வார ராசிபலன்: 5.8.2022  முதல்  11.8.2022 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

பணியிடத்தில் அதிக உழைப்பை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களும், ஏற்றங்களும் ஏற்படும். அதற்கேற்ற ஊதியம் உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரிவர்களின் உடல் ஆரோக்கியத்திற்காக சிறிது செலவு செய்யும் சூழ்நிலை உண்டாகக்கூடும். மறதி அதிகரிக்கும். ஈடுபட்ட விஷயம் ஒன்றில் நல்ல முறையில் வெற்றி ஏற்பட நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர்.  குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறு சிறு மனஸ்தாபங்களும் வாக்குவாதங்களும் விலகும். பொருளாதார வரவால் கடன் பிரச்னை ஓரளவுக்கு நீங்கும். உத்தியோகத்தில் உயர்வு காண்பீங்க. தொழில்/ வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய தொகை தள்ளிப் போவது பற்றி டென்ஷன் வேண்டாம். உடல்நலனில் ஏற்பட்டிருந்த சிறிய பாதிப்பு மறையும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலைஞர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 8 வரை

ரிஷபம்

ஆலய வழிபாட்டால் அமைதி கண்டு நிம்மதியடைவீங்க. உழைப்பிற்கேற்ற பலன் ஓரளவே கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். உறவுகளைச் சீரமைப்பதில் அதிக அக்கறை காட்டுவீங்க. அதில் பலன் ஏற்படும். பணத் தட்டுப்பாடு காரணமாக மனதில் இத்தனை நாட்களாக ஏற்பட்டிருந்த சஞ்சலம் மறையும். தொழில் செய்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்பட்டால் நன்மையடைவீங்க. குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செய்வீங்க. ஆலோசிக்காமல் அவசர முடிவு எடுக்க வேண்டாம். பாகப்பிரிவினை தொடர்பான முடிவை தள்ளிப் போடுங்கள். இந்த வாரம் திங்கட்கிழமை,நண்பர் ஒருவரின் செயல் சந்தோஷம் கூட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். வரவேண்டிய தகவல் ஒன்று வெளிநாட்டிலிருந்து வரும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 10 வரை

மிதுனம்

கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் கைகூடும். குடும்ப வருமானம் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். எந்தக் காரியத்தையும் பதற்றப்பட்டோ,  அவசரப்பட்டோ செய்ய வேண்டாம். வழிபாடுகளில்  அதிக நம்பிக்கை வைப்பீங்க.  உங்களுக்கு நன்மை தரக்கூடிய வாரம் இது. தந்தைக்குட்ப பெரிய நன்மை நிகழும். உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு கட்டாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, சக ஊழியர்களால் ஏற்கனவே ஏற்பட்டிருந்த மனக்கசப்பு நீங்கும்படியாக அவர்கள் இறங்கி வந்து சமாதானம் செய்வாங்க. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. ஆரோக்கியத் தொல்லை ஏற்படாதபடி அனைத்து வகைகளிலும் கவனமாக இருப்பது நல்லது.  உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம். வியாபார இடங்களில் வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேச வேண்டும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 10 முதல் ஆகஸ்ட் 12 வரை

கடகம்

இந்த வாரம் உங்களின் அன்புக்குரியவரின் அரவணைப்பால் மன வருத்தங்கள் குறையும்.  குழந்தைகளின் சாதனை மற்றும் செயல்பாடு கண்டு உங்கள்  முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் ஏற்படும்.  பணிபுரியும் பெண்கள் தங்கள் பணி மற்றும் குடும்பச் சுமைகளை ஒரு சேரச் சுமப்பதில் சிரமப்படுவதற்கு பதில் மன நிறைவடைவார்கள்.. வியாபார விரிவாக்கம் பற்றிய தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். மாணவர்கள் மகிழ்வான கல்விச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படும். காரிய வெற்றியோடு, களிப்பும் அதிகரிக்கும் வாரம். அரசு ஆதரவு இருக்கும் அனுகூலமான நிகழ்வுகள் உண்டு. கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் கூடும்  அதிகாரம் மிக்க பதவி  உயர்வு ஏற்படலாம்.

சிம்மம்

பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி தென்படும். தொழில் புரிபவர்கள், தங்கள் துறையில் படிப்படியாக முன்னேற்றம் பெறுவர். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குடும்பச் சொத்துக்களால் ஏற்பட்டிருந்த சிறு குழப்பங்கள் அகலும். ஆன்மிக நாட்டம் அதிகமாகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காமல் இருந்த நிலை மாறி மகிழ்ச்சி ஏற்படும். வெளிநாட்டிலிருந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சி தரும். அன்பு நண்பர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீங்க.. ஆதாயம் தரும் தகவல் வாரத்தின் முற்பகுதியில் வரும். லாபமும் வருமானமும் சந்தோஷம்தரும். திடீர் மாற்றங்கள் உற்சாகம் ஏற்படுத்தும். சகோதர சகோதரிகளின் குடும்பங்களுடன் ஒற்றுமையும்சந்தோஷ உறவும் நிலவும். எடுத்துக்கொண்ட வேலைகள். பொறுப்புகள் அனைத்தும் எளிதாக முடியும் வாரம். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும்.

கன்னி

ஆரோக்கிய பாதிப்புகள் இருந்தவர்களுக்கு இப்போது முற்றிலுமாக நோய் தீர்ந்து, புத்துணர்வு ஏற்படும். தொழில் செய்பவர்கள் நேர்மை மற்றும் கண்ணியம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருந்தால்தான், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்பிக்க இயலும். குடும்பத்தில் உறவுகளால் ஏற்படிருந்த மனக்கசப்பு தீரும். சாமர்த்தியமான யுக்திகள் மற்றும் செயல்பாடுகளைக்கொண்டு எதையும் வென்று நிமிர்வீங்க. எடுத்த புதிய முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். முக்கியமான சில  பிரபல நபர்களைச் சந்தித்து முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொள்வீங்க. திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்னைகள் முற்றிலுமாக தீர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணம் தொடர்பான விஷயங்களில் தேவையான உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான நிகழ்வுகள் நடைபெற்று மகிழ்விக்கும்.

துலாம்

உறகளால் ஏற்பட்ட செலவுகளை ஈடுகட்டும் விதமாக அவர்கள் நன்மை செய்வாங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். எடுத்த செயல்களை வெற்றிகரமாக முடிப்பீங்க. பொதுநலத் தொண்டில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் செய்பவர்கள் புதிய முயற்சிகளால் வெற்றி அடைவாங்க. வரவு திருப்திகரமாக இருக்கும்.  உழைப்பு உயரும். கணவன் – மனைவி இடையே  இருந்து வந்த சிறு மனக்கசப்புகள் உங்கள் இனிய முயற்சியால்  முடிவுக்கு வரும்.. விட்டுக்கொடுத்துச் சென்று நன்மை அடைவீங்க. இந்த வாரம் புதன்கிழமை, நல்ல செய்தி ஒன்று வர வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். புதிதாக வீடு வாங்கும் முயற்சி சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும், மெல்ல மனமாற்றம் ஏற்பட ஆரம்பிக்கும். நன்மைக்கே.

விருச்சிகம்

தெய்வீக மற்றும் ஆன்மிகச் சிந்தனை மேலோங்கும். தெரியாத ஒரு புதிய விஷயத்தைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவீங்க. வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுகப்போட்டிகள் திடீரென்று காணாமல் போகும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத தன வரவுகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். தெய்வீக பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதில் சிறு தாமதம் ஏற்பட்டால் டென்ஷன் ஆக வேண்டாம்.  குடும்பத்தில் அமைதி நிலவும். தொழிலில் பொருளாதார உயர்வும், சிறு செலவும் இருக்கும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கலாம். பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். வம்பில் இழுத்துவிடக்கூடிய செயல்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். சிக்கலில் மாற்றிவிடக்கூடிய நண்பர்களை விலக்குங்கள். பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபட்டு மகிழ்வீங்க.

தனுசு

அக்கம்பக்கத்திலும் அலுவலகத்திலும்  உள்ளவர்களை அனுசரித்து நன்மை காண்பீங்க. விரயங்கள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால்  நன்மை ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு நன்றாகவே கிடைக்கும்.  குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே எதிரணியில் இருப்பதுபோல் தோன்றிய நிலை மாறி சுமுக உறவு மேம்படும். புதிய தொழில் தொடங்குவது, இருக்கும் தொழிலை விரிவு செய்வது போன்ற விஷயத்தை தைரியமாகச் செய்ய ஆரம்பிக்கலாம். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனம் செலுத்தி நன்மை காண்பீங்க. உணவில் கட்டுப்பாடு அவசியம் தேவை. நண்பர்களுடனும் உறவினர்களுடனும் உற்சாகமாகப் பொழுது போகும் செயல்களில் ஈடுபடுவீங்க. பேச்சிலும் செயலிலும் கவனமாக இருந்து, மற்றவர்கள்  பற்றிய வம்பில் தலையிடாமல் இருந்தால் நன்மையடைவீங்க.

மகரம்

யோகமான வாரம். உங்களுக்கு வாய்த்த நண்பர்களால் வாழ்விலும்,  பொருளாதாரத்திலும் வளர்ச்சி கூடும். வருமானம் நல்ல முறையில் இருக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு எதிர்பாலினத்தினர் மற்றும் வேறு மொழி பேசுபவர்களின் ஒத்துழைப்பு உண்டு.  நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீங்க. தொழில் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்படுங்கள். கோபத்தைக் குறைத்து காரியத்தில் நிதானம் காட்டுங்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் சென்று நல்மை பெற முயற்சிக்கலாம். அலுவலகப் பணியாளர்களுக்கு திடீரென்று கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். இதன் மூலம் உங்களின் திறமை வெளிப்படும்படி நடந்துகொள்ளுங்கள். தொழில் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சி அமோகமாக இருக்கும்.

கும்பம்

வரவேண்டிய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீங்க. வீட்டில் உள்ள பெண்களால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். உங்கள் வாழ்க்கையும் முன்னேற்றமும், பார்த்தவர்கள் பொறாமைப்படும்படி இருக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் இருந்து வந்த பூசல்கள் விலகி புதுப்பாதை அமையும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். வீடு, குடும்பம், குழந்தைகள் சம்பந்தமான பிரச்சினை தீர்வதற்கான விஷயங்கள் நடக்கும். பல நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு விஷயத்தில் வெற்றி கிடைக்கும். பணியாற்றும் இடங்களில் பாதுகாப்பாக இருங்கள். ஆரோக்கிய தொல்லை வந்தால், உடனடியாக மருத்துவரை நாடுங்கள். தெய்வ தரிசன வாய்ப்பு கிடைக்கும். காரியம் கை கூடும் என்றாலும் நிதானமாக செயல்படுங்கள்.

மீனம்

இத்தனை காலமாக இருந்து வந்த மனக்குழப்பம் மெல்ல முடிவுக்கு வரும். வீடு, இடம் வாங்குவது பற்றிய உங்களின் தீர்மானம் நல்ல முடிவுக்கு வரும். மாமன், மைத்துனர் மூலமாக நல்ல விஷயம் ஒன்று நிறைவேறும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். தொழிலில் முதலீடு செய்ய கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி திடீரென்று இந்த வாரம் உங்களைத் தேடி வரும். பணப் புழக்கம் தாராளமாகும். இருந்தாலும் திட்டமிட்டுச் செயல்படுங்கள். நண்பர்கள், உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கிப் பழைய நட்பு புத்துயிர் பெற்று உற்சாகமளிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். இந்த வாரம் வியாழக்கிழமை, நீங்கள் எதிர்பார்த்திருந்த செய்தி வந்து நிம்மதி தரும். வெளிநாட்டில் உள்ள உறவினர் மகிழ்ச்சிகூட்டும் தகவல் அளிப்பார்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 6 வரை

More articles

Latest article