சென்னை:
சென்னை மாநகராட்சிக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகிறது.

இதற்காக, திமுக மாவட்ட செயலாளர்களுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மாநிலம் முழுவதும் மதிமுக மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சு நடத்தினர். அதன் பயனாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மதிமுகவுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் மதிமுக சார்பில் வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதன் முடிவில் சென்னையில் மட்டும் 137வது வார்டு, 80வது வார்டு மற்றும் திருவான்மியூர், ஆர்கே.நகர் பகுதிகளில் தலா ஒரு வார்டு உட்பட 4 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – 200 வார்டுகளை உள்ளடக்கிய சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன், சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, வேளச்சேரி மணிமாறன் ஆகிய பல நிர்வாகிகள் போட்டியிடுகின்றனர்