மேஷம்

ரொம்ப காலமாய்க் கிடப்பில் போட்டிருந்த சமாசாரங்களைத் தூசிதட்டி எடுத்து முடிச்சு நிமிர்ந்து நிம்மதி காண்பீங்க. முக்கியமாக கண்சோதனை செய்து கொள்ளுங்கள். உடல்நலத்திலும், உயரமான இடங்களுக்கு செல்லும் போதும் கவனம் தேவை. லோன்களை நல்ல முறையில் முடிப்பீங்க.தனியார்துறை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டாலும் அதே நாளில் சரியாயிடும். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, வாய்ப்புள்ளது. தேவையேயில்லாத வீண் கற்பனைக் கவலைகள் வேணாங்க. கெடுதல்கள் எதுவும் இல்லாமல் நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் வரும். அந்தக் காதல் கைகூடவும் செய்யும். பொறுமை அதிகமாயிடுச்சுங்க ஒங்களுக்கு. வெரி குட்.

ரிஷபம்

ஆபீசில் இருந்துக்கிட்டிருந்த டென்ஷன்கள் பத்திக் கவலை வேண்டாம். நீங்களே நம்பாத அளவுக்கு ஜமாய்ச்சு நிமிர்ந்துடுவீங்க. எல்லா விஷயங்களும் கொஞ்சம் இழுபறியாக இருந்தாலும் இறுதியில் நன்மையாகவே முடியும்.  உங்களில் வயதானவர்கள் மற்றும் நடுத்தர வயதை தாண்டியவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் முன்பைவிட ஆரோக்யம் மேம்படக் காண்பீங்க. குறிப்பிட்ட ஒரு முயற்சியின் காரணமாகப் பணவரவு இருந்தாலும் வருமானத்தைச் சேமிக்க முடியாமல் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஆனா ஒரு வேடிக்கை பாருங்க. அந்த செலவு சந்தோஷம்/ குதூகலம்/ மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகளையும் தொலை தூரப் பிரயாணங்களையும் இந்த வாரம் தவிர்க்கணுங்க. சிலருக்கு இதுவரை வராமல் இழுத்தடிச்சுக்கிட்டிருந்த பணம் வந்து சேரும். தந்தை வழி உறவினர்களிடம் சந்தோஷம் தரக்கூடிய நியூஸ் வரலாம்.

மிதுனம்

என்னமோ பெரீ…சா எதிர்பார்க்காத செலவுங்க ஒன்றுக்கு மேல ஒன்றா வர்றதுன்னு டென்ஷன் ஆயிக்கிட்டிருந்தீங்களே.. இப்ப எல்லாத்தையும் சூப்பராக் கட்டுப்படுத்திட்டீங்களே. குட் குட்.  சொந்தத் தொழில் செய்யறவங்க, வியாபாரிகள், தனது அறிவை மட்டும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான வாரம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பாங்க. பணவரவு தடைப்படாது. பணவரவுக்கு தடை இல்லை. பொருளாதார நிலைமை நன்றாகவே இருக்கும்.  உங்க வாயிலிருந்து துள்ளி விழற வார்த்தைங்க பலிச்சு உங்களுக்கே சர்ப்பிரைஸ் குடுக்கும். உங்களில் சிலருக்கு உயரமான இடங்களுக்கு போகும் அமைப்பு உண்டாகும். மலையும் மலைசார்ந்த இடங்களில் சுரங்கம் போன்ற தொழில் வைச்சிருக்கறவங்களுக்கும், வேலை செய்யறவங்களுக்கும் நன்மைகளைத் தரும் விஷயங்கள் நடக்கும்.

கடகம்

தேவையே இல்லாத கற்பனை பயங்களை மொதல்ல தூக்கி டஸ்ட் பின்ல போடுங்கப்பா. பயப்படும் அளவுக்கு என்ன ஆயிடுச்சு இப்ப? தொழில் முட்டுக்கட்டைகள் விலகும். வேலையில் நிம்மதி கிடைக்கும்.  வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் உண்டு. பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற யூக வணிக தொழிலில் உள்ளவர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் உண்டு. போட்டி, பந்தயங்கள் வெற்றியை தரும். நீண்ட நாள் சந்திக்காத ஒரு உறவினரையோ, நண்பரையோ இந்த வாரம் சந்தித்து மகிழ்ச்சி அடைவீங்க. தடைகள் மற்றும்  தாமதங்கள் நீங்கும். உங்களுடைய வருமானம் நன்கு உயரப்போகுது. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல? இந்த வாரம் ஹாப்பியா டூயட் பாடுவீங்க. திருமணம் ஆனவர்களும் ஹனி மூன் முடிச்ச ஜோடிங்களும் இன்னொ ஹனி மூனுக்குத் தயாராயிடுவீங்க. உங்க ஜோடி உங்களை இப்போ நல்லாவே புரிஞ்சுக்கிட்டிருப்பாரு / பாங்க.

சிம்மம்

உங்க கணவருக்கு/ மனைவிக்கு ரொம்ப நாளா எதிர்பார்த்துக்கிட்டிருந்த வேலை/ வருமானம்/ தன வரவு கெடைக்கும். இந்த வாரம் உங்க ராசிக்கு இனிமையாகவே அமையும். சென்ற சில வாரங்களாக உங்களுக்கு எந்த விஷயங்களில் பிரச்னைகள் இருந்து வந்ததோ அவை அனைத்தும் உங்கள் மனம் போலவே தீர்ந்து நன்மைகள் நடக்கும். சிலருக்கு ஆலயப் பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில் புரிபவர்கள் மேன்மை அடைவீங்க. பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் கிடைக்கும் வாரம்  இது. விமானத்துல பறக்கப்போறீங்க. கார் வாங்கப் போறீங்க. எதிர்பாராத ஹாப்பி விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கப் போகுதுங்க. செலவு பாட்டுக்கு சுனாமி கணக்கா உங்களை விழுங்கிகிட்டிருந்தாலும் அதற்கெல்லாம் அசந்து போறவங்களா நீங்க! படு இயல்பா சிரிச்சு வளைய வருவீங்களே. தட் இஸ் குட். இப்பிடியே இருங்க.

கன்னி

சின்னச் சின்ன பிரச்னைகள் வரத்தான் செய்யும். பெரிய சந்தோஷம் ஒண்ணும் இந்த வாரம் காத்திருக்குது. ஓ கே? கவலைப்படாம கடமையைசி செய்துக்கிட்டே போங்க. பணியிடத்தில் நல்ல திருப்பங்கள் உண்டு. உங்களில் சிலருக்கு தலைமைப் பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீங்க. கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். தோல்வி மனப்பான்மையை உதறித் தள்ளி வெற்றியைத் தரும் வேலைகளை முனைப்புடன் செய்ய வேண்டிய வாரம் இது. இதுவரை சில விஷயங்களில் சோம்பலாக இருந்தவர்கள் அதை விடுத்து சுறுசுறுப்பாக மாறுவீங்க. சிலருக்கு புதிய வாகன யோகம் உண்டு. இன்னும் சிலருக்கு சொந்த வீடு பாக்கியம் இப்போது கிடைக்கும். மேன்மைகள் கிடைக்கும் வாரம் இது. இத்தனை காலமாய் சருமத்துல சிரமம் ஏற்படுத்திக்கிட்டிருந்த பிரசினைங்க காணாமல் போகும்.

சந்திராஷ்டம் : டிசம்பர் 21 முதல் டிசம்பர் 24 வரை

சந்திராஷ்டமம் உள்ள தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

துலாம்

மனசுல சோர்வு இருக்கலாம். ஆனால் வாழ்க்கையை உற்சாகமா ஆக்கத் தெரிஞ்சவரு நீங்க. உங்கள் ராசிக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா, டிவி போன்ற துறைகளில் இருப்போர் நல்ல வாய்ப்புகளைப் பெறுவாங்க. இந்த சாதகமான நேரத்தை எதிர்கால முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்குங்க. உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் பொறுப்புகளுடன் பதவி உயர்வும் கிடைக்க சான்ஸ் இருக்குதுங்க. சக நண்பருங்க ஹெல்ப் செய்வாங்க. தொழில் செய்யறவங்க ஓய்வின்றி பணிகளில் கவனம் செலுத்துவாங்க. குலதெய்வ வழிபாடு செய்யத் திட்டம் போடுவீங்க. ஆபீஸ்லயும் வீட்லயும் நியாயமா நடந்து நல்ல பெயர் எடுப்பீங்க.

சந்திராஷ்டம் : டிசம்பர் 24 முதல் டிசம்பர் 26 வரை

சந்திராஷ்டமம் உள்ள தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்

தன்னம்பிக்கை கிலோ என்ன விலைன்னு கேக்காதீங்க. அது ஏன் ஒங்க திறமை ஒங்களுக்கே தெரியலை? இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு தடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு மாற முடியும். சிக்கலில் இருந்த தொழில் வியாபாரம் போன்றவை மறுபடியும் எழுச்சியுடன் நடைபெறப்போகும் காலம் வந்து விட்டது. பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகள் நடக்க சான்ஸ் இருக்குங்க. சிலர் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி செலவு செய்ய வேண்டி இருக்கும். நியாயமான தைரியம் பெற்று, வீறு கொண்டு எழும் வாரம் இது. நமக்கெங்கே இதெல்லாம் கிடைக்கப்போகுது என்று நீங்கள் ஒரு காலத்தில் ஏங்கிய விஷயமெல்லாம் இப்போது உங்க முன்னால் வந்து உட்காரும். குழந்தைகளால் பெருமிதம் அனுபவிப்பீங்க. இந்த அளவு அவங்க சாதிப்பாங்கன்ன நீங்க நினைச்சதில்லை!

சந்திராஷ்டம் : டிசம்பர் 26 முதல் டிசம்பர் 28 வரை

சந்திராஷ்டமம் உள்ள தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் மிகவும் கவனமாக இருங்கள்.

தனுசு

பெரிய ஆபத்துக்களிலிருந்து வெளியே வந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. பல நாட்கள் கழிச்சு உற்சாகப் பாட்டு. இந்த ராசிக்காரர்களுக்கு சோதனைகள் முடிந்து விட்டது. இனிமேல் உங்களுக்குத் தொந்தரவுகள் இருக்காது. உங்கள் பிரச்னைகள் அத்தனையும் தீர்ந்து கொண்டிருக்கிறது. இனிமேல் நன்றாக இருப்பீங்க. உங்களில் பெரும்பாலானோர் ஒளி பிறப்பதை உணர ஆரம்பிப்பீங்க இன்னும் வழி காணாத மிகச் சிலருக்கும் வரும் வாரங்களில் துன்ப மேகங்கள் விலகும். இதுவரை இதைச் செய்யலாமா, அதைச் செய்யலாமா என்று தயங்கிக் கொண்டிருந்தவர்கள்  துணிச்சலுடன் செயலாற்றுவீங்க. காதல் விஷயத்துல அவசரம் வேணாங்க. சில விஷயங்களில்  தடை தாமதம் ஏற்படுவது கூட நன்மைக்குதான்னு உங்களுக்குத் தெரியாதா என்ன! நல்ல எண்ணங்கள்.. சிந்தனைங்க மனசுல ஏற்பட்டுக் கருணை சுரக்கும். சூப்பர்.

மகரம்

பேச்சைக் குறைச்சுட்டா போதுங்க. யாரைப் பத்தியும் யார் கிட்டயும் அநாவசியமாய் ஒரு வார்த்தைகூடப் பேசாம இருந்தால் போதும்.ஜெயிச்சுட்டீங்கன்னு அர்த்தம். கிரகநிலைகள் சாதகமாக திரும்புவதால் உங்களுடைய மனதைரியமும், செயல் திறனும் கூடுதலாகும். அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் இந்த வாரத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்வீங்க. எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை. உங்களில் வயதானவர்களுக்கு மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். உங்க டாடிக்கு ஏதோ நன்மை காத்துக்கிட்டிருக்கு. அதிர்ஷ்ட தேவதை நடு ஹாலில் சோஃபா போட்டு உட்காரப்போறாங்க. ஹாப்பிதான்.

கும்பம்

நீங்கள் செய்யும் எந்த வேலையிலும் கொஞ்சம்கூட கவனக்குறைவு ஏற்படாம பாத்துக்குங்க. வெட்டித் தள்ளிவிட்ட உறவும் நட்பும் ஒட்டி உறவாட வருவாங்க. என்னதான் சோதனைகள் இருந்தாலும் ஓரளவிற்கு பணப்புழக்கம் கையில் இருக்கும். வருமானம் வருவதால் கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். உங்களில் சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க வாய்ப்புகள் வரும்.  இந்த வாரம் சோதனைகள் எதுவும் இல்லை. கலைத்துறையினருக்கு இது சிறப்பான வாரம். இத்தனை காலமாய்த் தளர்வடைந்திருந்த விஷயங்களில் மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டு சூப்பர் வெற்றி காண்பீங்க. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழில் செய்யறவங்களுக்கு, பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பயணம் செல்ல நேரிடலாம். காரிய அனுகூலம் உண்டாகும்.  மத்தவங்க உங்களுக்கு உதவ முன்வருவாங்க.

மீனம்

சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட பயப்படத் தோணும். கலை ரசனை இன்கிரீஸ் ஆவும். நீங்க இன்வெஸ்ட் பண்ணியிருந்த தொகைங்க நிறைய லாபம் குடுக்கும். புகழ் அடையும்படியான சம்பவங்கள் நடக்கும். பெண்கள் உதவுவாங்க. சங்கடங்கள் இருந்தாலும் முடிவில் அனைத்தும் சாதகமாகவே முடியும். வேலை தொழில் வியாபாரம் போன்றவைகளில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. ஆனால் கும்பத்தினர் இப்போது எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்துப் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள், லாட்டரிச்சீட்டு, ரேஸ் போன்றவை இப்போது கை கொடுக்காது. எதிலும் பேராசைப்படாமல்  இருப்பது நல்லது.  சாப்பாட்டு விஷயத்துல கொஞ்சமே கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துட்டாப் போதும். ஏற்கனவே உங்களுக்கே ஏதாச்சும் (ஆரோக்யத்தைக் கெடுக்கும்) கெட்ட பழக்கம் இருந்தால் அதைத் தள்ளி ஓரமா வெச்சுடுங்க. அனேகமா இருக்காது.