மேஷம்

இந்த வாரம் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திட்டமிட்டு எதையும் செய்து முடிச்சு வெல்வீங்க. மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். மற்றவர்கள் உங்களிடம் கொடுத்த எந்த வேலைகளையும் சிறப்பா செய்து முடிப்பீங்க. தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாகியிருந்த நிலை மாறும். குடும்பத்துல இருப்பவங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபட்டு, அதில் வெற்றி கண்டு மகிழ்ச்சியடைவீங்க. குடும்பத்துல இதமான சூழ்நிலை காணப்படும். ரிலேடிவ்ஸ் வருகையும் அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும்.

ரிஷபம்

இத்தனை காலம் வெளியில் சொல்ல முடியாதபடி இருந்து வந்த மனக்குறைகள் நீங்கும். பிள்ளைகள் கல்வி மற்றும் அவங்க எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். மனம் விரும்பியபடி பயணம் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு பணவரத்து அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வளர்ச்சி காண்பீங்க. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம். பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். முயற்சிகள் நல்ல பலன் தரும். கலைத்துறையினர் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கும். அரசியல்வாதிகள் சிக்கன நடவடிக்கை மேற்கொள்வீங்க.

மிதுனம்

இந்த வாரம் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீங்க. சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்துல இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வாங்க. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீங்க.

கடகம்

போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். நீங்க செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த வாரம் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்துல இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதில் தூய சிந்தனைகள் அதிகரிக்கும்.

சிம்மம்

பெண்கள் எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். எதிர்பார்த்தபடி ஒப்பந்தங்கள் கிடைப்பது தாமதமாகலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிக்கன நடவடிக்கை கைகொடுக்கும். இந்த வாரம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

கன்னி

இந்த வாரம் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்துல உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவாங்க. மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான பயங்கள் முற்றிலும் நீங்கி நிம்மதி பிறக்கும். கணவர் / மனைவியால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 4 முதல் டிசம்பர் 6 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

துலாம்

காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். முட்டுகட்டைகள் விலகும். கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்துல இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீங்க. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 6 முதல் டிசம்பர் 8 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

விருச்சிகம்

இந்த வாரம் பொருளாதாரத்தில் நல்ல மேன்மை ஏற்படும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன்விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். குடும்பத்துல இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. தம்பதிகளுக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. பெண்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.\

தனுசு

அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். பெண்கள் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு வாக்குவன்மையால் காரிய வெற்றி உண்டாகும் மாணவர்களுக்கு கல்வியை பற்றி டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை. பாடங்களை படிப்பதில் தீவிரம் காட்டுவீங்க. இந்த வாரம் கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீங்க. மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

மகரம்

இந்த வாரம் நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற சான்ஸ்கள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீங்க. குடும்பத்துல நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கும்பம்

மனவருத்தத்துடன் சென்ற ரிலேடிவ்ஸ் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவாங்க. பெண்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல்வாதிகளுக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி சான்ஸ் உண்டாகும். குடும்பத்துல இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகளுக்காக சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி நீங்கும். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீங்க. பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு சோம்பல் குறைந்து உற்சாகம் ஏற்படும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.

மீனம்

இந்த வாரம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். அல்லது வெளியூர் வெளிநாடுன்னு போவீங்க. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டார தொடர்புகளில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் சிறப்பா நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவாங்க. மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். பழைய பாக்கி வசூலாகும். மேன்மை உண்டாகும். தலைமைப் பதவியில் இருப்பவங்களின் பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற சற்று அதிகக் கவனமாக படிக்க வேண்டி இருக்கும். படிப்பீங்க. அனைவரையும் கவர்ந்து இழுக்கும் திறமை அதிகரிக்கும். பகைவர்களால ஏற்படும் சிறு தொல்லைங்களை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.