மேஷம்

உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேற வாய்ப்புகள் இல்லை. குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீங்க. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். கணவன் – மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். சண்டைகளும் சஞ்சலங்களும் டாட்டா சொல்லிடும்.  செய்யும் முயற்சிகளில் அவசரம் காட்ட வேண்டாம்.  கொஞ்சம் பொறுமையாவே காலை எடுத்து வைங்க. எதிலும் ஆலோசித்து முடிவெடுப்பதே நல்லதுங்க. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பாங்க. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீங்க. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீங்க. சிந்தனை திறன் பெருகும்

ரிஷபம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வாங்க. நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத் திருந்த இடத்திற்கு சென்று வருவீங்க. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீங்க. உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எது செய்வதானாலும் அனுபவம் வாய்ந்தவங்களின் ஆலோசனைகளைக் கேளுங்க. அல்லது உங்க ஜோசியரைக் கலந்தாலோசியுங்க. நல்லவங்களைப் பகைச்சுக்கறீங்க. வேணாமே. அவங்க வழிகாட்டல் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.. நல்ல வாய்ப்புகள் வந்து கதவை தட்டும். அப்போதென்று பார்த்துத் தூங்கிடாதீங்க. ப்ளிஸ். புதிய திட்டங்கள் தீட்டுவீங்க. உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். ஆடம்பர செலவு களை குறைத்து சேமிக்க தொடங்குவீங்க. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர் களை சந்திப்பீங்க. உத்தியோகத்தில் புதிய உற்சாகத்தை உண்டாக்கும். கனவு நனவாகும்

மிதுனம்

ஞாபக மறதி காரணமாக சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். சமயோசிதமாகவும், பொறுமையாகவும் நடந்துகொண்டு சிக்கல்களைத் தவிர்க்கலாம். தொழில் துறையினர் கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த திருப்தி காண்பது கடினம். வளர்ச்சியில் இருந்த தளர்ச்சி அகலும். ஆனாலும் நிலைமை முழுசா சீராகணும்னா இந்த வருடத்தோட இரண்டாவது பாதியில்தாங்க அது சாத்தியம். கோபத்தைக் கட்டாயமாய்க் கட்டுப்படுத்திக்கணும். பேச்சில் கவனமா இருக்கணும். மாணவ மாணவியர்க்கு பாடங்களில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி  பற்றிய முயற்சிகள் மெல்ல வடிவெடுத்து நல்லபடியாக முடியும். எதிர்கால முன்னேற்றம் பற்றிய  சிந்தனைகள் மனதில் உதயமாகும். இது பிற்கால நன்மைக்கு வழிவகுக்கும்.

கடகம்

குடும்ப நிர்வாகத்தில் குழப்பங்கள் வந்துபோகும். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீங்க. மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவாங்க. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீங்க. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவாங்க. பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுவீங்க. தேவையற்ற சகவாசத்தைத் தவிர்க்கவேண்டியது அவசியம். பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கணவரின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். சிலருக்கு வெளியூர் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீங்க. வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான்.

சிம்மம்

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதையும் எதிர்கொண்டு ஜெயிக்கும் பலம் மனசுக்குக் கிடைக்குமுங்க. தொல்லை தந்தவங்க விலகுவாங்க. பணப்புழக்கம் அதிகரிக்கும். தனித்து இயங்கும் ஆற்றல் உருவாகும். தந்தை வழி உறவில் இருந்த சண்டைகளும் சச்சரவுகளும் காணாமல் போயிடும்.. தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்குமுங்க.  மனக்குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்படும் திறன் காரணமாக வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீங்க. வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்குவீங்க. வேற்றுமதத்தரின் உதவி கிடைக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் இப்பொழுது உங்களை சந்திப்பாங்க. வியாபாரத்தை பெருக்குவீங்க. உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீங்க. புதிய தொழில் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும் பெண்களுக்கு மிகச் சிறந்த நாளாகும்

கன்னி

பிசினஸிலும் .. அலுவலகத்திலும் இருந்தக்கிட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தாராளமாகச் செலவிடும் வாய்ப்பு கைகூடுமளவுக்கு வருமானம் வருமுங்க.. பெரிய பொறுப்புகள் மற்றும் பதவிகளிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும், அதில் சேரக்கூடிய வாய்ப்பு கைகூடும். திருமண தடை அகலும். மம்மியின்  உடல் நலம் சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள்  “பை..பை” சொல்லி ஓடிவிடும். உணர்ச்சி பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக பேசுவீங்க. செயல்படுவீங்க. திடீர் முடிவுகள் எடுப்பீங்க. பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீங்க. விஐபிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாண்டு லாபம் பெறுவீங்க. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீங்க. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க இட மாற்றம் சம்பந்தமாக முயற்சிகளில் உள்ளவர்கள் வெற்றி காண்பாங்க. இதுவரை அலவலக வேலையில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி மனதில் முழுமையான நிம்மதி கிடைக்கும்

துலாம்

மகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைய நடைபெறும். ஆரோக்கிய பாதிப்புகளில் இருந்து விடுபடுவீங்க. அருகில் இருப்பவர்களின் ஆதரவு கூடுதலாக கிடைக்குமுங்க. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீங்க. கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு அகலும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீங்க. திருமணம் நடக்கப்பெறும்.குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். தந்தை வழி உறவினர் மூலம் உங்களுக்கு மிக நல்ல நன்மைகள் நடக்கும், பெரியோர் மற்றும பெற்றோரின் ஆலோசனை கிடைக்கும். உங்களுக்குக் குடும்பத்தினல் மற்றும் நண்பர்கள் மூலம் பல நன்மைகள் கொடுக்கக்கூடிய சிறந்த வாரமாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். உங்க பிள்ளைங்களால் பிரச்சினை ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முறையாக நிறைவேற்றுவீங்க. வெரிகுட். நிலையான வருமானம் வர ஆரம்பிக்குமுங்க.

விருச்சிகம்

பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீங்க. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவாங்க. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீங்க. குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீங்க. உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்களுக்கு  உதவிகளும் நன்மைகளும் செய்து பாராட்டுப் பெறுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீங்க வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும். சகோதரர்களால் உங்களுக்கும் உங்களால் சகோதரர்களுக்கும் நன்மை நடப்பதால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.

தனுசு

உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வாங்க. அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். கொஞ்ச நாளாவே சின்னச் சின்ன இடர்கள் காரணமா முன்னேற்றம் முட்டுக்கட்டை போட்டு நின்னுக்கிட்டிருந்தது இல்லையா? இனி தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்குமுங்க. சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீங்க. சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். சிறுசிறு அவமானங்கள் வரக்கூடும்.

சந்திராஷ்டமம்: நவம்பர் 6 முதல் நவம்பர் 9 வரை

மகரம்

துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவாங்க. வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் தொல்லை அகலும். திடீர் திருப்பங்கள் பல வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீங்க. வீடு கட்டுவதில் இருந்த தடை அகலும். குடும்ப உறுப்பினர்களின் குணமறிந்து நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீங்க. தாயார் ஆதரித்து பேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ, படித்துக் கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவாங்க. பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விடுபடுமளவு தனவரவு உண்டாகும். கணவரின் முயற்சியால் குடும்ப நிலை உயரும். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். யாருடைய வம்புக்கும் போகாதீங்க.

சந்திராஷ்டமம்: நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை

கும்பம்

கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீங்க. தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீங்க. எதிர்பாராத நபர்களின் உதவிகள் கிடைக்கும். எதிர் பார்த்த பணம் வசூலாகும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடக்கும். கடன், பாக்கிகள் வசூலாகும். போட்டிகள் இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று உங்களுக்கு சாதகமாக வீசும். சற்று சந்தேகத்துடன் செய்த முதலீடுகள் நல்ல லாபம் தரும். பங்கு சந்தையில் முன்னேற்றம் உண்டு. சுபமான நல்ல செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும்.  பழி தரக்கூடிய விஷயங்களைச் செய்யாதீங்க.

சந்திராஷ்டமம்: நவம்பர் 11 முதல் நவம்பர் 13 வரை

மீனம்

ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நல்லது.இந்த ஆண்டு வளர்ச்சி அதிகரிக்கும். வசதிகள் பெருகும். வருமானம் உயரும். அலுவலகவாசிகளுக்குத் தாமதப்பட்ட பதவி உயர்வு தடையின்றி கிடைக்குமுங்க. பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு  அது பற்றிய தகவல் வரலாம். அரசாங்க ஆதரவும், வசதியான வாழ்க்கையும், வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவாகும். தந்தை உடல் நலம்  மிக லேசாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும் பிரச்னைகள் பெரிதாக இருக்காது. குடும்பத்தை பிரிந்து வெளியூரில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மாற்றல் பெற்று சொந்த ஊருக்கு வருவாங்க. அதனால் மன உளைச்சல் நீங்கும். வெகுகாலத்துக்குப் பிறகு குடும்பத்தில் கலகலப்பான உரையாடல் மீளும். மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவாங்க. உங்கள் உடல் நலத்தில் அலட்சியமாக இருக்காமல் உடனுக்குடன் மருத்துவரைப் பார்ப்பது நலம் தரும்.