மேஷம்

சின்ன விஷயம் ஒண்ணு, நல்லபடியா முடிஞ்சு, அதன் காரணமா, மனநிறைவு ஏற்படும். உறவினர்கள் உங்க குரலுக்கு செவி சாய்ப்பாங்க. இதனால நீங்க நெனைச்ச நல்ல விஷயம் ஒண்ணு நல்லபடியா முடியும். தவிர ஒங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைங்களை நெறிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவீங்க. எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. சுபநிகழ்ச்சி  பற்றிய  பேச்சுகள் இந்த வாரம் முடிவாகும். பெண்கள், பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீங்க. செலவு அதிகமாயிருக்கும்தான்.. ஆனால் வருமானமும் கூடுதலாகப்போகுதேங்க. ஹாப்பிதானே? பேச்சினால நன்மைகள் நடக்கும்… உங்களுக்கு மட்டுமில்லை.. உங்களைச் சுற்றி உள்ள பலருக்கும்.. அல்லது அலுவலகத்திற்கு.. வாரக் கடைசியில் ஜாலியாய்ப் பொழுது கழியும்.

ரிஷபம்

உங்க வீட்ல யாருக்கோ திருமணமோ, சீமந்தமோ வேறு ஏதேனும்  விசேஷமோ வருதுங்க. சேலைங்களுக்கெல்லாம் அழகா பிளவுஸ் ரெடி  பண்ணுங்க… மனைவிக்குப் புது நெக்லஸ் வாங்கிக்குடுங்க. பொது விழா அல்லது அலுவலக விசேஷத்தில மைக் பிடிச்சு சூப்பராப் பேசி (அல்லது) பாடிப் பாராட்டு வாங்கப் போறீங்க பாருங்களேன். சிலருக்குக் குடும்பத்துடன் குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் சான்ஸ் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க் கைக்கும் சான்ஸ் உண்டு. தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கும். அவருடைய தேவையை நிறைவேற்றி மகிழ்வீங்க. வழக்குகளில் சாதகமான போக்கு ஏற்படும். இழுபறியாக இருந்த அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். இளைய சகோதரர்களால் உதவியும் உற்சாகமும் உண்டு.

மிதுனம்

மைக்குல மட்டுமல்லாமல் எங்கே.. எப்போது.. யாரிடம்.. எந்தச் சூழலில் பேச்சினாலும் வெற்றியும் செல்வாக்கும்.. அட்லீஸ்ட் பாராட்டாவது கியூவில் நிக்கும். திடீரென்று உத்யோக மாற்றங்கள் ஏற்படும். திடீர்  லாபங்கள் உண்டாகும். மருத்துவர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சம்பந்தமுள்ள துறைகளில் இருக்கறவங்களுக்கு லாபம் உண்டு. தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு  அரசின் சலுகை, வங்கிக் கடன் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவர்களின் சாமர்த்தியத்தால் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கக்கூடும். தாய்மாமன் வகையில் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படக்கூடும். தேவையில்லாத சகவாசத்திலிருந்து விடுபடுவீங்க. நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். சகோதரர்கள் உதவி கேட்டுத் தொந்தரவு செய்வாங்க.

கடகம்

கணவன் மனைவிக்கிடையே பிராப்ளம்ஸ் ஏற்படாதபடி அனுசரிச்சுக்கிட்டுப் போகணுங்க. புண்ணிய காரியங்கள் செய்வீங்க. எதுக்குங்க வேண்டாத விஷயங் களுக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கிட்டு பயந்து நடுங்கறீங்க? கடவுள் தோளில் எல்லா வெயிட்டையும் இறக்கி வெச்சு மனசை லைட்டாக்கிக்குங்க. பிரச்னையே இல்லைன்னு ரிசல்ட் வரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். அது எதிர்பாராத வகைல திடீர்னு அமைஞ்சாலும் சந்தோஷமும் லாபமும் அளிக்கும். பிசினஸ்ல விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். உங்க கீழ வேலை பார்க்கற பணியாளர்கள் பொறுப்புடன் வேலை பார்ப்பாங்க. சற்று கண்டிப்புடன் நடந்துகொண்டதன் பலன். சக பணியாளர்கள் அனுசரணையா இருப்பாங்க.

சிம்மம்

எல்லாம் நல்லபடியாத்தாங்க நடக்கும். கவலையே படாதீங்க. தடையும் தாமதமும்தானே ஆகுது? கிளைமேக்ஸ்ல நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க. அது புரியுதா இல்லையா? அந்தப் பொல்லாத கோபத்தை கேஸ் அடுப்பில போடுங்க. ஆமாம்.  சொல்லிட்டேன். பை த வே .. குருட்டாம்போக்குல வர்றதா நினைக்கற அதிருஷ்டத்தையெல்லாம் இப்போதைக்கு நம்பவே வேணாங்க. நேர்மையும் உழைப்பும் மட்டும்தான் உங்களை வின்னிங் போஸ்ட் தொட வைக்கும். கணவனின் /மனைவியின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி வந்து சேரும். அடகில் வைத்திருந்த நகைகளை மீட்கும் சான்ஸ்ம் சிலருக்கு ஏற்படும். தோழிகளின் ஆதரவு உற்சாகம் தரும். புண்ணியத் திருத்தல யாத்திரைகள் செல்வதால் மகிழ்ச்சியும் மன அமைதியும் ஏற்படும்.

கன்னி

இந்த வாரம் உங்களுக்கு இனிய வாரம். சீரான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனசுல மகிழ்ச்சி பொங்கும். அரசுப் பதவியில் உள்ளவங்களுடைய தயவால அனுகூலமான பலன்களை அடைவீங்க. உங்களால தவிர்க்க முடியக்கூடிய பயணத்திற்கெல்லாம்  ‘நோ’ தான் சொல்லணுங்க. வேறு வழியில்லாத அலுவலகப் பயணத்தை மட்டும் ஒப்புக்குங்க. ஜஸ்ட் கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் எல்லாம் சரியாகும். பல வழிகளிலும் இருந்தும் பணம் கூடுதலாக வரும். மனைவியுடன் / கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் இருக்க அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீங்க. இப்போதைக்கு மெதுவான முன்னேற்றம் இருந்தாலும் இதுதான் பிற்பாடு சக்கபோடு போடப்போகுது.

துலாம்

இந்த வாரம் பூமி, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். தொலை தூரப் பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும். திட்டமிட்டுச் செலவு செய்தால், வரவுக்கு மிஞ்சிய செலவுகள் குறையும்.  சகோதரர்களுக்கு ஏதோ ஜாக்பாட் அடிக்கப்போகுது. அவங்க கூட நல்லுறவு இருக்கும். அனுசரணை இருக்குங்க. ஒருத்தருக்கொருத்தர் உதவியாய் இருப்பீங்க. திடீர்னு வெளிநாட்டுக்க பேக் செய்ய வேண்டி வரலாம். சூட்கேஸ் ரெடியா?  பாஸ்போர் எங்கே.. ஷூக்கள் எங்கேன்னு கடைசி நிமிஷத்துல தேடும்படி வைச்சுக்காதீங்க. . பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை வாங்க சான்ஸ் இருக்கு.  மாணவர்கள், கல்வியில் வெற்றி பெறச் சற்று அதிகக் கவனமாகப் படிக்க வேண்டும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

புது வண்டி வாங்கப் போறீங்க/ அல்லது வாங்கியிருக்கீங்களே பார்த்து ஓட்டினா ஒரு பிரச்னையும் வராதுங்க. அலுவலகத்துல புதிய பொறுப்பு. அதிக சம்பளம். அபரிமிதமான மரியாதைன்னு உங்களை உயரத்தில் தூக்கி வைப்பாங்க. பட் வேலைப் பளுதான் கொஞ்சம் அதிகமா இருக்கும். அதை ஊதித்தள்ளுவீங்க.  சின்னச்சின்ன விரய விஷயங்களையெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டுங்கங்க. ப்ளீஸ்…  கடும் முயற்சிகளுக்கு பிறகு எண்ணிய எண்ணங்கள்  நல்லபடியா நிறை வேறும். சிலருக்கு இருக்கும் வேலையை விட்டுவிட்டு, வேறு நல்ல வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். உறவினர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.  மனசுல தன்னம்பிக்கையை வளர்த்துக்குங்க.

தனுசு

திடீர் பண வரவால கொஞ்சம் சந்தோஷத்துல திணறித்தான் போவீங்க. வாழ்க்கையிலும் தொழிலிலும் சின்ன அளவிலோ.. பெரிய  அளவிலோ.. சிறப்பான மாற்றத்தை எதிர் நோக்குவீங்க. எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் உயர்வைக் காண்பீங்க. எஸ்பெஷலி ஃபேமிலியில் சந்தோஷம் அதிகரிக்கும். எல்லா நன்மைங்களும்  ஆரம்பத்துல இப்போதைக்கு நிதானப்போக்குல நடக்குமோ என்னவோ… டோன்ட் ஒர்ரி. அப்புறம் இரட்டிப்பு நன்மைகள்தான்.  இந்த வாரம் வீட்டில் சுகபோகங்கள் அதிகரிக்கும். புது வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன்கள் மிகுந்த பிரயாசை களுக்குப் பிறகு கிடைக்கும். கட்டுமானப் பணியாளர்கள் அலட்சியத்தால் கட்டடம் தாமதப்படும். குடும்பத்துல உள்ளவர்களின் அனுசரணையால, குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 27 முதல் ஜூன் 29 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்

சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தைங்களால சந்தோஷம் ஏற்படும். எதிலும் நிதானப்போக்கு இருந்த நிலை மாறும். எதிர்பாராத பணவரவு உண்டு.  கடன்கள் விஷயத்துல கவனமா இருக்க வேண்டியது அவசியம். . தனியார் துறை ஊழியர்களும் கணிசமான பலனை பெறுவீங்க. ஸ்டூடன்ட்ஸ்க்குப் படிப்புல  அக்கறை ஆசிரியர்களையும் பெற்றோரையும் பெருமைப்பட வைக்கும்.  நண்பர்களிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் குறைக்க, அவர்கள் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. அரசு அதிகாரிகளால் சிலருக்கு இடையூறுகள் ஏற்படலாம். எப்போதும் உங்க எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்க நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். பல காலமா இருந்துக்கிட்டிருந்த டென்ஷன்களிலிருந்து முழு விடுதலை கெடைக்கும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்

குழந்தைங்களோட திருமண முயற்சி கைகூடும். மனசுல உற்சாகத்துடன் வேலை பார்ப்பீங்க. இப்போ நீங்க உழைக்கற உழைப்புக்குப் பிற்காலத்துல பலன் நிறையக் கெடைக்கும். சகோதர ஒற்றுமை நல்லாயிருக்கும் அவங்க உதவி செய்வாங்க. புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும். வீடு மாற்றம் நாடு மாற்றம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தாமதம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு குறையலாம். இந்த வாரம் சிறப்பான பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும்.  எடுக்கும் முயற்சிகளில் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீங்க.  சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும். பேச்சில் கவனமாய் இருங்க. அதாவது யாருக்கும் எதுக்கும் உத்தரவாதம் தராதீங்க.

சந்திராஷ்டமம் : ஜூலை 1 முதல் ஜூலை 4 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்

வேலைக்கும் மாலைக்கும் சேர்த்து ஒரு சேர வேளை வந்துவிட்டது. அம்மாவின் உடல் நிலையின் மேல் நிறைய அக்கறை வைக்கணு. புது வீடு/ ஃப்ளாட் வாங்கப் போறீங்க, கங்கிராட்ஸ். வேலை மாற எண்ணம் இருந்தால் அவசரம் வேணாம். யோசிச்சு டிஸைட் பண்ணுவது நல்லது. காதல் வலையில் கால்வைத்துச் சிக்க வாய்ப்பிருக்கு. வீட்டில் சுபமங்கள காரியங்கள் காரணமாக தாராளமான  பணச் செலவுகள் ஏற்படும் இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும்.  சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும்.  சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம் என வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றம் ஏற்படும். சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம், மனதில் சந்தோஷம் பெருகும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும் அல்லது குழந்தைகளால  பெருமிதம் உண்டாகும்.