாளரை திருப்திப்படுத்த கொஞ்சம் அதிகமா உழைக்க வேண்டியதிருக்கும். அதனால என்னங்க. முயற்சி சக்ஸஸ் ஆயிடுமே. குடும்பம் நல்லாவே நடந்தாலும், சிறுசிறு வாக்குவாதங்களும் வரத்தான் செய்யும். சும்மா கண்டுக்காம விட்ருங்க. தானே சரியாகும். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வணங்குங்க.

மிதுனம்

குடும்ப வாழ்க்கைல சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும். வியாபாரத்துலயும்.. பிசினஸ்லயும்… பணியிலயும் இருந்துக்கிட்டிருந்த போட்டிகள் விலகும். பார்ட்னருடன் இருந்த பிரச்சினைங்க தீர்ந்து வியாபாரம் வளர்ச்சி பெறும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி அவசரப் பணிஒன்றை செய்து பாராட்டுப் பெறுவீங்க. இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் வாரம். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி அல்லது அட்லீஸ்ட் ஒரு படி முன்னேற்றம் கிடைக்கும். முக்கியமான பிரச்சினை ஒன்றில், நல்ல முடிவெடுப்பீங்க. அதனால பாராட்டுக் கெடைக்கும். சிக்கலான ஒரு விஷயத்திலும் குழப்பம் இல்லாமல் சட்டென்று ஒரு முடிவு எடுப்பதன்மூலம் உங்களுக்கும் பணியிடத்துக்கும் நிம்மதியும் பெருமையும் உண்டாகும். உடன்பிறப்புகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் வாரம். நீண்டகாலமா ஏங்கிக் காத்துக்கிட்டிருந்த ஆசை ஒண்ணு நிறைவேறும். இந்த வாரம் திங்கட்கிழமை, சிவபெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள்

கடகம்

வழக்குகள் சாதகமாகும். சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். இந்த வாரம் வீட்டுக்குத் தேவையான பொருள் ஒண்ணு வாங்குவீங்க. ஃபேமிலில மேரேஜ் தொடர்பான முயற்சி கைகூடும் ரிலேடிவ்ஸும், நண்பர்களும் தக்க சமயத்தில் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள், அலுவலக ரகசியங்களை கவனமாகப் பாதுகாப்பது அவசியம். வீட்டில் கூட வந்து ஆபீஸ் விஷயங்கள் எதையும் பேசிடாதீங்க. தொழில் செய்யறவங்க, வாடிக்கையாளரின் பாராட்டைப் பெறுவீங்க. குடும்பத்தில் அமைதி நிலவும். குலதெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்துடன் செல்ல திட்டமிடுவீங்க. தொழில் செய்யறவங்க, புதிய முறைகளைக் கையாண்டு வாடிக்கையாளரை திருப்திப்படுத்துவீங்க. ஆரோக்யத்தை ரொம்பவும் கேர்ஃபுல்லா… வைரக்கல் மாதிரி காப்பாத்துங்க. இல்லத் தலைவியின் சாமர்த்தியத்தால், அருமையா சீராக நடைபெறும். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரியனுக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.

சிம்மம்

கொடுக்கல் வாங்கலில் கேர்ஃபுல்லா இருக்கறது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். நண்பர்கள் உங்களுக்கு எதிராக செயல்படறதா நீங்களா கற்பனை செய்துக்கிட்டீங்க இல்லையா? அதனால ஏற்பட்ட மன இறுக்கத்தை அவரே விளக்கமளித்து நீக்குவார். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் வாரம். தொழில் ரீதியாக விலகிச் சென்ற கூட்டாளிகள் மீண்டும் வந்து சேரலாம். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். வாங்கல்- கொடுக்கல்கள் ஒழுங்காகும். பூர்வீக சொத்துக்களைப் பெற, பெரியவங்களின் உதவியை நாடுவீங்க. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெற்று வெளியிடங்களுக்கு மாறுதலாக வாய்ப்புள்ளது. தொழில் சீராக நடை பெற்றுவரும். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் தனவரவு இருக்கும். தடைபட்டிருந்த சுபகாரியங்களை நடத்த முயற்சிப்பீங்க. இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள்.

கன்னி

சிலருக்கு மேரேஜும் கைகூடும். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிக்க வேண்டியிருக்கும் ஆனால் படிச்சா பலன் சூப்பரா இருக்கும். இந்த வாரம் எதிர்பார்க்காத சில நன்மைகள் ஏற்படும். சுப காரணங்களுக்காக திடீர்னு பணத்தேவை உண்டாகலாம். முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். வீண் விவாதங்களால் அடுத்தவர்களுடன் ஏற்பட்டிருந்த தகராறு நல்ல முறையில தீர்ந்து அப்பாடான்னு நிம்மதி வரும். வீட்லயும் கணக்கு வழக்குப் பிரச்னை சரியாகும். உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்து உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய வாரம். பிள்ளைங்களோட நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீங்க. பாதியில் நின்னுக்கிட்டிருந்த கட்டடப்பணியை மீதியும் தொடருவீங்க. நீங்க செய்யும் காரியங்களுக்கு, நண்பர்களும், உறவினர்களும் சப்போர்ட் செய்வாங்க. இந்த வாரம் வெள்ளிக்கிழமை,துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.

துலாம்

குழந்தைங்க கிட்டேயிருந்தும் குடும்ப உறுப்பினர்கள் கிட்டேயிருந்தும் சந்தோஷமான செய்திகள் வரும். உத்தியோகத்தில், உயரதிகாரியின் அறிவுரைப்படி புதிய பணியை செய்து அவங்களோட பாராட்டை வாங்கிடுவீங்க. தொழிலில் ஈடுபடுபவர்கள், முன்னேற்றம் அடைய சில காலம் பொறுமையாக இருப்பது அவசியம். வீட்ல சுப காரியங்களுக்கு செலவு செய்ய நேரிடும். பட்.. சந்தோஷமான செலவுதான். பணிகளில் கவனக்குறைவாக இருந்து, உயரதிகாரிகளின் கேள்விக்கு ஆளாயிக்கிட்டிருந்த நெலமை மாறி கேர்ஃபுல்லா வேலை பார்க்க ஆரம்பிப்பீங்க. தொழில் செய்யறவங்க, வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்து அவங்களோட நன்மதிப்புக்கு ஆளாவீங்க. குடும்ப உறவுகளிடையே சிறுசிறு சலசலப்புகள் அது பாட்டுக்குத் தோன்றி மறையும். ஜஸ்ட் இக்னோர் செய்துடுங்க. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, நவக்கிரக சன்னிதியில் உள்ள அங்காரகனுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.

விருச்சிகம்

முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்கள் கல்வி மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்றைய வாரம் நல்ல வாரமாக ஆகும். சொந்தத் தொழிலில் உள்ளவங்க சுயதொழில் ஆதாயம் பெறுவர். பிரயாணங்கள் ஏற்பட சான்ஸ் இருக்கு. வாகன வகையில் மற்றும் சொத்து சார்ந்த வகையில் வரவும் காரிய வெற்றியும் ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. கலைதுறையில் உள்ளவங்களுக்கு சாதகமான வாரமாக இருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரமாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை நல்லா இருக்கும். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் முன்னேற்றம் காண சூழ்நிலைகள் உண்டாகும். நீண்டகால முதலீடுகளைப் பற்றி சிந்திப்பீங்க. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற காரியங்களில் வெற்றி அடைவீங்க. பட் எதையும் நல்லா யோசிச்சு செய்ங்க. முக்கியமா வேலை மாறுவது பத்தி ரொம்பவே கவனமா டிஸைட் செய்ங்க. இந்த வாரம் புதன் கிழமை விஷ்ணுவுக்கு நெய் விளக்கு ஏத்துங்க.

தனுசு

குடும்பத்துல ஒற்றுமை இருக்கும். லேடீஸ்க்கு ஆபரணச் சேர்க்கை உண்டு. கணவன் மனைவி உறவு நல்லாவே இருந்துவரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி ஏற்பட வாய்ப்பு உண்டு. கோபத்தை கொறைச்சுக்கிட்டு குணத்தை அதிகப்படுத்துவது நல்லது. புது தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்துல இருக்கறவங்களுக்கு நல்ல வாரமாக அமையும். பணிச்சுமை ஏற்பட்டாலும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நல்ல பெயரை சம்பாதிப்பீங்க. எடுக்கும் முயற்சிகளில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் நல்லபடியா பிளான் செய்து நிறைவேற்றும் வேலைகளில் வெற்றி கிடைக்கும் முதியோர்களுக்கு ஆரோக்யம் சிறு தொல்லையா இருந்தாலும் பெரிய அளவில் கவலைப்பட எதுவும் இல்லை. இந்த வாரம் சனிக்கிழமை பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சாற்றி விளக்கேற்றுங்கள்.

சந்திராஷ்டமம்: மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க.

மகரம்

எடுக்கின்ற காரியங்கள் வெற்றியடையும் தொழில் முயற்சிகள் சுபமாக முடியும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்லதொரு வாரமாக இருக்கும். சுபச் செலவுகளை பற்றி சிந்திப்பீங்க. வாகன வகையில் ஆதாயம் உண்டு. உடல் நலம் சீராக இருந்துவரும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி மேம்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பயணத்தால் ஆதாயம் உண்டாகும் வீட்டில் உள்ள முதியவர்களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.பூ ர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும். வழக்கு போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வெற்றி நிச்சயம். நண்பர்கள் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டு. ஒரு சிலருக்கு பற்றாக்குறை இருந்து வந்தாலும் சமாளிக்கும் விதமாகவும் எதையும் எதிர் நோக்கும் விதமாகவும் மனதைரியமும் சூழ்நிலையும் அமையும். வெற்றி நிச்சயம். இந்த வாரம் சனிக்கிழமை நவகிரகத்துக்கு எள் கலந்த நல்லெண்ணை விளக்கு ஏத்துங்க.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 4 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க.

கும்பம்

உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்களுக்கு இழுபறியாக இருந்துக்கிட்டிருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் ரொம்பவே கவனமுடன் படிப்பது நல்லது சொல்லைச் செயலாக்கிக் காட்டி வெற்றியால நிமிர்ந்து நிக்கப்போகிற வாரம். துணிவும், தன்னம்பிக்கையும் இன்கிரீஸ் ஆகும். பட் வாய்ச்சவடாலா எதையும் பேசிடாதீங்கப்பா. எதிர்பார்த்த சலுகைகள் எளிதில் கிடைக்கும். உறவினர்களால் நன்மை ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நண்பர்களின் ஆதரவோடு, பொருளாதார வளர்ச்சி பெற்று மகிழ்வீங்க. உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் கிடைக்கும் புதிய பொறுப்புகளால் பெருமிதம் அடைவீங்க. தொழில் செய்பவர்களுக்கு, அந்தத் துறையில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அன்பும், அமைதியும் இருக்கும். சுபகாரிய முயற்சி வெற்றிபெறும். இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிடுங்கள்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 6 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க.

மீனம்

இது நல்ல வாரமாக அமையும். சுபச் செலவுகள் நடக்கும் வாரமா இருக்கும். சுப காரியங்கள் தொடர்பான மகிழ்ச்சி நிலவும். உடன் பிறந்தவங்க புது சொத்துக்கள் வாங்கறது பற்றியும், வாகனங்கள் வாங்கறது பத்தியும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் நிகழ சான்ஸ் இருக்குங்க. கொடுக்கல் வாங்கல் சுலபமா இருக்கும் சொத்துக்களை விற்பது அல்லது வாங்குவது சம்பந்தமான ஆதாயம் இருக்கும். பட் அதை… அவசரமில்லாம செய்யணுங்க. மாணவர்களுக்கு கல்வி சிறப்பா இருக்கும். ஆபீஸ்லயும் பப்ளிக் .. மற்றும் சோஷியல் (சமூக) செயல்பாடுகள்லயும் மகிழ்ச்சி நிலவும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலம் சீராக இருந்துவரும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆக்கமான வாரமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சூப்பரா இருக்கும். இந்த வாரம் சனிக்கிழமை பிள்ளையாருக்கு விளக்கேத்தி வழிபடுங்க.