மேஷம்

லாபத்தை, வருமானத்தை திட்டமிட்டு சேமிப்பதோ அல்லது சுபச் செலவுகளாக மாற்றுவதோ அவசியம். குழந்தைங்க விஷயத்தில எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தால் அவை சரியாக ஆரம்பிக்கும். வேலை மாறுவது புதிய இடத்திற்கு செல்வது ஆகியவை உங்களுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லைன்னா  டென்ஷன் ஆகாதீங்க. நடப்பது நன்மைக்குத்தான்னு புரிஞ்சுக்குங்க. பேச்சுல இனிமை அவசியம். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழிலை விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீங்க. அனுபவப்பூர்வமான அறிவுத் திறன் கைகொடுக்கும். உத்யோகத்துல உங்களோட செயல்திறமை அதிகரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். தொழில் நிமித்தமா வெளியூர் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்துல பிள்ளைங்களால் நன்மை உண்டாகும்.

ரிஷபம்

தொழிலில் நல்ல வளர்ச்சி புதிய தொழில் துவங்குவது சாதாரணமாக ஆரம்பித்தது பிரம்மாண்டமாக வளர்வது உள்ளிட்டவற்றை கண்கூடாகப் பார்க்க முடியும். வருமானம் பல மடங்கு இன்கிரீஸ் ஆகும் பொருளாதார நிலை நீங்க எதிர்பார்த்ததை விட மேம்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீங்க. பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பைப் பெறுவீங்க. கலைத்துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீங்க. எதற்கும் அஞ்சாமல் காரியங்களை திறம்பட செய்து முடிப்பீங்க. தொழில் பிசினஸ்ல இருந்துக்கிட்டிருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும்.

மிதுனம்

ஜாப்ல உள்ளவங்களுக்கு பெரிய பதவியும் புதிய வாய்ப்புகளும் ஊதிய உயர்வும் கிடைக்கும். அசையா சொத்துக்கள் மற்றும் வீடு வாங்குவது அல்லது விற்பனை செய்வது உள்ளிட்ட விஷயங்களில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். பிசினஸ்ல எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவு படுத்துவீங்க. செல்வ சேர்க்கை உண்டாகும். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். குடும்பத்துல திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் பிசினஸ்ல இருந்த மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம்.

கடகம்

குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவீங்க. பெண்களுக்கு மனசுல புது தெம்பும் உற்சாகமும் இன்கிரீஸ் ஆகும்.  காரியங்களில் நன்மை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, செயற்கரிய செயல்களைச் செய்வீங்க. கலைத் துறையினர் வெற்றி வாகை சூடுவீங்க. ஸ்டூடன்ட்ஸ், கல்வியில இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த இருந்த மெத்தனப் போக்கு மாறும். ஜாப்ல உள்ளவங்க புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். பெண்களுக்கு சந்தோஷம் ஏற்படும். கலைத்துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். எல்லா காரியங்களும் சுமூகமாக நடந்து முடியும். மனத்துணிவு உண்டாகும். எதையும் வேகமாக செய்து முடிப்பீங்க. செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும்.

சிம்மம்

கடந்த மாசங்களில் இருந்த டென்ஷன்ஸ் எல்லாம் இந்த வாரத்துலயே படிப்படியா சரியாகும். பணப்புழக்கம் திருப்தியா இருக்கும். தொழில், பிசினஸ் சீராக இருக்கும். லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரவு திருப்தி தரும். குடும்பத்துல இருப்பவர்களிடம் கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து இதமாகப் பேச வேண்டும். தொலைதூரத்துல அல்லது  ஃபாரின்ல வசிக்கற மகன் அல்லது மகள் வீட்டுக்குப் போவீங்க. சந்தோஷம் பெறுவீங்க. மகிழ்வித்து மகிழ்வீங்க. தொழில் பிசினஸ்ல இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். ஜாப்ல உள்ளவங்க வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பர். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

கன்னி

பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். நீங்க பயந்த மாதிரி, வீண் செலவுங்க எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அட எந்த தம்பதிதான் சண்டை போடலை? பிற்பாடு அதை மறந்துட்டு அனுசரிச்சுக்கிட்டுப் போயிடுவீங்க ரெண்டு பேருமே. கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். நெருக்கமானவங்ககூடப் பேசி மகிழ்வீங்க. வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீங்க. மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில் பிசினஸ்ல ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு பிசினஸ்ல முன்னேற்றம் காண்பார்கள்.

சந்திராஷ்டமம்: ஜூன் 20ம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

துலாம்

பிஸினஸ்.. ஜாப்.. தொழில் காரணமா சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். உங்க கீழ ஒர்க் பண்ற பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். புதுசு புதுசா நெறையக் கத்துக்கப் போறீங்க. அதெல்லாம் லைஃப்ல ரொம்பவும் யூஸ் ஆகப்போகுது. முயற்சிகள் வெற்றி தரும் வீக் இது. ஜாப்ல உள்ளவங்க மேலதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பர். குடும்பத்துல நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பெண்களுக்கு மனசுல திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவர். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற, திட்டமிட்டு செயல்படுவர். சின்னச்சின்ன ஆரோக்கியப் பிரச்னைகளை வெற்றிகரமா எதிர்கொண்டு சமாளிச்சுடுவீங்க.

சந்திராஷ்டமம்: ஜூன் 22ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

விருச்சிகம்

தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில செல்லும். நிதி உதவி கெடைக்கும். உத்தியோகத்துல உள்ளவங்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம். குடும்பத்துல மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் இன்கிரீஸ் ஆகும்.  எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச்செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும்.மறவர்களின் செயல்கள் உங்களுக்கு கோபத்தை அதிகரிக்கலாம். தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். ஜாப்ல உள்ளவங்க கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். குடும்பத்துல இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்பட சான்ஸ் குடுக்காதீங்க.

சந்திராஷ்டமம்: ஜூன் 24ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

தனுசு

வரவேண்டிய பணம் உங்க கையில வந்து உட்கார்ந்துக்கும். அரசாங்கத்தோட ஹெல்ப்புக்காகக் காத்துக்கிட்டிருந்தவங்களுக்கு அது ஈஸியாக் கெடைக்கும். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை நல்ல முறையில் தீர்த்து வைச்சு அவங்களோட மதிப்புக்கு ஆளாவீங்க.  மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து அவங்களுடைய ஆதரவைப் பெறுவீங்க. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும்.  பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீங்க. கலைத்துறையைச் சேர்ந்தவங்க நட்பு வகைல நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற, வழக்கத்தைவிடவும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

மகரம்

தந்தையின் உத்யோகத்துல முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் திடீர்னு இன்டரெஸ்ட் வரும். ஒரு நல்ல காரணத்தை உத்தேசம் செய்து, நீண்ட தூரப் பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின்போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீங்க. தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். உத்யோகத்துல இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்பத்துல இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீங்க.

கும்பம்

பொறுமையா இருங்க. பலன் இனிக்கும். புதிதாய்ச் செய்யும் காரியங்கள்ல கவனம் தேவை. கலைத்துறைல உள்ளவங்க இனிமையான வார்த்தைகளால் பேசுவீங்க. இதனால மத்தவங்க மத்தியில் மதிப்பு கூடும். பண விஷயத்துல கேர்ஃபுல்லா இருக்கணுங்க.. எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அதை நல்லபடியா சமாளிப்பீங்க. ஆனா அவசியம் இல்லாதவங்களுக்குத் தூக்கிக் கொடுத்துடாதீங்கப்பா. பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீங்க. அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும். கலைத்துறையினருக்குப் பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். மாணவர்கள் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவர். ரிலேடிவ்ஸ்கிட்ட பக்குவமாக பேசுவது நல்லது. கோர்ட் கேஸ் சமாசாரங்கள்ல சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவிங்க கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நேர்மையா இருந்தா பிரச்னைகள் வராது.

மீனம்

எல்லா விஷயங்களிலுமே எச்சரிக்கையாவும் நிதானமாயும் செயல்பட வேண்டும் என்பதை நினைவில்  வெச்சுக்குங்க. புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லதுங்க. தொழில் ரீதியாக வளர்ச்சி மற்றும் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். பொருளாதார ரீதியான சிக்கல்கள் பெரிதாக ஏற்படாது. தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீங்க. தொழில் பிசினஸ்ல வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசங்கள் மாறும். ஜாப்ல உள்ளவங்க திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்பட, சற்று அதிக முயற்சி எடுக்க வேண்டி வரும். குடும்பத்துல ஒற்றுமை அதிகரிக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம் தேவை.