மேஷம்
போட்டிகளை துவம்சம் செய்ய தொடை தட்டி நிற்பீர்கள். துணிச்சலுடன் வியாபாரத்திற்குத் தேவையான முதலீடுகளை செய்வீங்க. நினைத்த காரியத்தில் வெற்றி பெறுவீங்க. புதிய வேலை சான்ஸ்கள் வீடு தேடி வரும். எந்த விஷயத்திலும் நியாயம் தவறக் கூடாது என்று நினைப்பீர்கள். கோபத்தைக் கட்டுப்படுத்தணுங்க. இறைவனருள் உங்களுக்குப் பக்கத் துணையாக இருக்கும். வெடுக்கென்று பேசி மத்தவங்க மனசைப் புண்படுத்திடாதீங்க. அவங்க பெரிசா ரியாக்ட் செய்துட மாட்டாங்க. பிரச்சினையோ சண்டையோ வராதுதான். ஆனா நீங்க நினைச்சு நினைச்சு வருத்தப்படக்கூடாதில்லையா? சட்டென்று அவசரமாக முடிவுகள் எடுக்க வேணாங்க. குறிப்பாக வீடு வாங்குவது.. கல்யாணம் போன்ற பெரிய விஷயங்களில் யோசனையுடன் செயல்படுங்க. நன்மை கருதுபவர்களின் அட்வைஸ் கேளுங்க.
ரிஷபம்
தெளிவான சிந்தனையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீங்க. சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீங்க. குடும்பத்துல ஒருவருக்கு நல்ல வரன் அமையும். தொழில்துறைகள் முன்னேற்றமாக நடந்து பண வரவு அதிகரிக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் ஆர்வமுடன் ஈடுபடுவீங்க. மற்றவர் குடும்பத்துல தேவையில்லாத சிக்கலை உண்டாக்காதீங்க. சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைத்து தேவையைப் பூர்த்தி செய்யும். நல்ல நண்பர்கள் ஏராளமான நன்மைகள் செய்வாங்க. பகைவர்கள் மனசு மாறி உங்க அருமை உணர்ந்து மனசார மன்னிப்புக் கேட்பாங்க. தாராளமாக மன்னிக்கலாம். நம்பி ஏற்கலாம்ங்க. சகோதர சகோதரிகள் ஒரு நாளைக்கு நடந்துக்கிட்டா மாதிரி மறு நாள் நடந்துக்க மாட்டாங்க. கவனமா இருங்க. ஆனாலும் நீங்க நீங்களாவே இருங்க. உணர்வாங்க. சின்னச்சின்ன உடல் உபாதைகள் ஏற்படும். மெல்லமெல்லத்தான் சரியாகும். செலவுகள் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
மிதுனம்
எந்தச் செயலையும் ஒரு தடவைக்கு இரு தடவை யோசித்துச் செய்யுங்கள். தொழில் தொடர்பான வியாபாரத்திலிருந்த தடைகள் விலகி ஓடும். எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீங்க. வேலை இடத்தில் ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிரச்சனைகளைப் பெரிதாக எண்ணாமல் லேசாக எடுத்துக் கொள்ளுங்கள். அதிக டென்சன் வேணாமே. சதுரங்க விளையாட்டை போல் சாகசமாக காரியம் ஆற்றுவீங்க. புதிய தொழில்களில் முதலீடு செய்வீங்க. எல்லாத்தையும் நல்லா, கவனமாத் திட்டமிட்டுத்தான் செய்யறீங்க. பட் எதிலுமே அவசரம் வேண்டாம். பேச்சினால் நன்மைகள் உண்டாகும். கொஞ்சம் ஆரோக்யம் கண்ணாமூச்சி காட்டும். கவனமாயிருங்க. பெரிசாய் சர்ஜரி அது இதுன்ன ஆகாது.. பயம் வேண்டாம். நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிடும்படியாக வரலாம். கண் டெஸ்ட் செய்யணும்னா கண்டிப்பா செய்துக்குங்க.
கடகம்
வெளியூர்ப் பயணங்கள் சாதகமாக அமையும். நிலையான வருமானத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வீங்க ஆடை அணிமணிகள் மட்டுமல்லாமல் நகையும் வாங்குவீங்க. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். ஆலயங்களுக்குச் சென்று தெய்வ தரிசனம் செய்வீங்க. வெளிநாட்டுலேயிருந்து நல்ல செய்தி வரும். சுத்தமும் சுகாதாரமுமாய் உடம்பை வைச்சுக்குங்க. லேடீஸ்க்கு மாதாந்திரப் பிரச்சினை சம்பந்தமான சின்ன சின்ன உபாதைகள் ஏற்பட சான்ஸ் இருக்கு. நீடித்த பிரச்சினையாய் எந்த ஆரோக்யக் குறைபாடுமே இருக்காது. ஒங்களோடகணவரின்/ மனைவியின் புத்திசாலித்தனம் காரணமாக அவருக்கு அலுவலகத்தில் புகழும் உங்களுக்குக் குடும்ப சர்க்கிளில் நன்மைகளும் உண்டு. புகழும் பெருமையும் வெற்றியும் அடைவீங்க.
சிம்மம்
எதிர்ப்புகளை புத்திசாலித்தனத்தால் முறியடித்து வெற்றி காண்பீங்க. வெறுப்புகளை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு. பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள் நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். குடும்பத்திலிருந்த பிரச்சனைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். கட்டுமானத் தொழில் சூடு பிடிக்கும். வியாபாரத்தில் லாபம் கொழிக்கும். பணியில் இருக்கறவங்களுக்கு சம்பளம் இன்கிரீஸ் ஆகும். சிக்கலான காரியங்களைப் புத்திசாலித்தனத்தால் வெற்றிகரமா முடிப்பீர்கள். சின்னச்சின்ன அஜீரணப் பிரச்சினைகளைப் பற்றி ஒரேயடியாய்ப் பயந்து டென்ஷன் ஆகி வெக்காதீங்க. மனம் நிறைந்த மண வாழ்வு அமையும். நீங்க எதிர்பார்த்ததெல்லாம் நல்லபடியா நிறைவேறும். குழந்தைங்களைப் பற்றி இருந்து வந்த டென்ஷன்கள் அகலும்.
கன்னி
தாய் மாமனுக்கு உதவி செய்வீங்க. உறவினர்களை ஒன்று சேர்ப்பீர்கள். அரசு வேலை சான்ஸ் சாதகமாக இருக்கும். உத்தியோக உயர்வு உண்டாகலாம். தனியார் துறையிலும் ஊழியர்கள் சிறப்பாகப் பணியாற்றுவாங்க. வாழ்க்கை கிளுகிளுப்பாக இருக்கும். மனதுக்குப் பிடித்தமானவருடன் நெருக்கம் அதிகரிக்கும். திருமண காரியங்கள் கைகூடிவரும். தந்தையார் உடல்நிலையில் சற்று அக்கறை காட்டுங்க. அடேயப்பா.. எத்தனை விதமான வரும்படிகள்.. லாபங்கள்.. நன்மைகள்… மகிழ்ச்சிகள்? என்றைக்கோ கொடுத்த கடன்கள் நீங்க கேட்காமலேயே உங்க வீட்டு வாசல்ல வந்து காலிங்பெல் அடிக்கும். அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய தொகை பல கால காத்திருப்புக்குப்பிறகு ஏராளமான முயற்சிகளுக்குப் பிறகு இப்போ உங்களை வந்தடையும். குடும்பத்துல பிரிஞ்சு போனவங்களும் சண்டை போட்டவங்களும் ஒண்ணாச் சேரப்போறாங்க.
துலாம்
திட்டம் போட்டு செலவு செய்வீங்க. கெட்டிக்காரத்தனமாக இல்லாவிட்டால் பெட்டியில் இருக்கும் பணம் காணாமல் போகும். வெளியூர்ப் பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து கிடைக்க வேண்டிய உதவிகள் தடையில்லாமல் வந்து சேரும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சாதகமாக இருக்கும். பங்குச்சந்தை வியாபாரத்தில் நம்பி முதலீடு செய்யலாம். யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. வார்த்தைகளில் வசந்தம் வீசுவதால் எல்லாருக்கும் உங்களைப் பிடிக்க ஆரம்பிக்கும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையா இருங்கள். ஆன்மீகப் பெரியவர்கள் சந்திப்பு கிடைக்கும். கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவீங்க பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். புதிய வீடு வாங்குவதற்கான சிந்தனை உண்டாகும். வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் இறங்குவீங்க. தக்க சமயத்தில் உறவினர்களுக்கு உதவி செய்வீங்க.
விருச்சிகம்
கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையா இருக்கணுங்க. நீண்டதூரப் பயணங்களால் செலவு அதிகரிக்கும். அவசரப்பட்டு காரியத்தில் இறங்காமல் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யுங்கள். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பல வகை செலவுகள் வருதேன்னு டென்ஷன் ஆகாதீங்க. பல செலவுகளை ஜாலியாத்தானே செய்யறீங்க? மேலும் செலவுக்கேத்த வருமானம் வருதில்லையா? பின்ன என்ன? அது மட்டுமா என்ன? திடீர் அதிருஷ்ட வாய்ப்பெல்லாம் வந்து உங்களை மகிழ்ச்சிக்கடலில் திக்குமுக்காட வைக்கும். நிறைய நண்பர்கள் புதுசு புதுசாச் சேருவாங்க. பழைய பகைவர்கள்கூட வெள்ளைக்கொடி காட்டி நட்புக்கரம் நீட்டுவாங்க. சேர்த்துக்குங்க. எனினும் சற்று ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பது நல்லதுங்க. ஏற்கனவே பலரிடம் பட்டுட்டீங்க. போதாதா? லோன் போட இது நேரம் இல்லை.
சந்திராஷ்டமம் : ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை
தனுசு
பிள்ளைகள் விஷயத்தில் நீங்க எடுக்கும் முயற்சிகளுக்கு அரசாங்க உதவி கிடைக்கும். தொழிலுக்குப் போட்டிகள் அதிகரித்தாலும் பெரிய கெடுதல் வராது தேவையில்லாத வார்த்தைகளைப் பேசக்கூடாது. தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டிகள் தோன்றி மறையும். பல காலம் வசூலாகாத தொகையெல்லாம் வரும். ரொம்பவும் திடீர் செலவும் உண்டு. கவனமாய்… தயாராய் இருங்க. ஒரே சமயத்தில் பல விஷயங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். சாப்பிட தூங்க நேரம் ஒதுக்கிக்குங்க. சொல்லிட்டேன். அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒரு பக்கமும்.. விசா பாஸ்போர்ட் போன்ற வெளிநாட்டு வேலைகள் இன்னொரு பக்கமும்… கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள் மறுபக்கமும்.. திருமணம் காதல் போன்றவை மற்றொரு பக்கமும்.. உங்களைப் பிடிச்சு இழுக்கும். எந்தப் பக்கம் திரும்புவது என்ற குழப்பமெல்லாம் இல்லாமல் அழகாய்த் திட்டமிட்டு செய்ய உங்களுக்கா சொல்லிக்கொடுக்கணும். ஜமாயுங்க.
சந்திராஷ்டமம் : ஜனவரி 7 முதல் ஜனவரி 10 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை
மகரம்
நீங்க எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். பெண்களுக்கு இருந்த மனப்பாரம் குறையும். கலைத்துறையினர் புதிய படைப்புகளை வெளிக்கொண்டு வருவாங்க. ஆன்லைன் வர்த்தகங்கள் சாதகமாக அமையும். புதிய தொழில்களில் முதலீடு செய்யலாம். வியாபாரம் முன்னேற்றகரமாக இருக்கும். கடல் கடந்து செல்ல வேண்டிய சான்ஸ் ஏற்படும். நெறைய முயற்சி எடுத்து முட்டுக்கட்டைங்களைத் தகர்த்து எறிவீங்க. குடும்பத்துல ஒரு கெட் டு கெதர்.. அல்லது திருமணம் வந்து எல்லாரும் மீட் செய்யப்போறீங்க. நிறையப் பகைகளும் சண்டைகளும் ஒரு முடிவுக்கு வரும். நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். யாரையோ வழியனுப்ப ஏர்போர்ட் போவீங்க. உங்களுக்கு ஒரிஜினலாவே ஒரு புத்திசாலித்தனம் உண்டல்லவா? அது இப்போ மேலும் ஷைன் ஆவதற்கான சான்ஸ்கள் அதிகரிக்கும். திடீர்னு வருமானமும் லாபமும் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் : ஜனவரி 10 முதல் ஜனவரி 12 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை
கும்பம்
சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெற்றி பெறுவீங்க. வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து விடுவீங்க. புதிய பதவி மட்டுமல்லாமல் புதிய பொறுப்புகளை ஏற்க நேரிடும். அதிகாரிங்ககொடுத்த வேலையை முடித்து நன்மதிப்புக்கு ஆளாவீங்க. அடுத்தவர் பேச்சை எளிதில் நம்பி விடாதீங்க. கூட இருந்தே குழி பறிக்கும் நபர்களை அடையாளம் கண்டு ஒதுங்குங்கள். வேலையில் இருப்பவர்கள் மிகுந்த அனுகூலம் அடைவாங்க. சகோதர சகோதரிங்க கிட்ட சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்டாலும் அட்ஜஸ்ட் ஆயிடும். அவங்களுக்கு உங்க உதவி தேவையா இருக்கும். ஜமாய்ச்சு நல்ல பெயர் எடுத்துடுவீங்க. டாடிக்கு நிறைய நன்மைகளும் சில பிரச்சினைகளும் ஏற்படும். பயப்படாதீங்க. சமாளிச்சுடுவாரு. அபரிமிதமாய் ஒரு கோவம் வருது பாருங்க. அதைக்கொஞ்சம் கட்டுப்படுத்திக்குங்க. குறிப்பா உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டாங்களே.. அவங்ககிட்ட கோபதாபமெல்லாம் வேணாங்க.
மீனம்
தடைபட்ட திருமணம் நடக்கும். குழந்தை இல்லாத வீட்டில் மழலைப் பாக்கியம் உண்டாகும். தொழில்துறைகள் வேகம் எடுத்தாலும் கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் உருவாகும். வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். குடும்பத்துல எந்தக் காரணத்தை கொண்டும் கோபத்தைக் காட்டாதீங்க. கொடுத்த வாக்கைக் காத்து நிம்மதியடைவீங்க. அனுபவப் பூர்வமான அறிவுத்திறன் உங்களுக்குக் கை குடுக்கும். அம்மாவுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். அம்மா வழி உறவினர்களைச் சந்திக்க சான்ஸ் ஏற்படுத்தும்படியான விசேஷங்கள் நிகழும். அவங்க அரசாங்க உத்யோகத்தில் இருக்கறவங்க என்றால் அவங்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். பல விதமான கல்விகளில் உங்களை ஈடுபடுத்திப்பீங்க. இப்போது ஈடுபடும் தேர்வுகள் அனைத்திலும் நல்ல ரிசல்ட் உறுதியா வருங்க. சகோதர சகோதரிகளுடன் சந்தோஷமாய்ப் பொழுது போகும். வெளியூர் அல்லது வெளிநாடு போவீங்க…