வார ராசிபலன்: 27.5.2022  முதல் 2.6.2022  வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

வழக்குகளில் வெற்றி பெறுவீங்க. கல்வியில் முன்னேற்றம் அடைவீங்க. மேற்படிப்பில் வெற்றி பெறுவீங்க. அரசாங்க வேலைக்கு முயற்சி செய்வீங்க.. ரத்த காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத சச்சரவுகள் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிடாதபடி கவனமா இருந்துக்குங்க. சொந்த வீடு வாங்கும் அல்லது கட்டும் யோகம் உண்டு. சொத்து சுகம் சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பீங்க. வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். மனம் கவர்ந்த பெண்ணை மணப்பதற்கு முயற்சி செய்வீங்க‌. வெற்றியும் பெறுவீங்க. வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீங்க. ஹோட்டல், வாகன உதிரிப்பாகங்கள், இரும்பு வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவு இருக்கும். வீட்டில் ஏதாவது பிரச்சனை உருவாகிக்கொண்டிருந்த நபர் மனம் திருந்துவார். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீங்க. பெரியோர்களின் சந்திப்பு மனசுக்கு நிம்மதியைக் குடுக்கும்.

 ரிஷபம்

விளையாட்டுக்குப் பேசி வினையை விலைக்கு வாங்காதீங்க. நீங்க நினைச்ச வேலை நடக்கவில்லையே என்று கோபப்படாதீங்க. நீங்க வழிகாட்டியா நெனைக்கறவங்க மூலமா நல்ல பலன் கிடைக்கும் வியாபாரத்துல வித்தியாசமான போக்கை கடைப்பிடிப்பீங்க. வாடிக்கை யாளர்களைக் கவர்ந்து இழுப்பீங்க. பொருளாதாரச் சேமிப்பை அதிகப்படுத்துவீங்க. தொழில் துறைக்குத் தேவையான வங்கிக் கடன் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடக்கும்‌. பங்குப் பரிவர்த்தனையில் சாதனை படைப்பீங்க. வியாபாரத்துல ஏற்படும் பிரச்னைங்களை அறிவுபூர்வமாக சரி பண்ணுவீங்க. தொழிலை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்வீங்க. புதிய ஆர்டர்கள் பெறுவீங்க. நிலத்தில் முதலீடு செய்வீங்க. பங்குப் பரிவர்த்தனை சிறப்பான லாபத்தைத் தரும்‌. சின்ன வியாபாரமாக இருந்தாலும் நல்ல வருமானம் கிடைக்கும். வேலையிடத்தில் பாராட்டப்படுவீங்க.

மிதுனம்

அலைச்சல் ஏற்பட்டாலும் வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். ஆலய தரிசனம் செய்வீங்க‌. தொழிலுக்கு ஏற்பட்ட மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீங்க.  முடிய வேண்டிய வேலை இழுத்துக்கொண்டே செல்கிறது என மனம் வேதனைப்படாதீங்க. இந்த வாரம் நல்லபடியா முடியும். ஓகேயா? தகப்பனாருக்கு மருத்துவச் செலவு செய்வீங்க அரசு வேலைகள் தடையின்றி நடக்கும். வேலைக்காக காத்திருந்தவங்களுக்கு குட் நியூஸ் கிடைக்கும். மணல் வியாபாரத்தில் லாபம் கொழிக்கும். செங்கல் வியாபாரம் சிறப்பாக நடக்கும். கட்டுமானத் தொழில் கணிசமான லாபத்தைக் கொடுக்கும். பதவி உயர்வை எதிர்பார்த்தவங்களுக்கு பரிசாக ஊதிய உயர்வும் கிடைக்கும். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

கடகம்

பேராசிரியர்கள் பெரும் மரியாதை அடைவாங்க. வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்வீங்க. சின்னச் சின்ன உடல் உபாதைகள் உருவாகும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கணுங்க. ப்ளீஸ். ஆதாயம் கிடைக்கிறது என்று நினைத்து அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீங்க. சிக்கலில் மாட்டிக்குவீங்க. வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும். எதிர்பார்த்த பண உதவி தடையின்றி வரும். பிள்ளைங்களால பிரச்சனை உண்டாகி பின்னர் விலகும். உறவுக்குள் இருந்த சிக்கல்களைத் தீர்ப்பீங்க. வெளி வட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.  யார் வம்புக்கும் போக மாட்டீங்க. வந்த வம்பையும் விட மாட்டீங்க‌. வழக்குகளில் வெற்றி பெறுவீங்க. பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்சனைகள் பெரிய மனிதர்களால் தீரும். அலட்சியமா நீங்க வாங்கிப் போட்ட நிலம் அபரிமிதமான லாபத்தோடு விற்பனையாகும்.

சிம்மம்

அரசுத்துறை காண்ட்ராக்டர்கள் அதிக வருமானம் பெறுவாங்க. ஊழியர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியமும் பாராட்டும் கிடைக்கும்‌. அரசாங்க வேலைகள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். பட்டா மாறுதல்களை சுலபமாய்ச் செய்வீங்க. மாணவங்க மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வாங்க. இவனா உருப்படப் போகிறான் என்று ஏளனம் செய்தவர்களுக்கு முன்னால் உயர்ந்து காட்டுவீங்க. விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் சேமிப்பாக உயரும். கணவன் மனைவி உறவு களிப்போடு இருக்கும். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீங்க. அடுத்தவங்க விஷயத்தில் தலையிடாதீங்க. தொழிலை விரிவுபடுத்துவீங்க. தாயார் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். வெளியூர்ப் பயணங்கள் செல்வீங்க. லோன் போட்டிருந்தீங்கன்னா, சின்ன சஸ்பென்ஸ்க்குப் பிறகு சூப்பரா கெடைக்கும்.

கன்னி

திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவீங்க. வியாபாரப் போட்டிகளில் உங்களுக்குச் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கை யாளர்களின் தேவை அறிந்து  நடந்துக்குங்க.  இரும்பு, கத்தி போன்ற உபகரணங்களைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருங்க. துணிந்து காரியம் பார்ப்பதைவிட பணிந்து பலன் பெறுவதே சிறப்பு.அரசு வேலைவாய்ப்பு கிட்டும். வழக்கறிஞர்கள் சிறப்போடு வாதாடுவாங்க. அடுத்தவர் விஷயத்தில் பஞ்சாயத்துப் பண்ண ஆர்வம் காட்டாதீங்க. நீங்களும் சேர்ந்து மாட்டிக்குவீங்க. வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். நீங்க எதிர்பார்த்து காத்திருந்த சில காரியங்களில் இடையூறு ஏற்படும். கணவன் – மனைவியிடையே சந்தோஷம் அதிகரிக்கும். கைப் பொருட்களை பத்திரமாக வைத்திருங்கள். எஸ்பெஷலி பயணங்களின்போது கேர்ஃபுல்லா இருங்க.

சந்திராஷ்டமம் : மே மாதம் 27 முதல் மே மாதம் 29 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க.

துலாம்

வாகனங்கள் ஓட்டும் போது கேர்ஃபுல்லா இருங்கள். யாருக்கும் வாக்குக் குடுக்காதீங்க. தந்தையார் வகையில் பிரச்சினை உண்டாகலாம். அதையும் கடந்து செல்வீங்க. தொழிலில் சில சிக்கல்கள் தோன்றி மறையும். பணி செய்யும் இடத்தில் கவனமா இருங்க. வீணான பழிச்சொல்லை சுமக்காதபடி கேர்ஃபுல்லா இருந்துக்குங்க. பொறாமை கொண்ட சிலர் உங்கள் மீது குற்றம் சாட்டக்கூடும். இட்ஸ் ஓகே. அவங்களை இக்னோர் செய்துடுங்க. திருந்துவாங்க. இல்லறத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக புயல் வீசும். ஒருவர் பேச்சை ஒருவர் புரிந்துகொள்ள மாட்டார்கள். அண்டை வீட்டாரிடம் சண்டை வளர்க்காதீங்க. மனநிம்மதி பறி போகும்.  சாதுரியமாக காய் நகர்த்தி தொழிலில் வெற்றி காண்பீங்க. வியாபாரம் சிறப்பாக நடக்கும். மாணவங்க படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவாங்க‌. பெரியவங்களோட ஆதரவால் நல்ல காரியங்கள் நடக்கும். மணமாகாதவங்களுக்கு நல்ல வரன் அமையும்.

சந்திராஷ்டமம் : மே மாதம் 29 முதல் மே மாதம் 31 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க.

விருச்சிகம்

குழந்தைங்க இல்லையே என்று வருத்தப்பட்டவங்க மகிழ்ச்சி அடையும் வண்ணம் கரு தங்கும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகமாக இருக்கும். உங்களை புறம் பேசியவங்க சரண் அடைவாங்க. கூட்டாளிகளின் குணமறிந்து பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். குறுக்கு வழியில் எந்தக் காரியத்தையும் செய்ய நினைக்காதீங்க. தொழிலில் ஓரளவு ஆதாயம் கிடைத்தாலும் குடும்பத்தில் நிம்மதி குறையாம பார்த்துக்குங்கப்பா.  புது மனுஷங்க கிட்ட கவனமாக  நடந்துக்குங்க.  உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய் உங்களைத் தாக்கலாம். தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கத் தாமதமாகும். உங்களோட செல்வாக்கு உயரும். உங்கள் பேச்சுக்கு தக்க மரியாதை கிடைக்கும். வெளியிடங்களுக்கு நீங்க போகும்போது உங்க புகழைப் பேசுவாங்க.

சந்திராஷ்டமம் : மே மாதம் 31 முதல் ஜூன் மாதம் 3 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க.

தனுசு

தொழில்துறை நேர்த்தியாக நடக்கும். கட்டுமானத் தொழிலில் கணிசமான லாபம் கிடைக்கும். நடைபாதை வியாபாரிகள் நல்ல பலன் பெறுவாங்க. பங்குச் சந்தை அமோகமாக இருக்கும். பிள்ளைங்க கவனமாகப் படிக்க வேண்டும். தேர்வு எழுதும்போது மறந்து போகாமலிருக்க நல்லாப்படிச்சுக்கிட்டுப் போனா போதும்   ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஊன்றிப் படிச்சுப் பார்த்துட்டு அப்புறமாப் போடுங்க. அவசரப்பட்டு யாருக்கும் ஜாமீன் குடுக்காதீங்க. தொழிலுக்குப் போட்டியாக எதிரிகள் முளைப்பாங்க. திறமையான அணுகுமுறையால் அவற்றைக் கடந்து வருவீங்க. வேலை பார்க்குமிடத்தில் ஒங்க மேல உள்ள பொறாமை காரணமா யார் எது செய்தாலும் டோன்ட் ஒர்ரி. அவங்களால ஒண்ணும் செய்ய முடியாது. ஷேர் மார்க்கெட் டீலிங்குகள் மந்தமா இருந்தாலும் மோசமா இருக்காது. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும். கலைப் பொருட்களின் விற்பனை அமோகமாக இருக்கும்.

மகரம்

உத்தியோகம் பார்க்கறவங்க உற்சாகமா வேலை செய்ங்க. வெளியூர்ப் பயணங்களால சிறப்பான நன்மை கிடைக்காட்டியும் நிச்சயமா ஓரளவு நல்லது நடக்கும். பூர்வீகச் சொத்துக்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவீங்க. அது சூப்பரா முடிவுக்கு வந்து சந்தோஷப்படுத்தும். ஆனா எதிலும் நிதானப்போக்கு வேணுங்க. படபடன்னு அவசரப்பட்டு எதையும் செய்துடாதீங்க. மனைவி ஆசைப்பட்ட பொருளை அதிகம் செலவு செய்து வாங்கிக் கொடுப்பீங்க. சகோதர சகோதரிங்களால பணவிரயம் ஏற்பட்டாலும் நீங்களும் அவங்களும் ஹாப்பியா ஆயிடுவீங்க. அவங்க நன்றி சொல்லும்போது நெகிந்துபோயிடுவீங்க.  கவலையை ஒதுக்கிட்டு தொழிலில் கவனத்தைச் செலுத்துங்க. மனக் கலக்கத்தோடு இருந்துக்கிட்டிருந்த நீங்க துணிச்சலோட எந்தக் காரியத்தையும் செய்வீங்க. இரவு பகல் பாராமல் வேலை  பார்த்து சக்ஸஸ் ஆவீங்க.

கும்பம்

நண்பர்களிடமிருந்து நீங்க கேட்ட உதவி கிடைக்கும். தொழில் ஏற்றமாக இருக்கும். தோப்பு குத்தகை மூலம் பணம் கிடைக்கும். விவசாயத் தொழில் மேன்மை அடையும். திருமணமா… நமக்காக…? என்று கலக்கத்தோடு இருந்த இளைஞர்கள் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பாங்க. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீங்க. வாழ்க்கைப் பாதையில் சில தடைங்களும் தாமதங்களும் ஏற்படத்தான் செய்யும். அதைத் தாண்டிச் செல்வீங்க. ஆன்மிகப் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். குடும்ப தோஷம் நீங்க கோயில் வழிபாடு செய்வீங்க. வாக்குத் திறமையால் வழக்குகளில் வெற்றி பெறுவீங்க. குடும்பத்திலிருந்த பிரச்சனைகளை சரி செய்வீங்க. உங்களை வீழ்த்த எதிரிகள் சுறுசுறுப்பாகக் காய் நகர்த்துவாங்க‌ அவற்றை சாமர்த்தியமாகச் சமாளிப்பீங்க. நீங்க பயந்தபடி எதுவும் நடக்காது. கவலைப்படாதீங்க.

மீனம்

நீண்ட காலமா வாங்கணும்னு ஆசைப்பட்ட மனை அல்லது வீட்டை வாங்குவீங்க. ஆடை ஆபரணங்கள் வாங்கி மனைவியை மகிழ்ச்சிப்படுத்துவீங்க. பிள்ளைகளுக்காக நகைகள் வாங்கிச் சேர்ப்பீங்க. உறவினர்களில் இடையே இருந்த மனத்தாங்கல் விலகும். பெண்களுக்கு மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.. திடீர் பணவரவுகள் கிடைத்து திக்குமுக்காட வைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு வெற்றிகரமாக அமையும். வெளியூர்ப் பயணங்களால் அதிக நன்மை உண்டாகும். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். சந்திரனின் பயணங்கள் சாதகமான பலனைத் தரும். தொடர்ந்த துன்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையும். கணினித்துறையில் கணிசமான லாபம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெரியோர் சந்திப்பால் பெரும் பிரச்சினையில் இருந்து மீள்வீங்க. குழந்தைங்க மற்றும் அவங்க குடும்பத்தின் ஆரோக்யம் பற்றிய கவலை நீங்கும்.

More articles

Latest article