மேஷம்

எதிலும் முன்னேற்றம் காணப்படும்.உடல் ஆரோக்கியம் பெறும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்னை குறையும். பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காணாமல் போயிடுங்க. வெளிநாடு வேலைக்கு முயற்சி பண்ணினீங்களே. சக்ஸஸ். மகன் அல்லது மகளுக்குத் திருமணம் நடைபெறும், அவங்களுக்குப் பாப்பா பிறக்க வாய்ப்புள்ளது. அரசு வேலைக்கு முயற்சி பண்ணுங்க. கிடைக்கும். நல்லதே நடக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. யெஸ். குட் டைம்

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 11 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கேர்ஃபுல்லாவும் முன்யோசனையுடனும் இருங்க.

ரிஷபம்

நல்லவங்களைக் கலந்தாலோசிச்சு டிஸைட் பண்ணி சீக்கிரம் ஸ்டார்ட் செய்ங்கப்பா. நீங்க புத்திசாலிகள் என்பதால் பிரச்சினைக்குள் போய்ச் சிக்கிக்கொள்ள மாட்டீங்க. நல்ல வேலைவாய்ப்பபு கிடைக்கும். வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகள் உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும் காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடைபெறும். பொருள் வரத்து கூடும்.கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீங்க. புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். ஆன்மீக நாட்டமும், மன தைரியமும் உற்சாகத்தை கொடுக்கும். காலேஜ் மற்றும் ஸ்கூல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற தடைகளை தாண்டி படிக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனைபடி செயல்படுவது நல்லது. தட் இஸ் பெட்டர்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 13 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கேர்ஃபுல்லாவும் முன்யோசனையுடனும் இருங்க.

மிதுனம்

மேரேஜ் ஆகி பாப்பாவுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கறவங்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். கைவசம் பணப்புழக்கம் அதிகமாகும். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். அதிக வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் பொழுது போக்கு அம்சங்களை கொஞ்சம் தியாகம் பண்ணுங்க. எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்பை பெறுவீங்க. குடும்பத்தில் சுபகாரியங்கள் கொண்டாட்டங்கள் இருக்கும். என்ஜாய்.

கடகம்

கவலையைவிடுங்கப்பா. நல்லதே நடக்கும். அலுவலகத்தில் உங்களை அடிச்சுக் கேட்டால்கூட யாரைப் பற்றியும் கோள் எதுவும் சொல்லாதீங்கம்மா. ஒங்களோட மனதில் நீங்கள் எவ்வளவு அன்பானவர் என்று உங்களுக்கே தெரியும் அதை மற்றவர்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்தினால் குறைஞ்சா போயிடுவீங்க? கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்க பெறுவீங்க. பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பர். கலைத்துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவர். காலேஜ் மற்றும் ஸ்கூல் படிக்கும் மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் மூலம் கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வெரி குட்.

சிம்மம்

உங்களுக்குள்ள சின்ன பயம் இருந்தாலும் தைரியத்தோடு எதையும் செய்து முடிப்பீங்க. ஸ்டூடன்ட்ஸ்க்கு சூப்பரான வாரம் இது. நல்லாப் படித்து தேர்வுகளை எழுதுவீங்க. வண்டி வாகனத்தில் போகும் போது கேர்ஃபுல்லாப் போங்க ப்ளீஸ்! நல்லதே நடக்கும். டவுட் வேணாம். இந்த வாரம் கூடுமானவரை இடம் மாற்றம் எதுவும் வேணாம்ங்க. புதிய பிசினஸ் செய்வதானால் கொஞ்சமே கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவர். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். ஆர் யூ ஹாப்பி?

கன்னி

கணவன் மனைவி மற்றும் ஃபேமிலி உறவுல சந்தோஷங்கள் அதிகமாகும். அப்பப்ப சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் டோன்ட் ஒர்ரி. உடனுக்குடன் சரியாகி, சமாதானமாகி உங்களுக்கிடையே உள்ள நெருக்கம் அதிகமாக்கும். பேச்சில் கேர்ஃபுல்லா இருங்க. பகலில் பக்கம் பார்த்து பேசுங்க இரவில் அதுவும் பேச வேண்டாம். சுருங்கச் சொன்னால் யார் கிட்டயும் எதுவும் வம்பு வெச்சுக்க வேணாம். ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீங்க. அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும்.மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பர். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். யூ வில் பி ஹாப்பி.

துலாம்

காரியங்களில் தாமதமான போக்கு இருந்தாலும் என்னங்க? சக்ஸஸ் காணப்படும். ஒங்களோட வார்த்தைக்கு வெளிவட்டாரத்திலயும் சொஸைட்டிலயும் மதிப்பு அதிகரிக்கும். யார்கிட்ட எது பேசினாலும் கொஞ்சம் அளவுடன் பேசுவது நல்லது. டிராவல் செய்யும்போது உங்க உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனமாயிருங்க. தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். உத்யோகத்தில் உள்ளவங்க மேல் அதிகாரிகளிடம் செம்ம பாராட்டு வாங்கிப் பெருமிதப்படுவீங்க. வீட்டில் விருந்தாளிங்க வந்து போவாங்க. ஏதாச்சும் ரிசப்ஷன் அல்லது ஃபங்கஷன்.. பார்ட்டிங்களுக்குப் போய் ஜாலியா என்ஜாய் செய்வீங்க. ரொம்ப மன நிறைவோட இருப்பீங்க. அரசு தேர்வுகள் எழுதலாம். ஒங்களோட வீட்டில் நெருங்கிய உறவினர் ஒருவர் நிறைய லாபத்தைப் பெற்றுத் தருவார். இந்த வாரத்துல அதிர்ஷ்டம் அதிகமாகும். யெஸ். யூ வில் பி லக்கி.

விருச்சிகம்

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவாங்க. வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாகன சேர்க்கை ஏற்படும். தங்க, வெள்ளி பொருட்கள் வாங்குவீங்க. தன வரவு திருப்தி தரும். தம்பதியரிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். குழந்தைகள் வழியில் கூடுதல் செலவுகள் இருக்கும். பெற்றோரின் உடல் நிலை திருப்தி தரும். மனோதிடம் மிக்கவர்கள்னு மத்தவங்க உங்களைப் பாராட்டுவதற்குப் பொருத்தமாகத்தான் நடந்துக்குவீங்க. பட்.. உள்ளுக்குள்ள பயந்துகிட்டிருப்பது உங்களுக்குத்தானே தெரியும். மெல்ல மெல்ல உங்களோ கஷ்டங்கள் ஒங்களைவிட்டு விலகிக்கிட்டே இருக்குங்க. பிலீவ் மீ. காலேஜ் மற்றும் ஸ்கூல் படிக்கும் மாணவர்களுக்குப் பழைய பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். ரிலாக்ஸ். ரிலாக்ஸ்.

தனுசு

உறவினர்களுடன் அல்லது மிக நெருங்கிய நண்பர்களுடன் ஜாலியா டூர் (இன்பச்சுற்றுலா) செல்ல வாய்ப்பு உள்ளது. ஏதாவது ஒரு வகையில் நன்மை நடைபெறும். மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். தொழிலில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். பல நாளா இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்களும் மன வருத்தங்களும் உடல் உபாதைங்களும் படிப்படியாக் காணாம போயிடுங்க. தாங்க் காட்.

மகரம்

உங்களுக்கு எந்த வயசானாலும், புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டி வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். எனவே அதில் டயர்ட் ஆக மாட்டீங்க. இத்தனைகாலம் இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீங்க. புதிய வீடு பொலிவுடன் ரெடியாகும். எல்லா விஷயங்களுமே கொஞ்சம் தடை தாமதங்களோடதான் நடக்கும்னாலும் … நல்லபடியா முடிவுக்கு வந்து வயிற்றில் பாலை வார்க்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். பெண்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசிப்பது நல்லது.பொறுப்புகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவர். வாகன யோகம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். கங்கிராஜுலேஷன்ஸ்.

கும்பம்

காலேஜ் மற்றும் ஸ்கூல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லதுங்க. எதையும் நல்லா யோசிச்சு.. ஆராய்ஞ்சு, பிறகு முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். நண்பர்களையும் உறவினர்களையும் அழைச்சு விருந்து தருவீங்க. குடும்பத்தில் உள்ள பெரியவங்களை நல்லமுறையில் நடத்தி நல்ல பெயர் எடுப்பதோடு ஆசீர்வாதமும் கிடைக்குங்க. கொஞ்சம் காசு சேமிச்சு வெச்சு நிம்மதியாவீங்க. வெரி மச் .

மீனம்

உறவினர்களால் பொருள் வரவு அல்லது ஹெல்ப் கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவீங்க. குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும். ஏற்படாமலேயே காப்பது உங்க சாமர்த்தியம். கண்,பல்,சார்ந்த பிரச்சினைகள் வந்தாலும் தகுந்த ட்ரீட்மென்ட் எடுத்து சரியாகிவிடும். டென்ஷனை குறைங்கப்பா. எதுக்காகத் தேவையே இல்லாமல் குரலை உயர்த்தறீங்க. காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க. தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. ப்ளீஸ் அட்ஜஸ்ட்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 9 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கேர்ஃபுல்லாவும் முன்யோசனையுடனும் இருங்க.