மேஷம்
சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். உங்களுக்கோ அல்லது ஃபேமிலில யாருக்குமோ திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணையால் நன்மைகள் உண்டாகும். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். ஆபீஸ் வேலைகளிலும் மத்தவங்க்ட்டக பேசுவதிலும் பொறுமை மிகவும் அவசியம். தங்களை அறியாமல் தவறுகள் ஏற்படக்கூடும் என்பதால், ஆபீஸ் வேலைங்கள்ல கூடுதல் கவனம் செலுத்தவும். கம்ப்யூட்டர்ல வேலை செய்துக்கிட்டே பர்சனல் போன் பேசவே வேணவே வேணாம். திரைப்படம் மற்றும் ஷாப்பிங் போவீங்க. சந்தோஷம் கூடுதலாகும். எத்தனைக் கெத்தனை வேலைப்பளு இருந்துச்சோ அத்தனைக்கத்தனை பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த வாரம் உண்டு.
ரிஷபம்
பிஸினஸ் அல்லது தொழில்ல எதிர்பார்க்கும் அளவுக்கு லாபம் கிடைக்கும். வியாபாரம் அல்லது முதலீட்டை விரிவுபடுத்தும் முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். ஷேர் மார்க்கெட் போன்ற சமாசாரங்கள்ல லிமிட்டா ஈடுபட்டுக்குங்க. பெண்மணிகளுக்கு விருந்தினர்கள் வருகையால் பணிச்சுமை அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைக்கு சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் இந்த வாரம் சாதகமாக முடியும். சிலருக்கு புதிய நகை வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்னியம் உண்டாகும். ஒரு சிலருக்கு அவங்க எதிர்பாராதபடி பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
மிதுனம்
மகிழ்ச்சி தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சலுகைகளும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.பிஸினஸ் அல்லது தொழில்ல விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். கடையை விரிவு படுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம். ஜாலியாப் பொழுது போகும். அதாவது சினிமா டிராமா மால்.. னு சுத்துவீங்க. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அவ்வப்போது முன்கோபம் வந்து செல்லும். அதைக் கொஞ்சம் லிமிட் பண்ணிக்குங்க. பிகாஸ்.. உங்க கோபம் நியாயமானது இல்லைன்னு உணரும் சந்தர்ப்பம் வரும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைவதற்கான வாய்ப்பு உள்ளது. பழைய கடன்களைத் தீர்க்க பண உதவி கிடைக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொண்டு உறவினர் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீங்க.
கடகம்
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு சிறு அளவில் உடல்நலன் பாதிக்கப்படக்கூடும். குடும்பத்துல உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு உண்டாகும். குடும்பத்துல யாரேனும் ஒருத்தர் ஃபாரின் போக சான்ஸ் வந்து எல்லாரையும் சந்தோஷத்துல ஆழ்த்தும். நல்லதோர் எதிர்காலத்துக்கு வித்திடுவீங்க. அலுவலகத்தில் வேலைகள் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். பிஸினஸ் அல்லது தொழில்ல சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருக்கறது பெட்டர். பயணம் நிறையப் போக வேண்டி வரும். விமானப் பயணமும் இருக்கும்.
சந்திராஷ்டமம் : ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
இந்த வாரம் பல வகையான உயர்ந்த வாகனங்களில் பயண செய்யும் வாய்ப்பும் அதிர்ஷ்டமும் அமையும். பிரபலமானவர்களின் நட்பு ஏற்படும் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். எச்சரிக்கையுடன் செயல்பட்டு எதிரிகளின் திட்டங்களை முறியடிப்பீங்க. அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவீங்க. நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான பணச் செலவுகள் ஏற்படும் நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீங்க. மருத்துவம், காவல்துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வேலைப்பளு கூடும். கணவருடன்/ ஒய்ஃபுடன் சண்டை வரும்போலிருந்தால் வெள்ளைக் கொடி பறக்கவிடுங்க.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 3 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
இந்த வாரம் சுபச் செய்திகள் வரும். ஸோ மனசுல சந்தோஷம் ஏற்படும். தனவரவு அதிகமாவதால் தான தருமங்களில் ஈடுபாடு ஏற்படும். சந்தோஷமாய்க் கடைங்க.. மார்க்கெட்.. மால்களுக்குப் போய்க் கார்டைத் தேய்ப்பீங்க. மாணவர்கள் தங்கள் தெளிவான அறிவியல் பாடங்களைச் சுலபமாக கிரகித்துக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறுவார். டீன் ஏஜ் மாணவர்களின் சாதனைகள் காரணமா அவர்களின் பெற்றோர்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். அரசுப் பணி புரிபவர்களுக்கும் பாலிடிக்ஸ்ல உள்ளவங்களுக்கும் அனுகூலமாகும் மற்றும், அற்புதமாகவும் இருக்கும். எல்லாம் சாதகமாகவே அமையும். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. சிலர் வெளியூருக்குப் போய் அங்கே தங்கி இருக்க நேரும். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் பெற சான்ஸ் கெடைக்கும். தங்கள் முயற்சிகளில் முயற்சிகளில் இளவயசுக் காரங்க வெற்றி பெறுவாங்க.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 6 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
இந்த வாரம் இந்த ராசியைச் சேர்ந்த சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். குடும்பத்துல மகிழ்ச்சி அதிகரிக்கும். நெருங்கிய சொந்தக்காரங்க அல்லது நண்பர்கள் மாதிரி நடிக்கறவங்களோட போட்டி பொறாமைகள் அதிகமாகும். டோன்ட் ஒர்ரி. உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது எதிர்பாராத தனவரவு ஏற்படும். புத்திர பாக்கியம், பதவி உயர்வு, புதிய தொழில் வாய்ப்புகள் ஏற்படும். பண விஷயமான சிந்தனைகள் எழும். சிலர் காவல்துறை பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். செய்யும் தொழிலில் தடைகள் ஏற்படலாம். தந்தை வழி உறவுகள் மூலம் கடுகு சைஸ் தொல்லை ஏற்படலாம். குழந்தைகள் மூலம் அவமானமும், மனக்கலக்கம் ஆகியவை ஏற்படலாம். அரசாங்க வகை இலாபத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் தொழிலில் இலாபம் ஏற்படலாம். சிலருக்குப் பொருளாதாரச் சிக்கல்கள் நிலவும்.
விருச்சிகம்
இந்த வாரம் வீட்டில் உங்களோடு உள்ள அன்பு மிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். வீட்டிலேயும் ஆபீஸ்லயும் மகிழ்ச்சி பொங்க, பொழுதை கழிப்பீங்க. மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி தாமதப்படும். புது வீடு கட்டிக் குடியேறும் காலம் தாமதமாகும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள் தாமதப்படும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் மற்றும் உதவிகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். ஒங்களோட திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். இது நாள் வரை போராடி வந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக வெற்றி அடையும். தன்னம்பிக்கை மட்டும் அப்ப்ப குறையும். அதை யாராவது பாசிட்டிவ் நண்பர்கள் மூலம் ரீசார்ஜ் பண்ணிக்குங்க. அம்மா கூட சண்டை வேணாம்.
தனுசு
இந்த வாரம் குடும்பத்தார் ஒத்துழைப்பால் மனசும் குடும்பமும் மகிழும். வீட்டில் நவீன உபகரணங்கள் பலவற்றை வாங்க முயன்றாலும் கடன் அதிகம் வாங்க வேணாம் என்ற கால்குலேஷன் காரணமாய்த் தாமதப்படும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு குறைவாக வரும். அலுவலக மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் ஆதராவால் முன்னேற்றம் சாத்தியப்படும். நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த பழைய உறவுகளின் வரவு மகிழ்வைத் தரும். அவங்களால முன் எப்போதோ செய்த ஒரு நற்செயலுக்கான நற்பலன் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் தீர்த்து வைக்கப்படும். வாடகை போன்ற இனங்களால் பண வரவு கிடைக்கும். சில விஷயங்களில் முடிவு எடுக்க முடியாமல் சிறு திணறலும் திகைப்பும் ஏற்பட்டாலும் அனுபவ அறிவு மற்றும் சாதுர்யத்தால் ஜெயிப்பீங்க.
மகரம்
இந்த வாரம், ஆண்கள் மனைவியை மகிழ்விக்க, புதிய ஆடைகள், ஆபரணங்கள் என வாங்கிக் கொடுத்து அசத்துவாங்க. குழந்தைங்க சாதனை மனசுல பெருமிதம் ஏற்படுத்தும். கலைஞர்களுக்கு சிறப்பான வாரம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, கைநிறைய முன் பணம் பெற்று மகிழ்வீங்க. தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இவ்ளோ காலமா இருந்துக்கிட்டிருந்த இழுபறி நிலைகள் போலீசைப் பார்த்த திருடன் மாதிரி விலகும், சிலருக்கு வருமான வரி பிரச்சனைகள் தலைதூக்கலாம் எனவே, கம்பெனி கணக்குகளை சீராக எழுதி வைக்கவும். இல்லாட்டி சிக்கல்களைச் சந்திக்கலாம். பிரச்னை வருமுன் காப்பதுதானே புத்திசாலித்தனம். வீட்ல மட்டுமில்லாம ஆபீஸ்லயும் பிடிவாதங்களை தளர்த்தினால் பிணக்குகள் தீரும் பிளஸ் நல்லபடியா விஷயங்கள் முடியும். காரியம் பெரிதா வீரியம் பெரிதா?
கும்பம்
இந்த வாரம் உங்க கெத்தை விட்டுக் குடுக்க வேண்டியிருக்கலாம். பாசத்துக்கு முன்னாடி வைராக்கியம் தூளாகலாம். மனசு வருத்த்தோட ஒரு முடிவு எடுப்பீங்க. இறங்கித்தான் போவீங்க. முன்னே சொன்ன சபத வார்த்தைகள் காத்தோடு போகும். ஆபீசில் முன்னே கழற்றி விட்ட பகைவர்கள் இப்போது நட்பாவாங்க. நல்லவங்களோட அட்வைஸுங்க கெடைக்கும். கோவில் கோவிலாப் போவீங்க. குலதெய்வத்தை வழிபடுவீங்க. மனைவி/ கணவர் வழியில் உள்ளவங்க டாமினேஷன் டென்ஷன் கொடுத்தாலும் பழக்கம் காரணமா சமாளிச்சுடுவீங்க. சகோதர சகோதரிங்களுக்கு ஆஸ்பத்திரி சம்பந்தமான உதவிங்களோ.. சுப நிகழ்ச்சி காரணமாய் ஹெல்ப்போ செய்ய வேண்டி வரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், மேலதிகாரிகளின் பாராட்டுகளும், கிடைக்கும் சலுகைகளும் உங்களை ஹாப்பியா ஆக்கும்.
மீனம்
எல்லா விஷயங்களும் கொஞ்சம் நிதானப்போக்குதான் நடக்கும். ஒரு முறைக்கு நாலு முறை போய்த்தான் முடிக்க வேண்டியிருக்கும். இட்ஸ் ஓகே. எண்ட் ரிசல்ட் நல்லபடி இருக்கும். அதுதானே நமக்கு வேணும். குழந்தை குட்டிங்க.. சகோதர சகோதரிங்க ஆகியோருடைய நெருக்கம்.. அன்பு .. ஹெல்ப் ஆகியவை கெடைக்கும். பிஸினஸ் அல்லது தொழில்ல எதிர்பார்த்தபடி விற்பனையும் லாபமும் கிடைக்கும். பணம் கொடுக்கல் – வாங்கலில் கவனம் தேவை. பழைய பாக்கிகளை வசூலிப்பதற்குள் உன் பாடு என் பாடு என்றானாலும் வர வேண்டிய தொகை இந்த வாரம் வந்துடும். மனசுல இருந்த பாரங்கள் குறைய ஆரம்பிக்கும். நீங்க ஆசானாய்.. குருவாய் மதிக்கும் ஒருத்தர் உங்களுக்கு உதவிகரமா துணைக்கு வருவதால் லைஃப் சுலபமாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஹெல்த்தில் குறிப்பாக காலில் அடிபடாதபடி கவனம் தேவை.