
மேஷம்
எதிலும் முன்னேற்றம் காணப்படும். அதுக்கு முக்கியக் காரணமே உங்களோட அயராத முயற்சிதாங்க. அப்பிடி எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். கங்கிராட்ஸ். நண்பர்கள் அல்லது ரிலேடிவ்ஸ் பற்றிய வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். பேச்சில் நிதானம் தேவை. சட்டென்று யாரையும் ஜோக்காகக்கூட மட்டம் தட்டிப் பேச வேணாங்க. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். ஆனாலும்கூட அது நிரந்தரத் தடையா இருக்காது. பிகாஸ்.. திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். நீங்க சொந்த வீடு அல்லது ஃப்ளாட் வாங்கும் முயற்சியில் பல மாதங்களாய் ஈடுபட்டுக்கிட்டு இருக்கீங்களா? எனில் இப்போ முயற்சிக்கான பலன் இருக்குங்க. குடும்பத்துல ரொம்ப நாளாக் காத்துக்கிட்டிருந்த மங்கல காரியங்கள் ஈடேறும்.
ரிஷபம்
நன்மை மற்றும் தீமை இரண்டும் மிக்ஸ் ஆகிக் காணப்படுது. ஃபேமிலி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்க சற்றே அதிகக் கவனமா இருப்பது நல்லது. குறிப்பா அதிகக் கோபப் பேச்சு வேணாம். அதோட கூட, தொழில் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தணுங்க. புதுசா பொறுப்புகளும் புதுப்புது சான்ஸ்களும் உங்களை தேடி வரும். பல்வேறு விதமான சவால்களை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும் கவலையே வேணாம். ஒங்களோட டியர் நண்பர்கள் உதவியா இருப்பார்கள். முன்பைவிட ஓரளவு பெட்டரான முன்னேற்றம் உண்டாகும். நீங்க மேற்கொள்ளும் பயணங்கள் உங்களுக்கு நல்ல சான்ஸ்களைப் பெற்று தரும். வேலை செய்யும் இடங்களில் நல்ல முன்னேற்றம் அடைவீங்க. உடல் ஆரோக்கியத்துல மட்டும் கொஞ்சம் அதிகமாக் கவனம் செலுத்திடுங்கப்பா. தட் இஸ் இனஃப். வெளியூர்ப் பயணங்கள், மற்றும் ஃபாரின் பயணங்கள் வெற்றிகரமாகவும், லாபமாகவும் அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
மிதுனம்
பொருளாதார நிலைமை திருப்தி தருவதாகவும் முன்பைவிட பெட்டராவும் இருக்கும், என்றாலும் இன்கிரீஸ் ஆகும் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். பயப்படாதீங்க. கைமாற்றாத்தான் வாங்குவீங்க. விரைவில் ரிடர்ன் செய்துடுவீங்க. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் இன்கிரீஸ் ஆகும். குடும்ப விஷயமாகவோ அல்லது உறவினர் வீட்டு விசேஷங்களுக்காகவோ, வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் பெருமளவுக்குக் குறையும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். ஸ்டூடன்ட்ஸ் விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியூர் செல்வீங்க. உத்தியோகஸ்தர்களுக்கு தள்ளிப்போன நன்மைகள் விரைவாய் நடந்து வியக்க வைக்கும். குழந்தைகளின் சிரமங்க விரைந்து தீரும்.
கடகம்
முன்னேற்றம் காணப்படும். எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். (தலையிட மாட்டீங்க.) பேச்சில் நிதானம் தேவை. தொழில், வியாபாரம் அல்லது ஆபீஸ் உத்யோகம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கடின உழைப்பு தேவைப்படும். ஆனா சந்தோஷம் என்னன்னா, உங்களுக்கே படிப்புல நல்ல ஆர்வம் வந்துடும்.வீட்டில் நவீன உபகரணங்கள் ஒன்றிரண்டை வாங்கி மகிழ்வீங்க. உங்களைவிடவும் குடும்பத்துல உள்ளவங்க அதிகமா சந்தோஷப்படுவாங்க. வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் லாபம் தரும். . எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பட்… கொஞ்சம் லேட்டா வரும்.அதனால என்ன? பணவரவும் நிம்மதியும் கூடும்.
சிம்மம்
ஆபீஸ்ல வேலை பாக்கறீங்களா? நல்லது. திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவீங்க. சக ஊழியர்கள்கூட உங்களுக்கு ஆதரவா இருப்பாங்க. குடும்பத்துல நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேச ஆரம்பிச்சிருக்கீங்க. இந்தப் போக்கு ஷ்யூரா நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைங்க கிட்ட கோபம் காட்டாம அன்பாக பேசறீங்க. குட். குட். . மாணவர்களுக்குப் படிப்பில் தேர்ச்சி ஏற்படும். இதனால பெற்றோருக்கு சந்தோஷம் ஏற்படும். புது வீடு கட்டிக் குடியேறும் பாக்கியம் ஏற்படும். இது நாள் வரை போராடி வந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக வெற்றி அடையுமளவுக்குத் திரும்பும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் இன்கிரீஸ் ஆகும். பெரியவங்க ஆசியால் நீங்க எடுக்கும் முயற்சிகள வெற்றி அடையும். சுகமும் ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: மே மாதம் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.
கன்னி
புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஒங்களோட வியாபாரத்துல நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும். ஒங்க வருமானம் இன்கிரீஸ் ஆகும். வேலை மற்றும் தொழில் சம்மந்தமான பயணம் காணப்படும். இந்தப் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். அந்தப் பயணத்துல சந்திக்கும் நபர் ஒருத்தர் லைஃப்ல சந்தோஷத் திருப்பம் ஒன்றை எதிர்காலத்துல ஏற்படுத்துவார்/ ஏற்படுத்துவாங்க. புதிய வாய்ப்புகள் உங்களைத் தானாவே தேடி வந்தாலும் அதை அருமையாய்ப் பயன்படுத்துவீங்க. வேலை மற்றும் சொந்த தொழில் சம்மந்தமாக வெற்றி உண்டாகும். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் நீங்க சற்றே அதிகக் கவனம் செலுத்த வேண்டும். வார மத்திக்குப் பிறகு, நன்மையே உண்டாகும். தேவையற்ற சஞ்சலங்களும் கற்பனை பயங்களும் காணாமப் போயிருக்குமே.
சந்திராஷ்டமம்: மே மாதம் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.
துலாம்
நீங்க ரொம்பக் காலமா எதிர்பார்த்துக்கிட்டிருந்த விஷயம் ஒண்ணு நல்லபடியா நடக்கும். வேலை சம்மந்தமான பயணம் அதிகமா இருக்கும். அந்தப் பயணத்தின்போது பங்குச்சந்தை முதலீடுகள் லேசான லாபம் தரும். நீங்க மூக்க நுழைச்சு அநாவசிய விஷயத்துல ஈடுபட்டா அது உங்களுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருந்துடுங்க. எதிலேயும் இன்வெஸ்ட் செய்வதற்கு முன்பு ஒன்றிற்கு இரண்டு முறை நல்லா யோசிக்கறதோட, அனுபவம் மிக்கவங்களோட கலந்தாலோசிச்சு கவனமாக முதலீடு செய்ய வேண்டும். அப்பிடி செய்துட்டால் பிரச்னை வராது. பணத்தை முறையாக் கையாள வேண்டும். வேலை தொடர்பான மாற்றங்கள் உண்டாகக்கூடும். இடத்திற்கு ஏற்றவாறு நீங்க வளைஞ்சு குடுத்து உங்களை மாத்திக்குவீங்க. கடந்த சில வாரங்களா இருந்துக்கிட்டிருந்த ஆரோக்கியப் பிரச்னைங்க முடிவுக்கு வந்தாச்சு.
சந்திராஷ்டமம்: மே மாதம் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.
விருச்சிகம்
கணவன் மனைவி இடையே அன்பு இன்கிரீஸ் ஆகும். இருந்தாலும் உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப சம்மந்தப்பட்ட விஷயங்களால் கவனமாக இருப்பது நல்லது. உங்களின் ஆற்றல் மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். பணியிடத்தில் ஒங்களோடவேலையில் முன்னேற்றம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான சான்ஸ் உள்ளது. மத்தவங்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் முன்னொரு காலத்துல ஏற்பட்டிருந்தமன கசப்பு நீங்கும். இதுக்குக் காரணம் மனசுவிட்டு, ஃப்ராங்க்கா நீங்க பேசினதுதான். உறவினர்களிடம் முடிந்தவரை அமைதியாவே போயிடறீங்க. வெரி குட். வயிறு சம்பந்தமான பிரச்னைங்க வராமல் கவனமா , வேளை தவறாமல், ஆரோக்கிய உணவை சுத்தமான…சுகாதாரமான சூழல்ல சாப்பிடுங்க. உங்களுக்கு திடீர் திடீர்னு வர்ற கோபத்தைக் கட்டுப்படுத்திக்கிட்டாலே பாதி ஜெயிச்சுடாலாம். அடிக்கடி தன்னம்பிக்கையை இழக்கறீங்க. ப்ளீஸ் டோன்ட்.
தனுசு
ஆபீசிலும், வீட்டிலும் அனுசரிச்சு நடந்துகொள்ள வேணும். பணியிடத்திலும் பிசினஸ்லயும், நீங்கசெய்யும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்துல முன்பிருந்த பிராப்ளம்ஸ் இனி இல்லை. வேலை மற்றும் தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவு அதிகமா இருக்கும். ஒங்களோடசேமிப்பு உயரும். புதிய சான்ஸ்கள் உங்களைத் தேடி வரும். அதையெல்லாம் நல்லா யூஸ் பண்ணி லைஃப்ல முன்னேறுவது உங்க கைலதான் இருக்கு. நிதிநிலமைல நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஒங்களோட தொழிலை பெரிய அளவில் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் வரும். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் மறுபடியும் ஒரு முறை உறுதி செய்யப்படும். மனசுல இத்தனை காரணமா இருந்துக்கிட்டிருந்த .. காரணம் தெரியாத.. சொல்லத் தெரியாத சோகமும் பயமும் உங்களைவிட்டு நிரைந்தரமா டாட்டா சொல்லிக் கிளம்பிடும்.
மகரம்
வீண் செலவுகள் ஒண்ணு ரெண்டு இருக்கும்தான். ஆனால் வருத்தமோ, நஷ்டமோ, விரயமோ எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் இன்கிரீஸ் ஆகும். வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் அல்லது ஃப்ரெண்ட்ஸ் உங்களைப் புரிந்துகொண்டு வருத்தம் தெரிவிப்பாங்க. நெடுநாளைய நண்பர்கள் அல்லது குடும்ப நண்பர் மூலமா ஆதாயம் உண்டாகும். அலுவலகத்துல திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்பறவங்க அதற்கான முயற்சிகளைச் சற்றே தள்ளிப்போட்டுப் பிறகு மேற்கொண்டால் சாதகமாக முடியும். ரொம்ப டிலே செய்துடாதீங்க. யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லதுங்க. அரசியல்வாதிகளுக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு உண்டு.
கும்பம்
மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீங்க. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். தெளிவான மனநிலை இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீங்க. செயல்திறன் இன்கிரீஸ் ஆகும் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீங்க. கலைத்துறையினர் எதிர்பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். வேலைப்பளு இருக்கும். ஆனாலும் வெற்றிகரமாக சாதிப்பதால் பாராட்டும் இருக்கும்… பலனும் இருக்கும். மனசுல காரண காரியத்துடன் மகிழ்ச்சி உண்டாகும். அவசியமற்ற வீண் அலைச்சல் உண்டாகும்.
மீனம்
உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. சிலருக்கு வீண் பேச்சு, வீண் அலைச்சல் மற்றும் வீண் செலவுகள் ஏற்படும். மிகப்பெரிய சாகசங்களை புரிவீங்க. அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை விலக்கினால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீங்க. தடை தாமதங்கள் ஸ்லோவாய் விலகும். கணவன் மனைவிக்குள், கடந்த சில வாரங்களா இருந்துக்கிட்டிருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அரசியல்வாதிகளுக்கு, மேலிடத்தைச் சமாளிக்க வேண்டி வரலாம். அரசு விவகாரங்களில் சற்றுக் கேர்ஃபுல்லா செயல்படுவது அவசியம். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடும் போது கவனமாக இருக்கணுங்க. சமீபத்தில் சின்னஞ்சிறுசாய் ஏற்பட்டிருந்த உடல் பிரச்னை முழுக்கத் தீரும். திருமணம் பற்றி.. ஒரு வழியா முடிவாகி மகிழ்ச்சி தரும்.