மேஷம்
அரசாங்கத்திடமிருந்து ஏதேனும் குட் நியூஸ் எதிர்பார்த்திருந்தா அது இப்போ முயற்சியே செய்யாமலும்கூட உங்களுக்குக் கிடைக்குங்க. அடி சக்கை ! என்றைக்கோ செய்த முதலீடுகள் இப்போ பலன் கொடுக்கும். வரவே வராது என்று கணக்கில் சிவப்புக் கோடு போட்டு முடித்த விஷயங்கள் இப்போது வருமானமும் லாபமும் கொடுக்கும், ரொம்ப நாளாய்த் திரும்ப வருமான்னு காத்துக்கிட்டிருந்த கடன் தொகை வசூலாகும். நீங்க கலைத்துறையில் இருப்பவரா? அப்போ சரி அப்படியானால், ஜெயிச்சு மேலே வந்து முன்னேறிடுவீங்க. குழந்தைங்க சின்ன சின்ன ஏமாற்றங்கள் தரக்கூடும். அவங்களுக்கு பாதிப்பிருக்காது. ஆனால் அவங்களுக்கு உங்களால கஷ்டம் வந்துடக்கூடாதில்லையா. அதை கவனமாப் பார்த்துக்குங்க. கொஞ்ச நாட்களில் அவங்க உங்களைப் பெருமைப்படுத்தப்போறாங்க. உங்களின் முயற்சிக்கு நல்ல பலன்களைப் பெற முடியும் என்றாலும், சில தடங்களுக்கு பின்னரே முழு பலனைப் பெற முடியும் பட் யூ வில் கெட் இட்.
ரிஷபம்
சகோதர சகோதரிகளுக்குப் பெரிய பெரிய நன்மைகளும் லாபங்களும் ஏற்படுமுங்க. அவங்க உங்களை நன்றியோடு நினைப்பாங்க. அவங்களோட நீங்க ஜாலியா நாலு இடம் சுற்றுவீங்க. அவங்களுக்கு அரசாங்கத்தால் நன்மை விளைஞ்சுதேன்னு பொறாமை கொள்ளாமல் சந்தோஷம் கொள்ளுங்க. இப்போ இவங்களுக்கு ஏற்பட்ட மாதிரி உங்களுக்கும் அரசாங்க நன்மை கிடைக்கப்போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. திடீர் உத்யோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு, அதுவும் வெளிநாட்டில் கிடைக்கலாம். இத்தனை காலம் மனசையும் உடம்பையும் வாட்டிக்கிட்டிருந்த பிரச்சினைகள் கல் எறிந்தவுடன் பறந்தோடும் பறவைகள் மாதிரி ஓடியிருக்குமே ! நல்ல காலம் ஆரம்பித்துவிட்டது. நிறையச் செலவுகள் உண்டு. கொஞ்சம் தயாரா இருங்க. ஆனாலும் அந்தச் செலவுங்களால பிற்காலத்தில் பெரிய நன்மைகள் உண்டு. சுருங்கச் சொல்லணும்னா, அவற்றை நீங்க செலவுகளாய் நினைக்காமல் முதலீடா நினைச்சுக்குங்க. யெஸ். இன்வெஸ்ட்மென்ட்.
மிதுனம்
குடும்பத்தினரின் புத்திசாலித்தனத்தால் உறவினர் மத்தியில் ஒற்றுமையும் நன்மையும் ஏற்படுவது போலவே ..அலுவலகத்தில் நீங்க புத்திசாலித்தனமாய் நடந்து கொண்டு கம்பெனிக்கு லாபம் ஏற்படச்செய்வீங்க. அதனால் உங்களுக்கும் பாராட்டும், புகழும் ஏற்படும். நண்பர்கள் நல்லவங்களா அமைவது வரம். அந்த வரம் உங்களுக்குக் கிடைச்சிருக்கு. நம்புங்க. அவங்க உங்களுக்கு நன்மைதான் செய்வாங்க. ஆரோக்யத்தை மிக முக்கியமாகப் பார்த்துக்குங்க. சின்னதாகக் காலில் வலி வீக்கம் இருந்தாலோ அடி பட்டாலோ முதல் உதவி சிகிச்சை செய்ய டாக்டரிடம் போங்க. நீங்களே செல்ஃபி வைத்தியமெல்லாம் செய்துக்க வேணாங்க. அதிருக்கட்டும்… ஆபீசிலும் ரிலேடிவ்ஸ் கிட்டயும் தயவு செய்து பணிஞ்சு போங்களேன். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் ஏற்படுவதெல்லாம் சகஜம். அதையெல்லாம் போய்ப் பெரிசா நினைத்துத் தூக்கத்தையும் நிம்மதியையும் இழக்காதீங்கப்பா. ரிலாக்ஸ்.
கடகம்
இத்தனை காலம் ஓடி ஒளிஞ்சுபிடிச்சு விளையாடிக்கொண்டிருந்த தன்னம்பிக்கை ஒரு வழியா உங்க கிட்ட வந்து ஒட்டிக்கும். பேச்சில் ஒரு விதக் கவர்ச்சி அம்சம் இருப்பதால் உங்களை எல்லோருக்கும் ரொம்பவே பிடிக்கும். மேடைப்பேச்சில் வெளுத்து வாங்கிக் கைதட்டல் பெறுவீங்க. குடும்பத்தில் காணாமல் போயிருந்த சந்தோஷமும் நிம்மதியும் , அமைதியான உறக்கமும் நல்ல முறையில் உங்களை வந்தடையும். சண்டை சச்சரவுகள் தீரும். சிநேகிதர்களிடம்/ தோழிகளிடம் சற்று முறைத்துக் கொள்வீங்க. என்ன செய்ய, அவங்க செய்வதும் நியாயம் அல்லதான். நியாயம் உங்க பக்கம்தான். டோன்ட் ஒர்ரி. சமாதானமாயிடுவீங்க. செல்வாக்கும் அதிகாரமும் பொறுப்பான பதவியும் உங்களை ‘கெத்’தாக வைக்கும். அதுக்காக ஓவரா அலட்ட வேண்டாம். அப்பாவுக்கும் உங்களுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அவருக்கு ஒரு கஷ்டம் என்றால் நீங்கதானே முதல்ல விரைந்து உதவப்போறீங்க? அதை அவருக்குப் புரிய வைச்சு ஒற்றுமையாப்போங்க. யூ கேன்.
சிம்மம்
குழந்தைங்க மேடை ஏறிக் கைதட்டலும் பரிசும் வாங்குவாங்க. சகோதர சகோதரிகளுடன் சற்று முகத்தைத் தூக்கி வெச்சுப்பீங்க. புதுசா வாகனம் வாங்கிக் குடும்பத்துடன் சந்தோஷமா ஊர்சுற்றுவீங்க. திடீர்னு புது வேலை கிடைச்சு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சம்பளம் கூட நீங்க நினைச்சதைவிடக் கூடவே இருக்கும். கணவருக்கு/ மனைவிக்கு திடீரென்று பதவியோ சம்பளமோ உயரும். யார் கண்டது. இரண்டுமே உயரக்கூடும். தந்தைக்கு சிறு உபாதைகள் வந்தாலும் உடனுக்குடன் சரியாகி நிம்மதியளிக்கும். அம்மாவுக்குப் பாராட்டும் புகழும் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான விரிவாக்கம் இருக்கும். தைரியமும் வீரமும் அதிகரித்து மனதில் இருந்ததை வாய்விட்டுக் கேட்பீங்க. இன்னும் கேட்கவில்லையா? எனில் ஒரு சின்ன ஆலோசனை சொல்றேன். நீங்க கேட்க விரும்புவதைச் சுள்ளென்று கேட்காதீர்கள். புதிய நன்மைகளை எதிர்பார்க்கக்கூடிய வாரம் இது. யெஸ். யூ கேன் எக்ஸ்பெக்ட்.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 6 வரை
கன்னி
அதிகாரிங்ககிட்டயும் பெரிய மனுஷங்க கிட்டேயும் பேசும்போது குரலில் பணிவு இருப்பது போல் நடிக்கவாவது செய்யுங்களேன். வாக்குவாதத்தைத் தவிர்க்கப்பாருங்க. நீங்க விரும்பியது கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. வாயை இறுகத் தைத்துக்கொண்டு பேச்சை அடக்கினால் நல்லது. சுளீர் சுளீர் என்று நாக்கைச் சாட்டைபோல் சுழற்றாதீங்கப்பா. அது பூமராங் மாதிரி செயல்படும். நீங்க நல்லது பேசினால் அதன் நற்பலன் உங்களுக்கும் உண்டு என்பதை நினைவுல வெச்சுக்குங்க. கட்டாயமா யாருக்கும் சாபம் இடவே கூடாது. நல்ல வார்த்தைகள் மட்டுமே வாயில் வருமாறு பார்த்துக்குங்க. உங்களுக்கு உங்க மேலேயே நம்பிக்கை இல்லைன்னா என்ன செய்யறது? தன்னம்பிக்கை உங்களுக்கு எப்பவும் நல்லாத்தான் இருக்கும், சமீபத்தில்தான் அது மிஸ் ஆயிடுச்சுங்க. பூனை மாதிரிப் பதுங்கியிருந்த நீங்க, நல்ல காரணங்களுக்குப் புலி மாதிரி பாய்வீங்க. குட் லக்.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 9 வரை
துலாம்
நல்ல நல்ல செலவுகளும் வரும். அதை மிஞ்சும்படியான வருமானமும் வரும். ஒங்க டாடிக்குப் பாராட்டும் பெருமையும் கிடைக்கும்.அவர் அலுவலகத்தில் அவருக்கு செல்வாக்கு ரொம்பவும் அதிகமாகும். நியாயத்துக்கும் நேர்மைக்கும் புறம்பான காரிங்களைச் செய்யும்படி உங்களை யார் வற்புறுத்தினாலும் பெரிய எழுத்தில் “நோ” சொல்லிடுங்க. அது பிறகு உங்களை விடாமல் பிடிச்சுக்கிட்டா எதிர்காலம் என்னங்க ஆறது? மனைவியின்/ கணவரின் முன்னேற்றம் உங்களையும் உங்க குடும்பத்தி உள்ளவங்களையும் சந்தோஷ அருவியில் குளிக்கச் செய்யும். எந்த முயற்சியுமே உடனுக்குடன் பலனளிக்கும். சிறிது முன் வரை இருந்து வந்த மந்த நிலையும், நிதானப்போக்கும் இருக்காது. பயமோ டென்ஷனோ வேண்டாங்க. நண்பர்கள் அபாரமாக உதவுவாங்க. குறிப்பாக எதிர்பாலினத்தினர் உங்களுக்காக மனப்பூர்வமாக நன்மைகள் செய்வாங்க. அதை நன்றியுடன் நினைவில் கொள்ளுங்க. ஆல் த பெஸ்ட்.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 9 முதல் பிப்ரவரி 11 வரை
விருச்சிகம்
உங்க குழந்தைங்களுக்கு அரசாங்க நன்மைகள் கிடைப்பது ஒரு புறம் இருக்கட்டும். உங்களுக்கே அரசாங்கத்தால் லாபம் உண்டு. பாஸ்போர்ட்டுக்காகக் காத்திருந்தவர்கள் அது கிடைத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பாங்க. தந்தைக்கு ஏற்பட்டிருப்பதெல்லாம் தற்காலிகமான பிரச்சினைகள்தான். பெரிதாக எண்ணி பயப்படாதீங்க. வாக்கினால் நன்மை ஏற்படும், குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டு. மருத்துவத் துறையிலும் கட்டத்துறையிலும் உள்ளவங்களுக்கு நன்மை உண்டு. குழந்தைங்க உங்களைப் பெருமிதம் அடையச் செய்யுமளவு சாதனைகள் செய்து பாராட்டு வாங்குவாங்க. தயவு செய்து இப்போதைக்கு வேறு வேலை மாறுவது பற்றி நினைச்சும் பார்க்காதீங்க. பல காலமாகத் திட்டமிட்டிருந்த கோயில் குளம் / வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குலதெய்வப் பயணங்கள் தடைப்பட்டாலோ, தாமதமானாலோ கவலை வேண்டாம். இந்தத் தடை கூடிய விரைவில் நீங்கும். நல்லபடியாக தரிசனம் செய்துவிட்டு வருவீங்க. ஆர் யூ ஹாப்பி?
தனுசு
அலுவலகத்தில் பெரிய முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியாதுங்க. நத்தை அல்லது ஆமையின் வேகத்தில்தான் எல்லாமே நடக்கும். பரவாயில்லை. விடுங்க. கூடிய சீக்கிரத்தில் எல்லாமே தானாய்ச் சரியாகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீங்க. உங்களின் முயற்சிக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கக்கூடியதாகவும், அங்கிகாரம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். அதே சமயம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்ற பதவி உயர்வும், ஊதிய உயர்வையும் பெறுவீங்க. உங்களின் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்க முன்னேற்றம் தேடிவரும். பிள்ளைகளுடனான உறவில் நிதானம் தேவை. தேவையற்ற கருத்து மோதல் உண்டாகும் என்பதால் பேச்சில் நிதானம் தேவை. கர்ப்பிணி பெண்கள் இந்த காலகட்டத்தில் சற்று கவனமாக இருப்பது அவசியம். அரசுத் துறை சேர்ந்த விஷயங்களில், செயல்பாடுகளில் கவமாய்ச் செயல்படுவீங்க. டோன்ட் ஒர்ரி.
மகரம்
தொழில், வியாபாரத்தில் பல வகையில் அலைச்சல்கள் இருந்தாலும், லாபகரமான சூழல் நிலவும். தொழில் நுட்ப கருவிகள், தொழில், வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் இருக்கும். உங்களின் பணியாளர்களிடம் அனுசரித்து செல்ல, தட்டிக் கொடுத்து வேலை வாங்க செயல் திறன் கூடும். வளர்ச்சி அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த நீங்க எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவீங்க. விளையாட்டு போட்டியில் ஈடுபடும் மாணவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவீங்க. வண்டி, வாகனத்தை கையாள்வதிலும், பயணங்கள் செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வாகனம் மற்றும் வீடு, மனை வாங்கும் போது கவனம் தேவை. முக்கிய ஆவணங்களைக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். வெயிட் அண்ட் ஸீ.
கும்பம்
குடும்பத்திலும், மனதிலும் இருந்த குழப்பங்கள் நீங்கி நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும். உழைக்கத் தயங்காமல் ஓடிக்கிட்டிருக்கீங்க.. அதனால பணவரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி, முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பல துறையில் உங்களின் தேடல் அதிகரிக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும், உங்களின் செயல்பாடு சிறப்பாகவும், பொறுமையுடனும் செயல்பட்டு செயல்களில் வெற்றி பெறுவீங்க. அதன் மூலம் நல்ல லாப நிலை உண்டாகும். ஆனால் எந்த முன்னேற்றமும் வேகமா இருக்கும்னு எதிர்பார்க்காதீங்க. எல்லாம் நிதானமாத்தான் நடக்கும். ஸோ வாட்.. நல்லபடியா முன்னேற்றம் உண்டு. அது போதாதா? உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அவ்வப்போது சின்னச்சின்னப் பிரச்சனைங்க ஏற்பட்டு நீங்கும். யூ வில் பி ஃபைன்.
மீனம்
உங்க குடும்பத்தில் திருமண வயதில் உள்ளவங்களுக்கு, அவங்க எதிர்பார்த்த மாதிரியான வரன் அமையும். தம்பதியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். ஆரோக்கியமான விவாதம் ஏற்படலாம். பிள்ளைகளுடன் நல்ல புரிதல் ஏற்படும். அவங்க உங்களின் பேச்சை கேட்டு நடந்து கொள்வர். மம்மிக்கு நிறைய நன்மைகள் உண்டாகும். புதுசா வண்டி வாகனமெல்லாம் வாங்குவீங்க. ஃப்ரெண்ட்ஸ்க்கு நிறைய உதவிங்க செய்து அவங்களுக்கு டியர் ஆவீங்க. ஆரோக்யம் சூப்பரா இருக்கும்./ மாணவர்கள் படிப்பில் ஆர்வமுடன் படிப்பீங்க. விளையாட்டு போட்டிகளில் பரிசு, பதக்கங்கள் வெல்ல வாய்ப்புள்ளது. சிலருக்கு மேற்கல்வி தொடர்பான வெளிநாடு, வெளியூர் பயணம் செய்வீங்க. விளையாட்டுப்போட்டிகளிலும் வெற்றி பெறுவீங்க. உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை, எந்த ஒரு தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். தேவையற்ற எண்ணங்களை கைவிட்டு, நம்பிக்கையோடு, உங்கள் முயற்சிகளைச் செயல்படுத்துங்கள். யூ வில் வின்.