மேஷம்

அம்மாவுடன் பிரச்சினை வராமல் பார்த்துக்குங்க. அவங்க பொறுமை யைச்க சோதிக்காதீங்க. வாகனம் வாங்க் அவசரம் வேண்டாம். கொஞ்சம் பொறுங்க. அதற்கு வேளை தானாக வரும். நீங்க நினைச்சதைவிட கிராண்டாய் வாங்குவீங்க. வெளிநாட்டில் படிக்க விரும்பறவங்களுக்கு சூப்பர் நல்ல செய்தி காத்திருக்கு. குழந்தைகளுக்குப் புகழும் பெருமையும் ஏற்படும். அவங்க மேடைமேல கைதட்டல் வாங்கப் போறதைப் பார்த்துப் பெருமையடைவீங்க.  ஆரோக்யத்தை அலட்சியம் செய்யாதீங்க. அதைக் கெடுக்கக்கூடிய எந்தப் பழக்கத்திலும் ஈடுபடாதீங்க.

ரிஷபம்

கணவருக்கு/ மனைவிக்கு எந்த முன்னேற்றமும் சற்று மெதுவாக இருக்கும் என்பதால் கவலையோ டென்ஷனோ வேண்டாம். எல்லாம் தன்னால் நல்லபடியாக முடியும்னு மட்டும் ஷ்யூராய் நம்புங்க… போதும். மம்மிக்கு அலுவலகத்தில் பாராட்டுக் கிடைக்கும். நண்பர்கள் வழிகாட்டி களாய் இருந்து நல்ல முறையில் உதவுவாங்க. அவங்களால  பெரிய நன்மைகள் ஏற்படும்.அதனால அவங்களை அநாவசியமாய்ப் பகைச்சுக்க வேணாங்க. ஆமாம். சொல்லிட்டேன்.

மிதுனம்

குடும்பத்தில் யாரேனும் வெளிநாடு போகத் திட்டமிட்டு அது பல கால மாய்த் தள்ளிப்போயிக்கிட்டே இருந்துச்சா? டோன்ட் ஒர்ரி. இதோ வேளை வந்தாச்சு. அவங்களை பாஸ்போர்ட்டை சரிபார்த்து வெச்சுக்கச் சொல் லுங்க. டிக்கெட்டும் விசாவும் இதோ ரெடியாயிடும். மம்மிக்கு அரசாங் கத்தால் நன்மை ஏற்படும். உங்கள் குடும்ப பிசினஸ கொடிகட்டிப் பறக்கும். கவலை வேண்டாம். குழந்தைங்க வாழ்க்கைல நன்மையும் சநிதோஷமும் வெற்றியும் வரும். அவங்களைப் பற்றி உங்களுக்கு இருந்த பயங்கள் தீரும்.

சந்திராஷ்டமம் : செப்டம்பம் 29 முதல் அக்டோபர் 2 வரை

கடகம்

வெளிநாடு போகப்போறீங்க. அல்லது வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் உங்களைத் தேடி வருவாங்க. ஏராளமான பொருட்கள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் உள்ளவங்களுக்குத் திருமணம் நடக்கும். அது காதல் கல்யாணமாக இருக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைங்க வாழ்க்கையில் முன்னேற்றம் சற்று ஸ்லோவாய் இருக்கும். அதற்காக பயமெல்லாம் வேணாங்க. கணவருக்கு/ மனைவிக்கு சிறு டென்ஷன்கள் ஏற்படலாம். அதைப் பெரிதாக நினைத்துக் கவலைப்பட வேண்டாம்.

சந்திராஷ்டமம் : அக்டோபர் 2 முதல் அக்டோபர் 4 வரை

சிம்மம்

புகழும் பெருமையும் அதிகரிக்கும். நீங்கள் கலை அல்லது சினிமாத் துறையைச் சேர்ந்தவங்களாயிருந்தால்  கைதட்டலும் புகழ் வெளிச்சமும் உங்களுக்கே பெருமை தரும். வெளிநாட்டில் உள்ள உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவிகரமாயிருப்பாங்க. வெளிநாடு சம்பந்தமான பிசினஸ் எதுவும் செய்யறதாய் எண்ணம் இருந்தால் அது  நிறைவேறும். பேச்சில் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்பட்டு அது உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும் வியாபாரத்துக்கும் அலுவலக நன்மைக்கும் உதவும்

சந்திராஷ்டமம் : அக்டோபர் 4 முதல் அக்டோபர் 6 வரை

கன்னி  

அரசாங்க நன்மைகள் உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்கள் கணவர்/ மனைவிக்கும் கிடைக்கும். பாஸ்போர்ட்டுக்காகக் காத்திருக்கறவங்க ளுக்கு நல்ல செய்தி உடனே வரும். தந்தை வழியில் வர வேண்டிய சொத்துக்காகக் காத்திருக்கீங்களா? அப்படியானால் கிடைச்சாச்சுன்னு நினைச்சுக்குங்க. உறவினர்களிடம் கோப தாபங்கள் வேண்டாம். அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போங்க..  வெளிநாட்டு வருமானமும் லாபமும் அதிகரிக்கும்.

துலாம்

கணவருக்கு/ மனைவிக்கு நன்மைகள் அதிகரிக்கும். அவங்களுக்கு சம்பளம் உயரும். குழந்தைங்க வாழ்க்கையில் முன்னேற்றமும் பாராட்டும் அதிகரிக்கும். மம்மியின் ஆரோக்யத்தைக் கண்போல பார்த்துக்குங்க. உறவினர்களும் நண்பர்களும் உங்ககிட்ட எப்படிப் பேசினாலும் நீங்க அவங்க கிட்ட கொஞ்சம் பணிஞ்சுதான் போக வேண்டியிருக்கும். அதனால் பரவாயில்லை. மன அமைதி முக்கியம் இல்லையாங்க. அதனால கொஞ்சம் பொறுமையாவே போங்க.

விருச்சிகம்

நடப்பதெல்லாம் சில நாட்கள் கழித்தாவது நன்மையான பலனையே தரும் என்பது பற்றிச் சந்தேகம் வேண்டாங்க.   பொறுமைதான் முக்கியம். அதை மட்டும் மறந்துடாதீங்க. அலுவலகம் மாறும் எண்ணம் இருந்தால் சற்று யோசித்து.. சரியாத் திட்டமிட்டு நல்ல வெல்விஷர்களின் ஆலோசனை கேட்டு அதன்படி நடங்க. கட்டாயம் நல்ல வேலை மாற வாய்ப்பிருக்கு. உங்க தற்போதைய உத்யோகத்தில் உங்களுக்குப் பாராட்டும் பெருமையும் புகழும் அதிகரிக்கும் என்பதால் அனேகமாக வேலை மாறும் எண்ணம் வராது.

தனுசு

சில பல தடைகள் ஏற்பட்டாலும் உங்க்ளோட இயல்பான பொறுமையும் நல்ல  அணுகுமுறையும் பிரேயர்களும் வெற்றி தரும். பேசும்போது மட்டும் வார்த்தைகளை மிகவும் கவனமாய்க் கையாளுங்க. பிரச்சினை வராது. குடும்பத்தில் சின்னச்சின்னக் குழப்பங்கள் ஏற்படும், நீங்க எளிமை யாய்த் தீர்வு காணுவீங்க. எனவே விஷயங்களை அதன் போக்கில் விடுங்க. திடீர் திடீர் அதிருஷ்டங்கள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பெரிய அளவில் ஜாக்பாட் போல் நன்மை வரும்.

மகரம்

வெளியூர் வெளிநாடுன்னு போவீங்க. என்ஜாய். சிலர் வேலை மாறும்படி யான சூழ்நிலை ஏற்படுங்க..  சற்று அதிருப்தியான  சூழல் ஏற்பட்டாலும் சகிச்சுக்குங்க. சீக்கிரம் சரியாகும். வீட்டிலும் வெளியிலும் அனுசரிச்சுப் போக வேண்டியிருக்கும். பிரபலமானவர்களின் புகழ் முன்பளவு இல்லை  என்கிற மாதிரி ஒரு சிறுபிரமை ஏற்படக்கூடும். ஜஸ்ட் பொறுத்துக்குங்க. சக்கரம் சுழன்று மறுபடியும் மேலே வரும். சிறு சிறு தற்காலிக உடல் உபாதைகள் ஏற்படலாம்.  உடனே சரியாகிவிடும்.

கும்பம்

வேலை மாற  வேண்டிய அவசியம் மிகவும் தீவிரமாய் இருந்தாலன்றி இருக்கும் இடத்தில் அனசரித்துப் போகப் பாருங்க. எல்லாப்பிரச்சினையும்  சீக்கிரத்தில் சரியாகும். வெளிநாட்டு வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு என்ற நிலையில் அதைத் தக்க வெச்சுகிகுங்க. அவசரப்பட்டு விட்டுடாதீங்க. காதல் திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்குள் நல்ல இணக்கமான மகிழ்ச்சி நிலவும். உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். பெரிய அதிருஷ்டங்கள் திடீர்னு உங்களை அரவணைக்கும். டாடிக்கு அதிருஷ்டம் ஏற்படும்.  

மீனம்

குழந்தைங்களுக்கு வெளிநாட்டிலிருந்து அதிருஷ்டம் ஏற்படும். வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பயம் வேண்டாம். சரியாகும். உடனே முறையான சிகிச்சை மட்டும் எடுத்துடுங்க. வெளிநாட்டு வருமா னங்கள் வரும். வெளிநாட்டு வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு உடனே கிடைக்கும். வெளிநாடு போக வாய்ப்பு வரும். அல்லது அங்கிருக்கும் குழந்தைகளைச் சந்திக்கவும் வாய்ப்பு வரலாம். கணவருக்கு/ மனைவிக்கு அரசாங்கத்திலிருந்து நமைகள் ஏற்படும்.