வார ராசிபலன் 6-10-17 முதல் 12-10-17 வரை – வேதா கோபாலன்

 

மேஷம்

நன்மையும் லாபங்களும் நற்சிந்ததையும் உங்க வாழ்விலும் மனசிலும் கூடிக்கிட்டே போகுங்க.  வெளிநாட்டு உத்யோகம் கிடைக்கும். மூட்டை முடிச்சுகளையும் கட்டு சாதத்தையும் கட்டிக்கிட்டு ரெடியாயிடுங்க.  ஒரு வேளை நீங்க ஆல்ரெடி வெளிநாட்டில் இருக்கறவங்கன்னா உங்க மம்மி உங்களைப் பார்க்க வருவாங்க.  ஏர்போர்ட்டில் போய் சந்தோஷமாய்க் கூட்டிக்கிட்டு வருவீங்க.  குழந்தைங்க புகழும் பெருமையும் அடை வாங்க., கலைத்துறையில் உள்ளவங்களும் கன்ஸ்ட்க்ஷனில் உள்ளவங்களும் மூட்டை மூட்டையாய்ப் பணம் பண்ணுவீங்க.

ரிஷபம்

திடீர்னு வேலை மாறுவீங்க. அலுவலக சம்பந்தமான பயணங்கள் செமத்தியா இருக்கும். டூர் போயிக்கிட்டே இருப்பீங்க.  சகோதர சகோதரிகளுக்குப் பிரச்சினை ஏற்பட்டாலும் நீங்க உதவுவதால்  அவங்க சமாளிச்சு நிமிர்ந்துடுவாங்க.  மம்மிக்குப் புகழும் பெருமையும் கைதட்டலும் கிடைக்கும். குழந்தைகள் மிகவும் உயர்வடைவாங்க.  அவங்க மாணவர்கள்னாலும்  சரி.. தொழில் செய்பவர்னாலும் சரி மிகவும் லாபமும் நன்மையும் கிடைக்கும்.  அரசாங்க நன்மைகள் உங்களுக்கு ஏராளமாய் உண்டு.  எக்கச்சக்கமாய் சந்தோஷ செலவுளும் சுப செலவுகளும் போட்டி போட்டுக்கிட்டு உங்களைத் தேடி ஓடி வந்துக்கிட்டேயிருக்கும்.

மிதுனம்

ஆரோக்யத்தை ஏற்கனவே கண்ணுக்குள்ள இருக்கும் பாப்பா மாதிரி பார்த்துக்கணும்னு ஒவ்வொருத்தரும் சொல்லிக்கிட்டுத் திரியறோம். இந்த நிலையில் நீங்க என்னடான்னா அதைக் கெடுத்துக்கவும் முயற்சி எடுக்கறீங்க.. ஏங்க? சரியாய் வேளா வேளைக்குச் சாப்பிடுங்க… சுத்தமான சுகாதாரமான வாழ்க்கை வாழுங்க.  பிறகு ஏனுங்க பிரச்சினை வரப்போகுது?  மம்மி அருமையா ஏதோ ஐடியா செய்து குடும்பங்கள் சேர வழி வகை செய்யப்போறாங்க.   அவங்க சம்பாத்தியமும் அதிகரிக்கும்,வாகனம் அல்லது வீடு வாங்கப் போறீங்கப்பா

கடகம்

இத்தனை காலமாய் இல்லாத கோப உணர்ச்சி  உங்களை வாட்டும். வழியே தராதீங்க. குறிப்பாய்  அலுவல கத்தில் உங்க பொறுமைக்கு யார் உலை வைச்சாலும் சிரிச்சுக்கிட்டே வேடிக்கை பாருங்க. எகிறிடாதீங்க.  கல்வித் துறையில் உள்ளவங்களுக்கு அருமையான நல்ல நியூஸ் உண்டுங்க.    கணவன் மனைவின்னா இன்னிக்கு அடிச்சுப் பீங்க .. நாளைக்குச் சரியாயிடுவீங்க. இதில் யார் என்ன  சொல்ல இருக்கு? நீங்க ஏன் மூணாவது மனுஷங்களை உங்க வாழ்க்கையில் தீர்மானங்கள் செய்ய அனுமதிக்கறீங்க? என்னதான் அப்பா அம்மா என்றாலும் ஒரு தம்பதியைப் பொருத்த வரையில்  அவங்களும் மூணாவது மனுஷங்கதாங்க

சிம்மம்

யம்மாடீ, ஏற்கனவே கோபக்காரங்க. இப்ப என்ன காரணம் கிடைக்கும்னு அலையறீங்க போல… ஏங்க உங்களுக்கு இந்த வேலை? சும்மா வாழ்க்கையில் முன்னேற்றப்பாதை சூப்பராய்க் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிச்சிருக்கு. இப்ப போயி அநாவசியமாய் உங்க மூடையும் நல்லுறவுகளையும் கெடுத்துப்பாங்களா என்ன?  வெளிநாட்டில் உள்ள நண்பர்களால் பெரிய நன்மை ஒண்ணு ஏற்படப்போகுதுங்க.  குடும்பத்தில் யாருக்கோ அரசாங்க நன்மை அல்லது உத்யோகம் கிடைக்கப்போகுதுங்க.   பெரிய அளவில் லாபமோ நன்மையோ ஏற்படலைன்னு டென்ஷன் வேணாம்.  எல்லாம் தானாய் வரும்.

கன்னி

டிரஸ் .. நகை..  என்று வாங்க நிறையச் செலவு செய்வீங்க.  குடும்பத்தில் யாருக்கோ மேரேஜ் நடக்கவும் வாய்ப்பு இருக்குங்க.  உங்க வார்த்தைகளால்  நன்மை ஏற்படும். குடும்பத்தில் இத்தனை நாட்கள் காணாமல் போயிருந்த ஒற்றுமை திடீர்னு வந்து சேரும். குறிப்பாய் சகோதர சகோதரிகளுடன் ஒண்ணாய்ச் சேர்ந்து சந்தோஷமாய் இருப்பீங்க.  வெளிநாட்டிலிருந்து  நீங்க எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருந்த லாபமும் வருமானமும் ஒரு வழியா உங்களை வந்தடைந்து உங்களைச் சந்தோஷக்குளத்தில் தள்ளும்.  குழந்தைங்க கொஞ்சம் டென்ஷன் செய்தால் பொறுமையாயிருங்க. சீக்கிரம் சரியாயிடுவாங்க

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 6 முதல் அக்டோபர் 8 வரை

துலாம்

அடிச்சுது பாருங்க ஜாக்பாட். வாழ்க்கைன்னா இதுதான் வாழ்க்கை. நல்ல நேரம்னா இதுதான நல்ல நேரம்.   குழந்தை வரம் வேண்டியவங்க.. கல்யாண ஆசை வந்தும் வேளை வராமல் காத்துக்கிட்டிருந்தவங்க என்று  எல்லாருக்கும் விடிவுகாலம்தான். சந்தோஷம்தானே? மம்மியுடன் சண்டையா? நோ நோ. கூடவே கூடாது.  இரண்டு வகையான லாபங்கள்  அல்லது வருமானங்கள் வரும்.  கல்விக்காகச் செய்யும் செலவுகளால் நன்மையான பலன் கிடைக்கும்.  புதிய வெளிநாட்டு வேலை கிடைக்கும்.  அரசாங்கம் சம்பந்தமான விஷயங்களுக்காக செலவு செய்ய வேண்டி வரலாம். நல்ல பலன் கிடைக்கும் என்பதால் அதைச் செலவு அல்ல என்றும் முதலீடு என்றும் நினைங்கப்பா.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 8 முதல் அக்டோபர் 11 வரை

விருச்சிகம்

கலைத்துறைல இருக்கறவங்களுக்குப் புதிய வாய்ப்புகள் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி சந்தோஷம் குடுக்கும்.  அரசாங்க உத்யோகத்துக்காகக் காத்துக்கிட்டிருந்தவங்களுக்கு நல்ல செய்தி உண்டு. அல்லது அரசாங்க  உத்யோகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நன்மைக்காகக் காத்திருந்தவங்களுக்கு  அவங்க எதிர்பார்த்த நன்மைகள் உண்டு.  எங்கும் எதிலும் சற்று நிதானப் போக்குதான் இருக்கும். சலிச்சுக்காம பொருமையா முயற்சி செய்ங்க.  கடைசியில் நல்லபடியா முடியும்.  நிறைய செலவுங்க இருக்கும். ஆனால் கவலையோ கஷ்டங்களோ தரும் செலவாயிருக்காது.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 11 முதல் அக்டோபர் 13 வரை

தனுசு

அப்பாவுடன் கொஞ்சம் மனஸ்தாபம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.  அனுசரிச்சுப் போங்க. அவர் உங்க நன்மைக்காகத்தான் எதையும் சொல்றார் செய்யறார்னு நம்புங்க.   அவருக்கு அலுவலகத்தில் பாராட்டும் புகழும் கைதட்டலும் கிடைக்கும்.  அருமையான .. உங்க படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும். காத்திருந்த நன்மைகள் எல்லாம் உங்களை வந்தடையும்.  ஆசிரியர்களுக்கு       வருமானம் அதிகரிக்கும்.  பேச்சில் அபரிமிதமான கவனம் செலுத்தணுங்க.      வெளிநாட்டு அரசாங்க உத்யோகம் கிடைக்க வாய்ப்பிருக்கு.  ஆரோக்யத்தை மிக நல்ல முறைல பார்த்துக்குங்க.

மகரம்

கணவருக்கு/ மனைவிக்கு வெளிநாட்டு உத்யோகம் கிடைக்கும்.  சிறு நீரகம் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராதபடி சுத்தமும் சுகாதாரமுமாய் இருந்தால் எந்த பிராப்ளமும் இல்லைங்க.  நீங்க எதிர்பார்த்த சம்பளத்தில்  நல்ல உத்யோகம் கிடைக்காட்டியும்  கௌரவமான உத்யோகம் கிடைக்கும்.  ஏற்கனவே உள்ள உத்யோகத்தில் சம்பள உயர்வு எதிர்பார்த்துக்கிட்டிருந்தவங்களுக்கு சற்றே தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டாலும் நினைத்தது நிறைவேறும்.  குழந்தைங்களோட வாழ்க்கைல பெரிய பிரச்சினைன்னு நீங்களா நினைச்சுக்காதீங்க. அவங்க பாதுகாப்பாய்த்தான் இருக்காங்க.

கும்பம்

கணவன் மனைவிக்குள் கொஞ்சம் கசமுசா என்று சண்டை சச்சரவுகள் இருந்தாலும்கூட சட்டென்று  சமாதானமாகி ஜாலியாய்ப் பழம் விட்டுடுவீங்க.   வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு இத்தனை காலமாய் இருந்து வந்த டென்ஷன்கள் இனி இருக்காது.  விரயமும் இருக்காது.  இயந்திரங்கள் வாகனங்கள் இரும்புப் பொருட்கள் சம்பந்தமான தொழில் செய்பவர்கள் அல்லது அந்தமாதிரி நிறுவனங்களில் வேலை பார்ப்ப வங்களுக்கு நல்லகாலம் பொறந்தாச்சு. உஷ்ண சம்பந்தமான ஆரோக்யப் பிரச்சினைகள் இருக்கலாம். கவனமாய் இருங்க.  வாகனம் வாங்குவீங்க.

மீனம்

கணவருடன்/ மனைவியுடன் மல்யுத்தத்துக்கு நிற்க வேண்டாமே.. ப்ளீஸ்.  உங்களின் புத்திசாலித்தனமான செயல்கள் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.   வெளிநாட்டுப் பயணங்கள் இருக்கும். வெளிநாட்டி லிருந்து லாபமும் வருமானமும் வரும்.  ஜீரண சம்பந்தமான ஆரோக்யப் பிரச்சினைகள் ஏற்பட வழியில்லா மல் உணவு முறைகளைச் சரியாக வகுத்துக்கொள்ளுங்க.  குழந்தைங்க பயணத்தால் நன்மை அடைவாங்க. எதிர்பாலின நண்பர்களால் நன்மையும் சந்தோஷமும்  கிடைக்கும்.  சகோதர சகோதரிகளுக்கு  உங்க உதவி தேவைப்படலாம்.  பழசை மறந்து கைகொடுங்க  அவங்களுக்கு
English Summary
Patrikai.com weekly Rasi  prediction from 06.10.2017 to 12.10.2017