மேஷம்

மனதில் உற்சாகம் பிறக்கும். எடுத்துக்கொண்ட வேலைகளில் மன திருப்தி உண்டாகும். பணவரவு சரளமாக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. சுபகாரிய விசேஷங்கள் முடிவாகக் கூடிய வாரம் இது. தொழில் தொடர்பான முதலீடுகள் உறுதியாகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதையும் எதிர்கொண்டு ஜெயிக்கும் பலம் மனசுக்குக் கிடைக்குமுங்க. தொல்லை தந்தவங்க விலகுவாங்க. பணப்புழக்கம் அதிகரிக்கும். தனித்து இயங்கும் ஆற்றல் உருவாகும். தந்தை வழி உறவில் இருந்த சண்டைகளும் சச்சரவுகளும் காணாமல் போயிடும்.. தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்குமுங்க.  மனக்குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நல்லது. திட்டமிட்டு செயல்படும் திறன் காரணமாக வெற்றி கிடைக்கும்.

 ரிஷபம்

குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீங்க. வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்குவீங்க. வேற்றுமதத்தரின் உதவி கிடைக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் இப்பொழுது உங்களை சந்திப்பாங்க. வியாபாரத்தை பெருக்குவீங்க. உத்தியோகத்தில் சில வழிமுறைகளைக் கற்றுக் கொள்வீங்க. புதிய தொழில் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும் பெண்களுக்கு மிகச் சிறந்த வாரமாக அமையும். திட்டமிடாத காரியங்களிலும் சாதிக்கக்கூடிய வாரம். பணம் பலவழிகளிலும் வரும். தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்டநாளாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் மிக எளிதாக முடியும். எதிர்பார்த்த அனைத்து உதவிகளும் கிடைக்கும். வேலை தொடர்பான நல்ல தகவல் கிடைக்கும். திருமணம் உள்ளிட்ட விசேஷ முடிவாகும். பிசினஸிலும், அலுவலகத்திலும் இருந்துக்கிட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தாராளமாகச் செலவிடுவீங்க.  

மிதுனம்

வாய்ப்பு கைகூடுமளவுக்கு வருமானம் வருமுங்க. பெரிய பொறுப்புகள் மற்றும் பதவிகளிலிருந்து விலகியவர்களுக்கு மீண்டும், அதில் சேரக்கூடிய வாய்ப்பு கைகூடும். திருமணத் தடை அகலும். மம்மியின்  உடல் நலம் சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள்  “பை..பை” சொல்லி ஓடிவிடும். உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக பேசுவீங்க. செயல்படுவீங்க. திடீர் முடிவுகள் எடுப்பீங்க. பிள்ளைங்களை புதிய பாதையில் வழி நடத்துவீங்க. விஐபிகளின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாண்டு லாபம் பெறுவீங்க. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீங்க. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க. இட மாற்றம் சம்பந்தமாக முயற்சிகளில் உள்ளவர்கள் வெற்றி காண்பாங்க. இதுவரை அலுவலக வேலையில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி மனதில் முழுமையான நிம்மதி கிடைக்கும்

கடகம்

உங்க எதிர்பார்ப்புகள் நிறைவேற வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்க பேச்சு மதிக்கப்படும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீங்க. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவாங்க. வியாபாரத்தில் புதியதொரு தொடர்பு கிடைக்கும். பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பலநாள் நீங்க கண்ட கனவு நனவாகும். தடைப்பட்ட விஷயங்கள் தானாக நடைபெறும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். சண்டைகளும் சஞ்சலங்களும் டாட்டா சொல்லிடும்.  செய்யும் முயற்சிகளில் அவசரம் காட்ட வேண்டாம்.  கொஞ்சம் பொறுமையாவே காலை எடுத்து வைங்க. எதிலும் ஆலோசித்து முடிவெடுப்பதே நல்லதுங்க. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பாங்க. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. மனசுக்கு நிறைவான வாரம் இது.

சிம்மம்

வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீங்க. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீங்க. சிந்தனை திறன் பெருகும். குடும்பத்தினர் உங்க ஆலோசனையை ஏற்று கொள்வாங்க. நீண்ட நாட்களாகப் போகணும்னு நினைச்சுக்கிட்டிருந்த இடத்திற்குச் சென்று வருவீங்க. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீங்க. உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எது செய்வதானாலும் அனுபவம் வாய்ந்தவங்களின் ஆலோசனைகளைக் கேளுங்க. அல்லது உங்க ஜோசியரைக் கலந்தாலோசியுங்க. நல்லவங்களைப் பகைச்சுக்கறீங்க. வேணாமே. அவங்க வழிகாட்டல் தக்க சமயத்தில் கைகொடுக்கும்.. நல்ல வாய்ப்புகள் வந்து கதவை தட்டும். அப்போதென்று பார்த்துத் தூங்கிடாதீங்க. ப்ளிஸ். புதிய திட்டங்கள் தீட்டுவீங்க. கடினமான செயல்களையும் சுலபமாய் முடிப்பீங்க.

கன்னி

பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீங்க. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவாங்க. சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீங்க. குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீங்க. உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவங்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்களுக்கு  உதவிகளும் நன்மைகளும் செய்து பாராட்டுப் பெறுவீங்க. உத்தியோகத்தில் உள்ளவங்க்ளுக்குப் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை பெற்றுக்கொள்வீங்க. வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும்.

துலாம்

சகோதரர்களால் உங்களுக்கும் உங்களால் சகோதரர்களுக்கும் நன்மை நடப்பதால் நல்ல புரிதல் ஏற்படும். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்க ஆலோசனைங்களை ஏற்றுக்கொள்வாங்க. அவர்கள் மத்தியில் உங்க கௌரவம் ஒரு படி உயரும்.கொஞ்ச நாளாவே சின்னச் சின்ன இடர்கள் காரணமா முன்னேற்றம் முட்டுக்கட்டை போட்டு நின்னுக்கிட்டிருந்தது இல்லையா? இனி தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்குமுங்க. சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. தாமதப்பட்ட வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். சுப விசேஷங்கள் முடிவாகும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும்.

விருச்சிகம்

உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீங்க. குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். அத்தியாவசிய செலவுகள் ஏற்படும். வீட்டு பராமரிப்பு செலவுகளும் உண்டாகும். வியாபாரத்தில் இயல்பான நிலையே இருக்கும். இனி செய்யவேண்டிய வேலைகளை பற்றிய வரைவுத் திட்டம் போடுவீங்க. துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவாங்க. வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் தொல்லை அகலும். திடீர் திருப்பங்கள் பல வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீங்க. அவசரம் பதற்றம் போன்ற குணங்களை விடுத்து இப்போது நிதானமும் பக்குவமுமாய்ச் செயல்படுவீங்க.

தனுசு

வீடு கட்டுவதில் இருந்த தடை அகலும். குடும்ப உறுப்பினர்களின் குணமறிந்து நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீங்க. தாயார் ஆதரித்து பேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ, படித்துக் கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவாங்க. பொருளாதாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விடுபடுமளவு தனவரவு உண்டாகும். கணவரின் முயற்சியால் குடும்ப நிலை உயரும். வீட்டில் சுப செலவுகள் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். யாருடைய வம்புக்கும் போகாதீங்க. குடும்பத்தினர் எதிர்காலம் பற்றிய ஆலோசனை செய்வீங்க. சுயதொழில் தொடங்குவது அல்லது வியாபாரம் தொடங்குவது பற்றிய சிந்தனை தோன்றும், அது தொடர்பான முயற்சிகளில் இறங்குவீங்க.

மகரம்

கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்கு எதிர்பார்த்த புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பட்டங்களும் விருதுகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். அரசால் கௌரவிக்கப்படுவீங்க. தொழில் சம்பந்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீங்க. எதிர்பாராத நபர்களின் உதவிகள் கிடைக்கும். எதிர் பார்த்த பணம் வசூலாகும். தேவையானவர்களிடம் ஆலோசனை பெறுவீங்க. உங்க எண்ணங்கள் பூர்த்தியாகக் கூடிய வாரமாக இருக்கும். பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடக்கும். கடன், பாக்கிகள் வசூலாகும். போட்டிகள் இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று உங்களுக்கு சாதகமாக வீசும். சற்று சந்தேகத்துடன் செய்த முதலீடுகள் நல்ல லாபம் தரும். சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை

கும்பம்

சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். சில இடையூறுகள் ஏற்பட்டாலும், பல நற்பலன்கள் ஏற்படும். தொழில் விஷயங்களில் பல நன்மைகள் உண்டு. குடும்ப நிர்வாகத்தில் பெண்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகளால் பெண்கள் மனம் மகிழ்வாங்க. பங்கு சந்தையில் முன்னேற்றம் உண்டு. சுபமான நல்ல செலவுகள் செய்ய வேண்டியிருக்கும். மன மகிழ்ச்சி ஏற்படும்.  பழி தரக்கூடிய விஷயங்களைச் செய்யாதீங்க. தொழில் துறையினருக்கு இந்த வாரம் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் அதற்கேற்ற வருவாய் வருவதில் கொஞ்சம் தாமதம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறக் கடுமையாக உழைக்க வேண்டும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த எதிர்பாராத சச்சரவுகள் ஒரு வழியா, உங்களின்  பொறுமையான அணுகுமுறையால் தவிர்க்கப்படும். நன்மைகள் பெறுவதில் நிதானப்போக்கு இருந்தாலும் நல்ல முறையில் நடைபெறும். சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை

மீனம்

மகிழ்ச்சியான சம்பவங்கள் நிறைய நடைபெறும். ஆரோக்கிய பாதிப்புகளில் இருந்து விடுபடுவீங்க. அருகில் இருப்பவர்களின் ஆதரவு கூடுதலாக கிடைக்குமுங்க. நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீங்க. கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு அகலும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீங்க. திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்கும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். தந்தை வழி உறவினர் மூலம் உங்களுக்கு மிக நல்ல நன்மைகள் நடக்கும், பெரியோர் மற்றும் பெற்றோரின் ஆலோசனை கிடைக்கும். உங்களுக்குக் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மூலம் பல நன்மைகள் கொடுக்கக்கூடிய சிறந்த வாரமாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும். உங்க பிள்ளைங்களால் பிரச்சினை ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முறையாக நிறைவேற்றுவீங்க. வெரிகுட். நிலையான வருமானம் வர ஆரம்பிக்குமுங்க. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 1 முதல் டிசம்பர் 3 வரை