வார ராசிபலன்: 10.6.2022 முதல் 16.6.2022 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

சமூக சேவைல ஈடுபட்டு உங்க செல்வாக்கை உயர்த்திக்குவீங்க. முடிக்க முடியாத வேலைங்களை முடிச்சு மத்தவங்களை மூச்சுத்திணற வெப்பீங்க. தொழிற்சாலைகளில் துடிப்புடன் வேலை செய்வீங்க. உற்பத்திப் பெருக்கத்தால் முதலாளிகள் மகிழ்ச்சி அடைவாங்க. தாராளமாக அரசு வேலைக்கான தேர்வு எழுதலாம். மேற்படிப்புக்காக வெளிநாடு போவீங்க. சொந்த பந்தங்கள் இடையே இத்தனைகாலம் இருந்துக்கிட்டிருந்த மனக்கசப்பு தீர்ந்து நிம்மதி தரும்.  சில சொந்தங்களோட பொறாமை கமென்ட்ஸையெல்லாம் கேர் பண்ணாதீங்க. தானாய் வந்து கால்ல விழுவாங்க. பணவரவு அதிகம் இருந்தாலும் செலவுங்க கொஞ்சம் இருக்கத்தாங்க செய்யும். டோன்ட் ஒர்ரி. பிகாஸ் குடும்பத்துக்குத் தேவையான முக்கியப் பொருட்களை வாங்குவீங்க. இல்லாட்டி நல்ல முறைல இன்வென்ஸ்ட் செய்வீங்க. இல்லாட்டி சுப காரியங்களுக்காகச் செகவு செய்வீங்க. கலைத்துறைல உள்ளவங்க அதிக வருமானம் பெறுவாங்க. கணவன் மனைவி மற்றும் குழந்தைங்களுக்கிடையே இருந்துக்கிட்டிருந்த கசப்புணர்வு மறைஞ்சு வெள்ளைக் கொடி பறக்கும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 12 முதல் ஜூன் 14 வரை  

 ரிஷபம்

பணவரவுக்கு பஞ்சம் இல்லைங்க. பட் கையில் தங்குவது கொஞ்சம் குறைய சான்ஸ் இருக்கு. ஸோ கொஞ்சம் சிக்கனமா இருக்கப்பாருங்கப்பா. சேமிப்பை இன்கிரீஸ் செய்ங்க.. அது ஒங்காளல முடியும். சாணக்கியத்தனத்தால சாதனை புரியும் திறமை வரும். அதனால ஆபீஸ்லயும் பிசினஸ்லயும் ஒங்களைப் பாத்து ஆச்சர்யப்படுவாங்க. வீட்லயும்.. வெளிலயும்  ஒங்களோட தனித் திறமையால முத்திரை பதிப்பீங்க. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. குடும்பத்துல சுபகாரியங்கள் நடக்கும்.. மத்தவங்களுக்கு உதவப் போய் வீண் பிராப்ளம்ஸ்ல சிக்கிக்காதீங்க. தொழில் வியாபாரம் சம்பந்தமான காரியங்களில் இருந்த இழுபறியான நிலை மாறி சுறுசுறுன்னு விஷயங்கள் முடிஞ்சு நிம்மதி தரும்.ங உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்குக் கூடுதலான பணிச்சுமையும் வீண் அலைச்சலும் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 14 முதல் ஜூன் 16 வரை  

மிதுனம்

அரசியலில்ல உள்ளவங்க இக்கட்டான சூழ்நிலையை மன உறுதியுடன் சமாளிச்சு வெற்றி காண்பாங்க. மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவாங்க. கல்வி தொடர்பான வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் ஏற்றமாக இருக்கும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு பணிச்சுமை கூடும். கலைநயத்தோடு காரியங்கள் பார்ப்பீங்க. வசீகரமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீங்க. புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீங்க. என்னடா வாழ்க்கை என்று இடிந்து போயிருந்த உங்களுக்கு மன நிம்மதி உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக முடிப்பீங்க. பிசினஸ்/ தொழில்ல வெற்றி பெறுவீங்க. நினைச்ச காரியத்தைக் கச்சிதமா நடத்துவீங்க. வெளியூர்ப் பயணங்களால் தொழிலுக்குத் தேவையான உதவிகளை ஹாப்பியா அடைவீங்க.

கடகம்

சிரமப்படும் நண்பர்களுக்கு பண உதவி செய்வீங்க. புதன் மூன்றாம் வீட்டில் இருக்கிறார். “கையில வாங்கினேன், பையில போடல, காசு போன இடம் தெரியல” என்ற பாடலுக்கு பொருத்தமாக இருப்பீங்க. சேமிப்புக்கு முக்கியத்துவம் குடுங்கப்பா. ப்ளீஸ். ஆன்லைன் வியாபாரத்தைக் கொஞ்சம் குறைச்சுக்குங்க. ஆன்லைன் சூதாட்டம் அறவே கூடாது. மத்தவங்க பேச்சை கேட்டு தேவையில்லாத செயலில் ஈடுபடாதீங்க. பேச்சுவார்த்தைல கவனமா இருங்க. குடும்பத்துல கோபத்தைக் காட்டாதீங்க. வேலை நிமித்தமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்ல தங்க வேண்டி வந்தாலும் ரிசல்ட் சூப்பரா இருக்குங்க. ஆரோக்கியத்துல சற்று அக்கறையா இருப்பது நல்லது. செய்யும் செயல்கள் யாவற்றிலும் பொறுமை தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் எளிதாக அணுகலாம். தெய்வீக பாடல்களை கேட்பதன் மூலம் உங்களுக்கு திருப்தியும் ஆறுதலும் கிடைக்கும்.

சிம்மம்

வீட்டுல சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்துல சந்தோஷம் அதிகரித்து காணப்படும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் ஒன்றை வாங்குவீங்க. கணவன் மனைவியிடையே நல்ல புரிதல் இருக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துக்கறது நல்லதுங்க. உறவினர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது. உங்க திறமைகளை வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்துல உயர் அதிகாரிங்க உங்களை ஆதரிப்பாங்க. விரைவில் புதிய தொழில், தொடங்கும் யோசனை ஏற்படும். எப்போதும் மத்தவங்க கிட்டேயிருந்து வித்தியாசப் பட்டு இருக்கணும் என்ற ஆசை வரும்.  எந்த சவாலையும் கையாள்வது கடினமாக இருக்காது. அநாயாசமாய்ச் செய்துடுவீங்க. வளர்ச்சி குறித்து சுதந்திரமாய் முடிவெடுக்கும் உறுதியான மனநிலை காணப்படும். சிறிது முயன்றால் வெற்றி காணலாம்.

கன்னி

நீங்க விரும்பின பல விஷயங்கள் நிறைவேறும். குடும்பத்தினர் .. குறிப்பா  கணவர்/ மனைவி உங்களை புரிஞ்சுக்கிட்டுப் பாசம் காட்டுவாங்க. சுய தொழில் செய்யறவங்களுக்குப் புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தவறான பழக்கம் உள்ள நண்பர்கள் சேர்க்கையை தவிர்ப்பது நலம் தரும். மாணவர்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மாமன் வகை உறவுகளால்  கொஞ்சம் நல்ல விஷயங்கள் நடக்குங்க. அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய அனுமதி கடிதங்கள் சான்றிதழ்கள் கைக்கு வரும். அலுவலக வேலை சம்பந்தமாக வெளியூர்ல தங்கி வேலை செய்ய வேண்டியிருக்கும். தொழில் பிசினஸ்  வெற்றிகரமாக நடக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீங்க. உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு அருமையான ஹாப்பி திருப்பங்கள் உண்டுங்க. போன வாரம் இருந்துக்கிட்டிருந்த பணப் பிரச்னை, மனப் பிரச்னை இரண்டும் நல்ல விதமாய் முடிவுக்கு வந்துடும்.

துலாம்

எந்தநேரத்துல எதைப் பேசணும்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். அதனால நிறையப் பிரச்னைங்களுக்கு முற்றுப் புள்ளி வெச்சுடுவீங்க.  நீங்க பெற்ற உலக அனுபவம் உங்களுக்குக் கரெக்டான நேரத்தில் கை கொடுத்து ஹெல்ப் செய்யும். வாரம் முழுக்கவுமே சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கப் பெறுவீங்க. உங்க மீது குற்றம் சொல்ல நினைச்சவங்க மனசு மாறி அந்த எண்ணத்தை  விட்டுடுவாங்க. டோன்ட் ஒர்ரி. எதிர்பார்த்த அமவுன்ட் புதன்கிழமை கைக்கு வரும். குடும்பத்துல இருந்த  ஒண்ணு ரெண்டு பிரச்னைங்க உங்க பணிவு மற்றும் பொறுப்புணர்ச்சியால சரியாயிடும். சில இழப்புகளைப் பொருட்படுத்தாம போயிடுவீங்க. ரிலேடிவ்ஸ்ல ஒரு பெண்மணி கர்ப்பமடைந்த இனிய நியூஸ் வரும். ஃபேமிலிக்குள்ள கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தவர்கள் அண்ட் பிரிஞ்சவங்க ஒன்று கூடுவாங்க. மன்னிப்புக் கேட்கத் தயங்க வேணாம்.

விருச்சிகம்

ரொம்ப காலம் கழிச்சு மனசுல ஒருவித ரிலீஃப் வரும். குடும்பத்துல உங்களுக்கோ அல்லது ஃபேமிலியில் உள்ள ஒருவருக்கோ, நீண்ட நாட்களா விரதம் இருந்து எதிர்பார்த்த குழந்தை பாக்கியம் இப்போது அமையும். உத்தியோக வகையில் திடீர் இடமாற்றத்திற்கு சான்ஸ் இருக்குங்க.  சகோதரி மேரேஜ் விஷயமாக ரிலேடிவ் ஒருத்தர்கிட்டேயிருந்து மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உத்யோக விஷயத்தில் உங்க கோரிக்கை ஒண்ணு நிறைவேறுவதால் மனசில் உற்சாகம் பிறக்கும். சொந்த ஊருக்கு பணிமாற்றம் கிடைக்கும். வழக்கு  சம்பந்தமாக சமாதானத் தீர்வுக்கு அமைப்பு உள்ளது. எதிர்பார்த்த பெரிய தொகை புதன்கிழமை கைக்கு வரும். நெருங்கிய உறவுகளால் சில நன்மைகள் நடக்க சான்ஸ் இருக்கு/ இன்று பல பயனுள்ள விஷயங்களை செய்வீங்க. ஒங்களோட இனிமையான வார்த்தைகள் பிறரைக் கவரும்.

தனுசு

நண்பர்கள் மற்றும் ரிலேடிவ்ஸ் மூலமா நல்ல நியூஸ் வரலாம். தாயார் உடல் நலம் காரணமாக மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். மனைவி அல்லது கணவரிடமும் பிள்ளைங்களிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லதுங்க. ப்ளீஸ். வேலை அல்லது வீடு  மாறுவது குறித்து இறுதி முடிவு எடுப்பதைக் கொஞ்ச நாளைக்குத் தள்ளிப்போட சான்ஸ் இருக்கான்னு பாருங்களேன். ப்ளீஸ். பகுதி நேர வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வேலை அமையும். கமிஷன் காண்ட்ராக்ட் சம்பந்தமான வேலைகளில் நல்ல லாபம் கிடைக்கும். லோன் போட்டிருந்த பணம் கிடைக்கும். வார மத்தியில் திடீர்ப் பயணம் ஒண்ணு இருக்க சான்ஸ் இருக்கு.  உங்க புத்திசாலித்தனத்தினால முன்னேற்றமான பலன்களைக் காண்பீங்க. சுயமாக முன்னேறுவீங்க. உங்களின் இனிமையான வார்த்தை மூலம் பிறரை திருப்தி படுத்துவீங்க.

மகரம்

நீங்க ஆணானாலும் சரி.. பெண்ணானாலும் சரி.. மாமியார் வீட்டு உறவுக்காரங்களோட இருந்துக்கிட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும் நல்லுறவு மலரும். வயிறு சம்பந்தமான சிறிய பிராப்ளம் ஒண்ணு வந்து நீங்கும். சிநேகிதர்கள் அல்லது தோழிகளால் சில சங்கடங்களும் பிரச்னைகளும் வர வாய்ப்பு உள்ளது. சூழ்நிலை அறிந்து நடந்து கொள்வது அவசியமாகும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் அவசர முடிவுகள் எடுக்காம கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடியுங்க. பெட்டர். விரும்பியது கிடைக்கும் சூழ்நிலை காணப்படவில்லை. வளைந்து கொடுத்து போவதன் மூலம் நற்பலன்களைக் காணலாம். முயற்சியில் வெற்றி பெறுவதற்கு பொறுமை ரொம்பவே அவசியம். திடீர் யோகங்கள் உண்டுங்க. வீடு கட்ட எதிர்பார்த்த அரசு அனுமதி கிடைக்கும். தாயாருடன்  ஏற்பட்டிருந்த குட்டியூண்டு கருத்து வேறுபாடு நீங்கி அவங்க உங்ககூட பழம் விட்ருவாங்க.

கும்பம்

உங்களைப் பிடிக்காமல் இத்தனை காலம் இருந்த ஒருத்தர்கூட இந்த வாரம் நல்லுறவு மலரும். பேச்சில் கொஞ்சம் கேர்ஃபுலா இருங்கப்பா. தட் மீன்ஸ்…. பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது பெட்டராயிருக்கும். ஆனாலும் உங்க பொறுமைக்குச் சின்னச் சின்ன நற்பலன் கிடைச்சே தீரும். குடும்பத்துல கடந்த சில வருஷங்களா காணாமல் போயிருந்த அமைதி மெல்ல மெல்ல உள்ளே வரும். கடந்த சில வாரங்களா சிரிக்க மறந்திருந்தீங்க. இனி பெட்டராகும். அலுவலகத்துல உங்களுக்குப் புது கௌரவம் கிடைக்கும். மகன் அல்லது மகளோட படிப்பு சம்பந்தமா இருந்த டென்ஷன் தீரும். சகோதர சகோதரிங்ககூட வெளியில் போவீங்க. திடீர் வருமானங்கள் எதிர்பார்த்ததைவிட உங்களை ஹாப்பியாக்கும். டாடிக்கு உங்களால நன்மை வரும். ஆன்மிகப் பயணங்களால சந்தோஷம் கிடைக்கும். மனைவிக்கு/ கணவருக்கு வருமானம் இன்கிரீஸ்  ஆகும். குடும்பத்துல சுப நிகழ்ச்சி உங்கமுன்னிலைல நிறைவேறி சந்தோஷம் தரும்.

மீனம்

உத்யோகத்தில் நல்ல மாற்றங்கள் வரும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பாங்க. குழப்பங்கள் மன அழுத்தம் எல்லாமே மேஜிக் போட்ட மாதிரி நீங்கும் பூர்வீக / பிதுரார்ஜித சொத்து சம்பந்தமான விஷயங்கள் நல்ல படியா முடியும். அப்பா வழித் தாத்தா பாட்டியிடமிருந்து உதவிகளும் அன்பும் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும்.  குழந்தைங்களுக்கு ஹாப்பி நியூஸ் உண்டு. மனைவி அல்லது கணவருக்கு முன்னேற்றம் உண்டு. டாடி குட் நியூஸ் கொண்டு வருவார். திடீர் லக் உங்களைத் திக்குமுக்காடச்செய்யும். எந்த லாபமும் கொங்சம் ஸ்லோவாத்தான் இருக்கும். வர வேண்டிய கடன் அல்லது  வாடகை பாக்கி கைக்கு வரும். திருமண விழாவையோ அல்லது குழந்தை பாக்கியமோ எதிர்பார்த்தவர்களுக்கு குட்= நியூஸ் உண்டு. பங்குவர்த்தகத்தில் உங்க கணிப்புகள் சரியாக அமையும். வியாபாரத்துல கணிசமான லாபம் கிடைக்கும்.  தொழில் விஷயத்துல.. உத்யோகத்துல நீங்க எதிர்பார்த்த முன்னேற்றம் கொஞ்சம் ஸ்லோவாத்தாங்க இருக்கும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 10 முதல் ஜூன் 12 வரை  

More articles

Latest article