மேஷம்
இந்த வாரம், பல விஐபிகளின் தொடர்பும், அவங்க மூலம் நிறைய உதவியும் கிடைக்கும். புதிய முயற்சிகள் மூலம் வெற்றிகள் தேடி வரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமஅடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லல் இருப்பது நல்லது. சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. பூர்வ புண்ணிய சொத்துக்கள் மூலம் லாபம் வரும். வாழ்க்கைதுணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் இருந்த ஈகோ பிரச்சனை நீங்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பரிகாரம் : சிவாலயம் சென்று அர்ச்சனை செய்யவும்.
சந்திராஷ்டமம் : ஜனவரி 23 முதல் ஜனவரி 26 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
இந்த வாரம், பல நல்ல விஷயங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். பொருளாதார சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது, இருப்பினும் அதை சமாளிக்க முடியும். அடுத்தவர்களுக்கு ஜாமீன் போடுவதால் வீண் பழி ஏற்படலாம். வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். வெளியிடங்களில் மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். கணவன் மனைவிடையே இணக்கமான போக்கு காணப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். வெளியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். உத்யோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் ஏற்படும்.
பரிகாரம் : பிள்ளையாருக்கு சனிக்கிழமை அர்ச்சனை
சந்திராஷ்டமம் : ஜனவரி 26 முதல் ஜனவரி 28 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
இந்த வாரம், பல சௌபாக்கியங்கள் கிடைக்கும். ஒங்களோட திறமைகளை வெளிப்படுத்த பல நல்ல வாய்ப்புகள் வரும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க. வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். அடுத்தவருக்காக செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உடன்பிறப்பு வகையில் ஏதாவது மனக்கவலை ஏற்பட்டு மறையும். யாருக்கும் பணம் சம்பந்தமாக எந்த உத்திரவாதமும் தர வேண்டாம். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. பூர்விக சொத்து விஷயத்தில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் இடமாற்றம் ஏற்படும். புதிய தொழில், தொடங்கும் யோகம் உண்டு.
பரிகாரம் : கிருஷ்ணரை வணங்கி வழிபடவும்
சந்திராஷ்டமம் : ஜனவரி 28 முதல் ஜனவரி 30 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
இந்த வாரம், ஒங்களோட கஷ்டங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். கடன் பிரச்சினைக்கு ஒரு முற்று புள்ளி வைப்பீங்க. ஏற்கனவே வாங்கிய பழைய கடனை எல்லாம் இப்போது அடைக்க முடியும். பேசும் வார்த்தையில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். மனதிற்க்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆன்மீக விஷயத்திற்காக நிறைய பணம் செலவு செய்வீங்க. உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
பரிகாரம் : மகாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்.
சிம்மம்
இந்த வாரம், ஒங்களோட வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நெருக்கமானவர்களால் தேவையில்லாத மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்துடன் சென்று குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். உடன்பிறப்பு வகையில் பண விரையம் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும். குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புண்டு.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடுங்க
கன்னி
இந்த வாரம், நீங்கள் எதை செய்ய நினைத்தாலும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகள் காரணமாக கணவன் மனைவி இடையே விரிசல் ஏற்படலாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள், நண்பர்கள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தவும். வாகன பயணத்திலும் சாலையிலும் கவனம் தேவை. புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். எல்லோரிடமும் அனுசரித்து செல்வது பல வகையில் நன்மை தரும். நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும். தொழில், வியாபாரம் நன்கு வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : மகாலட்சுமியை வணங்கி வழிபடுங்க
துலாம்
இந்த வாரம், எதிலும் முழு மனதோடு ஈடுபவது நல்லது. அடிக்கடி டென்ஷன் ஏற்படுவதை குறைத்துக்கொள்ளவும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலையும் கடன் தொல்லையும் ஏற்பட வாய்ப்புள்ளது. சுப நிகழ்ச்சிகளில் வீடு களைக்கட்டும். தான தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது. உத்யோகத்தில் சந்தித்த பிரச்சனைகள் தீரும். தொழில், வியபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடுங்க
விருச்சிகம்
இந்த வாரம், பேச்சு திறமையால் எதையும் சாதிக்க முடியும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அடுத்தவர்களின் ஆலோசனைகளை அளவோடு எடுத்துக்கொள்ளவும். மனோதைரியம் கூடும். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. பல புண்ணிய தலங்களுக்கு சென்று வரும் பாக்கியம் கிட்டும். வாகன பராமரிப்பு செலவு கூடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
பரிகாரம் : குரு பகவானை வணங்கி வழிபடுங்க
தனுசு
இந்த வாரம், நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல பலன்கள் கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைப்பட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன் மனைவிடையே மகிழ்ச்சி நீடிக்கும். மற்றவர்களிடம் பழகும்போது வார்த்தையில் பொறுமையும், நிதானத்தையும் பின்பற்றுவது நன்மை தரும். குடும்ப வருமானம் போதுமானதாக இருக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். புது வீடு மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். சில எதிர்பாராத சூழ்நிலை, கடன் வாங்க தூண்டும். உத்யோகத்தில் புது தொடர்பு கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். .
பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடவும்
மகரம்
இந்த வாரம், மனசுல குழப்பங்களும், கவலைகளும் இருந்துகொண்டே இருக்கும். முக்கிய தருணங்களில் முடிவு எடுப்பதில் மிகவும் சிரமப்படுவீங்க. உணவு கட்டுப்பாடு மூலம் உடல் நலத்தை பாதுகாக்க முடியும். தடைபட்டு வந்த திருமண காரியம் சட்டென்று கைக்கூடும். குடும்பத்தில் அமைதி குறைவது போல் இருக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் ஏதாவது பிரச்சனைகள் வரலாம். விருப்பமான நபரை சந்திக்க மகிழ முடியும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பண பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். இருப்பினும் வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. உத்யோகத்தில் பணிகளை நிறைவாக செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் வேகமான வளர்ச்சி இருக்கும்.
பரிகாரம் : குல தெய்வத்தை வணங்கி வழிபடுங்க
கும்பம்
இந்த வாரம், அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீங்க. தாராள பணவரவு இருக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பணத்தை சேமித்து வைப்பதில் கவனம் செலுத்தவும். குடும்ப பிரச்சனைகள் தானாகவே சரியாகிவிடும். உடன் பிறப்பால் உற்ற நேரத்தில் உதவிகள் கிடைக்கும். பழைய வீட்டை சீரமைப்பீங்க. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடுங்க
மீனம்
இந்த வாரம், சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பொறுமையைக் கடைப் பிடித்தால் குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற ஆதாயம் இராது. தொலைதூர செய்திகள் காரணமாக இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். கடின உழைப்பு எப்போதும் ஒங்களோட பையை பணத்தால் நிரப்பும். போட்டி, பந்தயங்களில் ஈடுபடுவது நல்லதல்ல. அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். பழைய பாக்கி வசூல் திருப்திகரமாக இருக்காது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கடின உழைப்பு தேவைப்படும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.
பரிகாரம் : குருவாயூரப்பனை வணங்கி வழிபடுங்க