மேஷம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள விருப்பம் ஏற்படும். ஆனால் அதுக்காக அகலக்கால் வைச்சுடாதீங்க. உங்க கிரெடிட் கார்டு பயமுறுத்தாமல் பார்த்துக் குங்க. உத்யோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. தொழில், வியாபாரம் தொடர்பான ஆலோசனைங்க கிடைக்கும். வாக்கு சாதுரியத்தால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். மனதில் சந்தோஷமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பணவரவு ரொம்பவும் முயற்சிக்குப் பிறகே கூடும். விரும்பியதை அடைய நேர்மையான, புது வழி ஒன்று கிடைக்கும். உங்க ஆழ்ந்த நுண்ணறிவை நிறையப் பேர் பாராட்டுவாங்க. உடன்பிறப்புகளிடம் நல்ல ஒற்றுமை இருக்கும், மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பீர்கள். நண்பர்கள் வகையில் சந்தோஷம் ஏற்படும். வெளியிடத்தில் கேட்ட உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பழைய கடன் பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும், புது கடன் எதுவும் வாங்கிடாதீங்க.. ப்ளீஸ்.. ஆடம்பர செலவுகளைக் குறைச்சுக்கிட்டீங்கன்னாலே உங்களுக்கு வரும் பிரச்னைங்களை ஈஸியாய்த் தவிர்த்துடலாமே!

சந்திராஷ்டமம்: 2021 டிசம்பர்  30 முதல் 2022 ஜனவரி 1 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்.

ரிஷபம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். நாலு இடங்களுக்குப்போனால் மற்றவர்களைவிட உங்களையே பலரும் தேடி வருவாங்க. அதிகம் பேசாதீங்க. குடும்பத்தினர்கள் கிட்டேயும் நெருங்கிய உறவினர்களிடமும் நன்றி அது இது என்று எதையும் எதிர்பார்க்காதீங்க. பலனே எதிர்பார்க்காம இன்றைக்கு செய்துடுங்க. சீக்கிரத்தில் அதன் அருமை புரிந்து அவங்க பாட்டுக்கு உங்க கிட்ட நன்றி உணர்ச்சியோட வருவாங்க. உங்க பெருமையை ஊரே பேசும்போது அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்களா என்ன? புதிய முயற்சிகளில் ஆதாயமான பலன் கிடைக்கும். எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையாக இருக்கவும். உங்க அருமை பெருமையை புரிந்து கொண்டு பலரும் உங்களை நாடி வருவர். அடுத்தவர்களுக்காக உதவி செய்வதில் உற்சாகம் உண்டாகும். குடியிருக்கும் வீட்டை புதுப்பிக்கவோ அல்லது வீடு மாற்றி செல்லவோ வேண்டி இருக்கும். ண் விரயங்களும் உண்டு. குடும்ப சுமைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைவாக முடிக்கவும். தொழில், வியாபாரத்தில் இழந்ததை திரும்ப பெற முடியும்.

சந்திராஷ்டமம்: 2022 ஜனவரி 1 முதல் 2022 ஜனவரி 3 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்.

மிதுனம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்க வேணாங்க. திருமண காரியம் விரைவில் கைகூடும். கணவன் மனைவிடைய ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியங்களுக்காக நிறையப் பணம் செலவாகும். ஆனால் அவை ஹாப்பியான பலன்கள் கொடுக்கும்.  பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு மாறத்திட்டமிட்டிருந்தா அது நல்ல முறையில் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள் வாங்குவீங்க. வாகன வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். மனபாரம் குறையும். பொருளாதார பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமா விலகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த நல்ல திருப்பம் நிகழும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் வேணுங்க. நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். செய்ய வேண்டிய காரியங்களில் ஒரு சில தடைகள் வந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன் தகர்த்தெறியும் மனோதிடம் உண்டாகும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். செலவுக்கு ஏற்ற வருமானமும் காத்துக்கிட்டு இருக்கும் 

சந்திராஷ்டமம்: 2022 ஜனவரி 3 முதல் 2022 ஜனவரி 6 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்கவும்.

கடகம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ரொம்ப நாளாய்த் தேடிக்கிட்டிருந்த உத்யோகம் டக்கென்று கிடைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சகோதரர்களுக்கு நிறைய நன்மைகள்… பெரிய நன்மைகள் உண்டு. அட சந்தோஷப்படுங்க. ஏன் தெரியுமா? அவங்களால உங்களுக்கு நன்மைகள் உண்டு. மேலும் அந்த நன்மைங்களுக்கு நீங்க காரணமா இருப்பீங்க. அதுக்கு அவங்க நன்றி பாராட்டுவாங்க. குழந்தைங்க புகழ் பெற்று வெளிச்ச மேடையில் கைதட்டல் பெறுவாங்க. வெளிநாட்டு மேடையாகவும் அது இருக்கக்கூடும். எப்போதும் சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் குதூகலமாகவும் இருக்கும்படி இந்த வாரம் அமையும்.  ஆன்மிக விஷயங்களில் விருப்பம் ஏற்படும். தாராள தனவரவுகளால் குடும்ப தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப காரியம் கைகூடி வரும். கணவன் மனைவிடைய அன்பு பாசம் அதிகமாகும். கடன் பிரச்னை படிப்படியாக குறையும். வாகனத்தில் மித வேகம் இருக்கட்டுங்க. நல்ல நபர்களின் தொடர்பால் உங்க அந்தஸ்து, கௌரவம் உயரும். குடும்பத்தில் யாருக்காச்சும் எதிர்பாராத வகையில் சின்னதாய் ஒரு மருத்துவ செலவும் வரலாம். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. பிரயாணங்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடைபெறும்.  

சிம்மம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஜெட் வேகத்தில் தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் என்னங்க? பரவாயில்லை. நல்லவே கரெக்டாத் தீர்மானிப்பீங்க. அடிப்படை புத்திசாலித்தனமும், இயல்பாக உள்ள சமயோசிதமும் எப்பவும்போல இப்பவும் கைகொடுக்கும். உத்யோகத்தில் உங்க மேலதிகாரியின் நல்லெண்ணம் உங்க மேல் பதியும். குடும்பத்தில் வெரி வெரி இம்பார்ட்டென்ட் பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நீங்க எதிர்பார்க்காத விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். எல்லாம் ஹாப்பியாய்த்தான் நடக்கும். கொஞ்ச காலத்துக்கு நிறுத்தி வைத்திருந்த முக்கியக் காரியங்களை மறுபடியும் செய்ய ஆரம்பிப்பீங்க. விஐபிகளின் ஆதரவும், அவங்களால் நன்மையும் உண்டு. ரிலேடிவ்ஸ் உங்களுக்கு சாதமாக செயல்படுவாங்க. அந்நிய நபர்களின் அறிமுகமும் அவங்களின் நட்பும் கிடைக்கும். நண்பர்கள் எப்போதும் போல எல்லா விஷயத்திலும் துணை நிற்பாங்க. அவர்களிடம் அதிக நம்பிக்கை வைத்து பொறுப்புகளை தைரியமாய் ஒப்படைங்க. உங்களுக்குத்தான் நன்மை கூடுதலாகும். . பயணங்கள் போன்றவற்றில் எதிர்பார்த்ததை விட அதிக செலவுகள் இருக்கும். பட் அதன் பலன் இனிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதிக்க வேண்டாம். 

கன்னி

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

நீங்க இன்னமும் மேரேஜ் ஆகாதவரா? அப்படியானால் உங்களுக்குத் திருமணம் நிச்சயமாகும். அல்லது உங்க குழந்தைகள் திருமண வயசில் இருக்காங்களா? அப்ப அவங்களுக்கு சுப நிகழ்ச்சிகள் கட்டாயம் உண்டுங்க. உடன் பிறந்தவங்க வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகிட்டு நெருங்கி சொந்தங்களை மீட் செய்து ரொம்பவும் சந்தோஷமாப் பேசி மகிழ்வீங்க. ஜமாயுங்க. கொஞ்சம் செலவுங்க வரும்.  நிறைய வருமானம் கட்டாயம் வரும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடிக்கும் திறமையும் ஆற்றலும் உண்டாகும். உங்க செல்வாக்கை உயர்த்தும் முயற்சியில் வெற்றிகொள்ள முடியும். புத்திசாலித்தனத்துக்குக் குறைவில்லை என்பதால் பாராட்டும் நிறையக் கிடைக்கும். குடும்பத்தோட  பெருமை உயரும். குடும்ப சூழலில் முன்பிருந்த நிலையெல்லாம் மாறி,  ஹாப்பியான மாற்றங்களை காண்பீர்கள். இந்த வாரம் முழுக்கவே  தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உடல் நலனில் சற்று கவனம் எடுத்துக்குங்க. உங்களை நோக்கி வரும் எதிர்ப்புகள் தானாக விலகும். அலுவலகத்தில் உங்க பெயரை நிலைநிறுத்திக் கொள்ள அதிகம் போராட வேண்டியிருந்த நிலை மாறி உங்களை எல்லாரும் மதிப்போட பார்ப்பாங்க . நண்பருங்க யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவங்களுக்குச் செய்யும் உதவி சில நேரத்தில் பிரச்சனையில் முடியாமல் பார்த்துக்குங்க.

துலாம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

டாடிக்குப் புகழ் கூடும். உங்க தாய்மாமனின் உதவியும், ஆறுதலும், ஆதரவும் கிடைத்தே தீரும். ஸ்டூடன்ட்ஸ்க்கு, திடீர் நன்மை கிடைக்கும். அலுவலகத்தில் வெளிநாடு அனுப்புவாங்க. பாதியில் விட்டுப்போன வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பணப்புழக்கம் சூப்பரா இருக்குங்க.  பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனப் பராமரிப்பு செலவு கொஞ்சமே கொஞ்சம் கூடும். எதிர்பார்க்காத சில அதிர்ஷ்டம் வரும். முன்னே சண்டை சச்சரவெல்லாம் போட்டுவிட்டுப் பிரிஞ்சு போன உறவுக்காரங்க மீண்டும் வந்து சேருவர். குடும்பத்திற்குத் தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்க மதிப்பு, மரியாதை கூடும். உத்யோகத்தில் வேலை பளு குறைய ஆரம்பிக்கும். கூட்டுத் தொழில், வியாபாரம் முன்பிருந்ததைவிடவும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல் உங்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். முக்கிய காரியங்களில் இருந்த தேக்க நிலை மெல்ல மெல்ல மாறும். புதிய முயச்சிகளில் உடனடியாக பலன் காண முடியும்.

விருச்சிகம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

மந்தமாக/ நிதானமாக/ மெதுவாக/ ஸ்லோ…வாகக் காரியங்கள் நடைபெற்றாலும் நல்லபடியாகவே நடந்து முடிஞ்சுடுங்க. நின்றுவிடாது. பின்வாங்காதீங்க. பேச்சில் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். நிறையப்பேர் உங்க கிட்ட ஆலோசனை கேட்பாங்க. உடன் பிறப்பால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படலாம். பயணங்களின் போது கவனமாக இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். கடன் பிரச்சனை ஒருபுறம் இருக்க அதை அடைப்பதற்கு உண்டான வழியும் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். கணவன் மனைவியிடையே எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். வீட்டில் பொருள் சேர்க்கை ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய லாபம் காண முடியும். பிரபல நபர்களின் அறிமுகமும், அவர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் தன லாபம் உயரும்.

தனுசு

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

பயணங்களால் நிறைய அலைச்சல் ஏற்படும். உங்க திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பணவரவு வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவுகள் வரும். குடும்பத்தில் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடக்கும். வீடு வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்லவும். உடன்பிறப்புகளுக்கு எப்போதும் உதவியாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரை சிறு உடல் உபாதைகள் வந்து போகும். மனத்தில் எதிர்பார்த்த மனநிம்மதி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும். பூர்வீக சொத்து மூலம் பணம் கைக்கு வரும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். முக்கிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படவும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் கூட நண்பரகளாக மாறி உதவி செய்வர். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில், வியாபாரத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும்.

மகரம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

நண்பர்கள் என்ற பெயரில் யாரையும் உங்க உரிமையில் தலையிட அனுமதிக்கவே அனுமதிக்காதீங்க. நல்ல நண்பர்கள் வாழ்வில் முன்னேறுவாங்க. சிலரின் முன்னேற்றத்துக்கு நீங்களும் காரணமாய் இருப்பீங்க. பேச்சினால் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த முறை அதிக அறுவடை. அரசாங்க உத்யோகம் கிடைக்க நீங்க செய்த முயற்சிகள் எல்லாம்.. அப்பாடா..இப்ப பலன் தருமே. என்ஜாய். வெளிநாட்டிலிருந்து வருமானம் கிடைக்கும். .  பேச்சிலும், செயலிலும் வேகமும், விவேகமும் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். மனதில் புது தெம்பும், உற்சாகமும் ஏற்படும். புதுசாய் வீடு, வாங்கும் முயற்சிகள் கைகூடும். உடன்பிறப்பு மூலம் பண உதவி கிடைக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தமான தொந்தரவுகள் வரலாம். சிறியளவில் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

கும்பம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஏகப்பட்ட செலவுங்க. நிறைய டிரஸ்கள் எடுப்பீங்க. நகை நட்டுன்னு வாங்குவீங்க. வாழ்க்கையை ரசிக்கப்பிறந்தவங்க நீங்க (அல்லது உங்க மனைவி/மகள்) சின்னச்சின்னத் தோல்விங்களுக்குத் துவண்டு போயிக்கிட்டிருந்தீங்க. இப்ப நிம்மதியா சந்தோஷமான திருப்பங்கள் ஏற்பட்டு வாழ்க்கையை ரசிககத் துவங்கியிருப்பீங்க. ரைட்டா? திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் நிச்சயமாகும். குழந்தை அற்றவர்களுக்குக் குழந்தை பிறக்கும். காதல் திருமணம் கனிந்து வெற்றியளிக்கும். தந்தைக்கு குட் நியூஸ் வரப்போகுதுங்க. திடீர் அதிருஷ்ட வாய்ப்பு வரும். பரிசுகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தங்க நகைகள் வாங்கித் தருவாங்க. தூரத்து சொந்தங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அடிக்கடி வெளிநாடு பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் பெரியளவில் மாற்றமும், முன்னேற்றமும் வரும். சுப காரிய செலவுகள் அதிகமாகும். உத்யோகத்தில் உங்க அந்தஸ்து, கௌரவம் வெகுவாக உயரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

மீனம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

அர்ஜென்ட்டாய்த் தீர்மானங்கள் எடுக்க வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுச்சுன்னா,  சற்று அமைதியா யோசிச்சு நல்லவங்களைக் கலந்தாலோசிச்சு செய்ங்க. நல்ல வேலை கிடைக்கும். அதில் நீங்க மேலும் மேலும் முன்னேறுவீங்க பாருங்களேன். லாபங்களும் வருமானங்களும் நீங்க நினைச்சதைவிட அதிகமாகக் கிடைக்கும். நல்ல விஷயங்களையும் மற்றவர்களுக்கு நன்மை தரும் விஷயங்களையும் பேச ஆரம்பிச்சிருக்கீங்க. சூப்பர். இப்படியே எப்பவும் பேசினால் நன்மைகள் அதிகமாகும். பணம் எப்போதும் கையில் புரளும். குடும்ப பாரம் அதிகரிக்கும். உங்க வாழ்க்கை தரம் உயரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். உறவினர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். கடன் வாங்கும் என்னத்தை கை விடுவது நல்லது. புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. உடல் நலம் தொடர்பாக மருத்துவ செலவு ஏற்படலாம். வழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உறவினர் வருகை அதிகம் உண்டு. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டாகும். தொழில், வியபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.