வார ராசிபலன்: 14.05.2021 முதல் 20.05.2021 வரை! வேதாகோபாலன்

Must read

மேஷம்

இந்த வாரம் எதிலும் ரொம்ப கேர்ஃபுல்லா ஈடுபடுங்க. பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில், தெளிவாகச் சிந்தித்து எதையும் வெற்றிகரமாகச் சாதிப்பீங்க. புதிய பதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தைச் சமாளிக்க வேண்டி வரலாம். அரசு விவகாரங்களில் சற்றுக் கேர்ஃபுல்லா செயல்படுவது அவசியம். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடும் போது கவனமாக இருக்கணுங்க. லேடீஸ்க்கு, காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த ஹெல்ப் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ், தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டுப் படிப்பது எதிர்காலத்துக்கு உதவும். திறமையுடன் காரியங்களைச் செய்வீங்க.

ரிஷபம்

இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். எடுக்கற விஷயங்களில் சக்ஸஸ் உண்டாகும். உத்தியோகத்தில் சாமர்த்தியமாக விஷயங்களைக் கையாண்டு நன்மை அடைவீங்க. எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகளின் விருப்பங்கள் நிறைவேறும். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பாங்க. கலைத் துறையினருக்கு, அனைவரிடமும் சுமுகமாக நடந்துகொள்வீங்க. சிறிய நிகழ்ச்சிகள் மனத்துக்கு இதம், மகிழ்ச்சியைத் தரும். லேடீஸ்க்கு, மனச்சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரவு கூடும். ஸ்டூடன்ட்ஸ், விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்வீங்க. உத்தியோகஸ்தர்களுக்கு தள்ளிப்போன நன்மைகள் விரைவாய் நடந்து வியக்க வைக்கும்.  குழந்தைகளின் சிரமங்க விரைந்து தீரும்.

மிதுனம்

இந்த வாரம் எந்தக் கடினமான சூழ்நிலையிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாம பார்த்துக்குங்க. சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவைக் காணலாம். தொழில், பிசினஸ் வலுவாக நடக்கும். உத்தியோகத்தில் கவனமாக இருக்கணுங்க. வேறு வேலைக்கு முயல்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லதுங்க. குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். லேடீஸ்க்கு, சிக்கலான விஷயங்களைக்கூட சுமுகமாக முடித்து விடலாம். கலைத் துறையினருக்கு, நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. அரசியல்வாதிகள் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து தீவிர யோசிச்சு செய்ங்க. ஸ்டூடன்ட்ஸ், புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது தொடர்பான கவலை நீங்கும்.

கடகம்

இந்த வாரம் பணத்தேவை உண்டாகும். பிசினஸ் தொடர்பான கவலை ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கேர்ஃபுல்லாவேலைகளைச் செய்ய வேண்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, அரசு விவகாரங்களில் தலையிடும்போது கவனம் தேவை. கலைத் துறையினருக்கு, சிறிய வாய்ப்புகள், நிகழ்ச்சிகளைக் கூடத் தட்டிக்கழிக்க வேண்டாம். உங்க எதிர்காலத்துக்கு உதவும். லேடீஸ்க்கு, மற்றவர்களுக்கு உதவுவதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி, பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஸ்டூடன்ட்ஸ், சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனத்தில் இடம்பிடிப்பீங்க. கல்வியில் கவனம் அதிகரிக்கும்.

சிம்மம்

இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டும். தொலைதூரத் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் திடீர்ச் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன் பிள்ளைகளிடம் அன்பாகப் பேசிப் பழக வேண்டும். தாய்வழி உறவினர்களிடமிருந்து உதவி உண்டு. அரசியல்வாதிகளுக்கு, சின்னச் சின்ன விசயங்களுக்குக் கூடப் படபடப்பாவீங்க. கலைத் துறையினருக்கு, விட்டுக் கொடுத்து காரியங்களைச் சாதிப்பீங்க. லேடீஸ்க்கு, மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும்போதும், மின் சாதனங்களை இயக்கும்போதும் கவனம் தேவை. ஸ்டூடன்ட்ஸ், கல்வி பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

கன்னி

இந்த வாரம் குருவின் நேரடிப் பார்வையால் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். மனக்குறை இருக்கும். புதிய நபர்கள், எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் கவனமாகப் பேசிப் பழக வேண்டும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கியை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இழுபறியான காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீங்க. பணி நிமித்தமான அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். குழந்தைகளால் மனநிம்மதி கிடைக்கும். லேடீஸ்க்கு, எதைப் பற்றியாவது நினைத்துக் கவலைப்படுவீங்க. கலைத் துறையினருக்கு, மற்றவர்களுக்கு உதவப்போய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். அரசியல்வாதிகள், சிறிய வேலையையும் கூடுதலாகச் சிரத்தையெடுத்துச் செய்ய வேண்டி இருக்கும்.

துலாம்

இந்த வாரம் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாகும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தைரியம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். உறவினரிடமிருந்து ஹெல்ப் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண் டும். கலைத் துறையினருக்கு, தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடுதல் வேண்டாம். லேடீஸ்க்கு, முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங் களைச் செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். ஸ்டூடன்ட்ஸ், கூடுதலாகப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மனம் தளராமல் செயல்பட்டால் வெற்றி உண்டு. ஸ்டூடன்ட்ஸ்  வெற்றிபெறத் திட்டமிட்டுப் படிக்க முற்படுவீங்க.

விருச்சிகம்

இந்த வாரம் உடல் அசதி நீங்கும். கவலைகள் அகலும். திட்டமிட்டுச் செயலாற்றுவதில் இருந்த தயக்க நிலை மாறும். பின்னடைவு ஏற்படலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். பயணங்களில் தடங்கல் அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீங்க. உத்தியோகத்தில் வேலைப்பளுவை உணர்வீங்க. மேலதிகாரிகள், உங்க செயல்களில் குறை காணலாம். சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்த தடைகள் அகலும். லேடீஸ்க்கு, காரியங்களில் நன்மை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, செயற்கரிய செயல்களைச் செய்வீங்க. கலைத் துறையினர் வெற்றி வாகை சூடுவீங்க. ஸ்டூடன்ட்ஸ், கல்வியில் இருந்த மெத்தனப்போக்கு மாறும்.

சந்திராஷ்டமம்: மே மாதம் 14 முதல் 17 தேதி வரை 

தனுசு

இந்த வாரம் நெருக்கடியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தள்ளிப்போடுவது நல்லதுங்க. பயணங்களால் வீண் அலைச்சல் இருக்கும். ஆனாலும் பணப்புழக்கம் திருப்தியாக இருக்கும். தொழில், பிசினஸ் சீராக இருக்கும். லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து இதமாகப் பேச வேண்டும். குழந்தைகளின் எதிர்கால நலன் பற்றிச் சிந்திப்பீங்க. உங்களது உடைமைகளில் கவனமாக இருக்கணுங்க. லேடீஸ்க்கு, எந்தக் காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு, முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கலைத் துறையினருக்கு, புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்க செல்வாக்கு உயரும். ஸ்டூடன்ட்ஸ், ஆசிரியர், சக மாணவர்களிடம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போங்க. ப்ளீஸ்.

சந்திராஷ்டமம்: மே மாதம் 17 முதல் 19 தேதி வரை 

மகரம்

இந்த வாரம் தனித்தன்மையுடன் செயலாற்றுவீங்க. உடல்நிலை முன்னேற்றம் பெறும். செலவு கட்டுக்குள் இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாகச் செயல்பட வேண்டும். தொழில், வியாபாரத்தில் பணவரவு நன்றாக இருக்கும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். உறவினர்களுக்காக விருப்பமில்லாத காரியத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். லேடீஸ்க்கு, தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். கலைத் துறையினருக்கு, திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ், கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும்.

சந்திராஷ்டமம்: மே மாதம் 19 முதல் 21 தேதி வரை 

கும்பம்

இந்த வாரம் நெருக்கடியான பிரச்சினைகள் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீங்க. பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றப் பாடுபடுவீங்க. எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். லேடீஸ்க்கு, திட்டமிட்டபடி காரியங்களைச் செய்து முடித்து நிம்மதி அடைவீங்க. அரசியல்வாதிகளுக்கு, அனைவரையும் அரவணைத்துச் செல்வீங்க. கலைத் துறையினருக்கு, அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். ஸ்டூடன்ட்ஸ், கல்வியில் முன்னேற்றம் காண திட்டமிட்டுப் படித்து வெற்றி பெறுவீங்க. மகிழ்ச்சி ஏற்படும்படியான சம்பவங்கள் நிகழும்.

மீனம்

பண விஷயத்தில் ஹெல்ப் கிடைக்கப் பெறுவீங்க. குடும்பத்தில் சுபிட்சமும் ஆனந்தமும் நிலவும். குடும்பத்தில் திருமண வயதில் உள்ளவர்களுக்குத் திருமணம் நிச்சயமாகும். அரசியல்வாதிகளுக்கு, சுமுகமாக அனைவரிடமும் பழகுவீங்க. கலைத் துறையினருக்கு, வீரநடை போட்டு வெற்றியை ருசிப்பீங்க. ஏழைக் கலைஞர்களுக்கு உதவுவீங்க. லேடீஸ்க்கு, சின்ன சின்ன ஹெல்ப் தாராளமாகக் கிடைக்கப் பெறுவீங்க. அத்தியாவசிய வசதிகளுக்குக் குறை இருக்காது. ஸ்டூடன்ட்ஸ், படிப்பில் முன்பு மாதிரி கவனக் குறைவு இருக்காது. சூப்பராய்ப் படிப்பீங்க.  கனவுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீங்க. எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் வீடு தேடி வருவாங்க. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும்

More articles

Latest article