மேஷம்

ஒங்களோட புத்திசாலித் தனத்தை வளர்த்து அதன் மூலம் பிரகாசித்து ஹாப்பி ஆவீங்க. கலை மற்றும் இசை போன்றவற்றில் ஈடுபட்டு பயனடைவீங்க. உங்க வளர்ச்சிக்கு விடாமுயற்சியைப் பயன்படுத்தலாம். இது அதிக முயற்சி எடுத்து அதிக பலன் பெறும் வாரம். சவால்களை சந்திக்க அமைதியான போக்கை மேற்கொள்ள வேண்டும். உணர்ச்சி வசப்படுதலைத் தவிர்க்கணுங்க. அமைதியுடனும் கட்டுப்பாடுடனும் இருக்கணும்னு நீங்க எடுத்த சபதம் வெல்லும். பலன்கள் கலந்து காணப்படும். எந்தச் செயலையும் செய்வதற்கு முன் சிறப்பாத் திட்டமிடுங்கப்பா. உங்க தகவல் பரிமாற்ற திறமையை மேம்படுத்திப் பலன் காணலாம்.  இந்த வாரம் உற்சாகத்துடன் காணப்படுவீங்க. ரிலேடிவ்ஸ் மற்றும் ஃப்ரெண்ட்ஸ் ரொம்பவே உதவிகரமா இருப்பாங்க. உங்க கடின முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்க விரைந்து முடிவெடுப்பீங்க.

சந்திராஷ்டமம் : மார்ச் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.

ரிஷபம்

இந்த வீக் ஒங்களுக்கு விரும்பத்தக்கதா இருக்கும். உங்க இலக்குகளை ஈஸியா அடைவீங்க. இந்த வாரம் பயனுள்ள திட்டங்களைத் தீட்டுவீங்க. அது உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். சுருங்கச் சொன்னால் இந்த வீக் சிறப்பான வாரம். நீங்க ஒங்களோட செயல்களை குறித்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ முடிப்பீங்க. உங்க புத்திசாலித்தனத்தை மேம்படுத்த நீங்க சாதகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த வீக் உங்க ஃபேமிலிக்கே சிறப்பான வாரம். நீங்க ஒங்களோட செயல்களை குறித்த நேரத்திற்குள்ளோ அல்லது அதற்கு முன்போ முடிப்பீங்க. ஒங்களோட புத்திசாலித்தனத்தை மேம்படுத்த நீங்க சாதகமான நடவடிக்கைகளை எடுக்கணுங்க. ஒங்களோட புத்திசாலித் தனத்தை வளர்த்து அதன் மூலம் பிரகாசிப்பீங்க. கலை மற்றும் இசை போன்றவற்றில் ஈடுபட்டு சந்தோஷப்படுவீங்க. ஒங்களோட வளர்ச்சிக்கு இந்த வாரத்தை நல்லபடியா யூஸ் பண்ணிக்கலாம்.

சந்திராஷ்டமம் : மார்ச் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.

மிதுனம்

இந்த வீக் சின்ன முயற்சிலயே அதிக பலன் பெறும் வாரம். ஒங்களோட பணியில் வளர்ச்சி காணப்படும். புதிய விஷயங்களை கத்துக்குவீங்க. பணி நிமித்தமான டிராவல் செய்யறதுக்கு சான்ஸ் இருக்குங்க. பணப்புழக்கம் தேவையைக் காட்டிலும் ஜாஸ்தியா இருக்கும். ஒங்களோட வங்கியிருப்பு இன்கிரீஸ் ஆகும். ஒங்களோட காதலர்/ காதலி/ கணவர்/ ஒய்ஃபிடம் பழகும் போது நகைச்சுவை உணர்வு வெளிப்படும். இது உறவின் நல்லிணக்கத்தை மேம்படுத்தும். இந்த வாரம் சவால்களை சந்திக்க அமைதியான போக்கைக் கடைப்பிடிக்கணுங்க. உணர்ச்சி வசப்டுதலை அவாய்ட் செய்யணும். அமைதியுடனும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டும். நீங்க பணிகளை குறித்த நேரத்தில் முடிச்சு நிம்மதியடைவீங்க. சக பணியாளர்கள் ஆதரவா இருப்பாங்க. அதனால நிம்மதி ஏற்படும். இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த ஹெல்த் பிரச்னைங்க தீரும்.

கடகம்

ஒங்களோட குழந்தையின் படிப்பு சம்பந்தமான விஷயங்களுக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். இதனால ஒங்களோட தேவைங்களையெல்லாம் ஸ்லைட்டா கொறைச்சுப்பீங்க. ஒங்களோட துணையிடம் குழப்பமான உணர்வுகளை வெளிபடுத்திடாதீங்கப்பா.. இதனால சில விரும்பத்தகாத விஷயங்களுக்கு விதை வெதைச்சுடாதீங்க. இந்த வாரம் பலன்கள் மிக்ஸடாய்க் காணப்படும். எந்தச் செயலையும் செய்யறதுக்கு முன்னாடி சிறப்பாய்த் திட்டமிடுங்க. ஒங்களோட தகவல் பரிமாற்ற திறமையை மேம்படுத்தி பலன் காணுவீங்க. இந்த வாரம் ஆபீசில் சவால் கொஞ்சம் இருக்கும். இந்த வீக் சுமுகமாக இருக்கணும்னா பணிகளை திட்டமிட்டு முன்னுரிமைப் படி ஆற்றணுங்க. பணவரவு சமாராக இருக்கும். இந்த வாரம் ஃபேமிலிக்காகச் செலவு செய்வீங்க. அதனால் கையில் இருப்பு குறைவாக இருக்கும்.

சிம்மம்

இந்த வாரம் உற்சாகத்துடன் காணப்படுவீங்க. இந்த வாரம் உங்க சாதுர்யத்தை நல்ல பலன் பெறப் பயன்படுத்திக்குவீங்க. ஒங்களோட கடின முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். சில விஷயங்களில் விரைந்து முடிவெடுப்பீங்க.   அது பெஸ்ட் ரிசல்ட் கொடுக்கும். சில விஷயங்களில் நீங்க எதிர்பார்த்த ஸ்பீட் வெளியாட்கள் கிட்ட இருக்காது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்குங்க. சீக்கிரத்தில் எல்லாம் சரியாகும். டோன்ட் ஒர்ரி. நீங்க செய்யும் பணியை விரும்பி செய்வீங்க. சுய வளர்ச்சி மூலம் ஆபீசில் முன்னேற்றம் காண்பீங்க. இந்த வாரம் அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பை நம்ப வேண்டும். ஒங்களோட கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகையாகப் பண வரவு இருக்கும். அதைவிடவும் சந்தோஷம் குடுக்கக்கூடிய விஷயம் என்ன தெரியுமா? யாருடைய தவறான ஆலோசனைக்கும் முக்கியத்துவம் தராம, நீங்க ஒங்களோட முயற்சியில் நேர்மையாக இருப்பீங்க.

கன்னி

இனிமையான வார்த்தைகளை பரமாரிக் கொள்வதன் மூலம் ஃப்ரெண்ட்ஸ்ஸுடன் ஜாலியா… புரிந்துணர்வுடன் இருப்பீங்க. உங்க கிட்ட உள்ள ஆற்றல் காரணமா நல்ல ஆரோக்கியம் காணப்படும். பண விவகாரத்தில்.. அல்லது லோன் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல எந்தப் பிரச்சினையும் இருக்காது. இந்த வீக் நீங்க விரும்பத்தக்கதா இருக்கும். ஒங்களோட இலக்குகளை ஈஸியா அடைவீங்க. இந்த வீக் பயனுள்ள திட்டங்களைத் தீட்டுவீங்க. அது உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். ஒங்களோட பணியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். அதிகப்படியான பண வரவு ஊக்கத்தொகையாக கிடைக்க சான்ஸ் இருக்குங்க. நீங்க பிசினஸ் செய்யறவங்களா? எனில் இந்த வாரம் பணம் சம்பாதிப்பதற்கான வலுவான அடித்தளத்தை அமைச்சுக்குவீங்க. ஒங்களோட சேவிங்க்ஸ் ஆற்றல் அதிகரிக்கும். நண்பர்கள்னு நெனைக்கறவங்க எல்லாரும் ரியல் நண்பர்கள்தானான்னு கவனமாயிருங்க.

துலாம்

உங்க கிட்ட உள்ள உற்சாகமான மன ஆற்றல் காரணமா இந்த வாரம் ஒங்களோட ஆரோக்கியம் பெஸ்ட்டா இருக்கும். லாஸ்ட் வீக் அலுவலகத்துல இருந்த பிரச்னைங்க மொத்தம் காத்தடிச்ச மேகம் மாதிரிக் கலைஞ்சு காணாம போயிரும். இந்த வீக் சிறப்பான வாரம். நீங்க ஒங்களோட செயல்களை குறித்த நேரத்திற்குள்ளயோ அல்லது ஈவன் அதுக்கு முன்னாடியேவோகூட ஃபினிஷ் செய்துடுவீங்க. ஒங்களோட புத்திசாலித்தனத்தை மேம்படுத்த நீங்க சாதகமான நடவடிக்கைங்களை எடுக்கணுங்க. உங்களுக்குள்ள மறைஞ்சிருக்கற திறமைங்களை யூஸ் பண்ணணுங்க.  பொறுமை வேணும். தர்ம சிந்தனை மூலம் திருப்தி கிடைக்கும், தரமான பணிகளை குறித்தநேரத்துல முடிச்சுக் கொடுக்க முடியும். புதிய முதலீடுகளில் பங்கேற்பது போன்ற முக்கிய டெஸிஷன்களை இந்த வாரம் நீங்க எடுக்கலாங்க பணத்தைப் பயனுள்ள வகைல செலவு செய்வீங்க. ஒங்களோட பொறுப்புகளைச் சிறப்பாய்ச் செய்வீங்க.

விருச்சிகம்

ஆரோக்கியமா இருப்பீங்க. நல்ல உணவுமுறை ஆரோக்கியத்தை சிறப்பாய்த் தக்க வைக்கும். கால் வலி வர சான்ஸ் இருக்குங்க. ஸோ… லேசான உடற்பயிற்சி மேற்கொள்ளுங்க. நினைச்ச காரியத்தை நிறைவேற்ற புதுப்புது செயல்களில் ஈடுபடுவீங்க. போட்டியாக இருந்த நபர்களை ஓவர் டேக் செய்து வியாபாரத்தை பெருக்குவீங்க. அரசியல்வாதிகள் ரொம்பவே செல்வாக்கு அடைவாங்க. கலைத்துறையினர் பெரும் புகழும் செல்வாக்கும் பெறுவாங்க. வீண் வாக்குவாதங்களை விலை கொடுத்து வாங்க வேண்டாம். சொத்து பிரச்சனைங்க சாதகமாக முடியும். அடுத்தவங்க ஆலோசனையை அதிகம் கேட்க வேண்டாம். பங்குச்சந்தை வியாபாரங்களில் நிதானமாக நடந்துக்குங்க. திருமண காரியங்கள் தள்ளிப் போயிக்கிட்டிருந்த நெலைமை மாறி சுறுசுறுப்படையும். வெளியூர் பயணங்களால அதிக நன்மை அடையக்கூடிய வாரம் இது.

தனுசு

நில விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். வீடு கட்டுவதற்கான முயற்சியை தொடங்குவீங்க. ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள சான்ஸ் இருக்குங்க. அரசாங்க காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புதிய வேலை சான்ஸ்கள் பெறுவீங்க. வெளிநாட்டிலிருந்து குட் நியூஸ் வந்து சேரும். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் இருந்துக்கிட்டிருந்த சிக்கல் தீரும். நைட் நேரப் பயணங்களில் விழிப்பாக இருங்கள். எதிர்ப்புகளைத் தாண்டி சிலருக்கு லவ் மேரேஜ் நடக்கும். குழந்தை இல்லாதவங்களுக்கு இந்த  வீக் நல்ல நியூஸ் வந்து மனசுல சந்தோஷத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் மள மளவென்று முன்னேற்றம் காண்பீங்க. போட்டிகளைத் தகர்த்து எறிவீங்க. ஒங்களோட வார்த்தையால் மற்றவரின் கவனத்தை ஈர்ப்பீங்க. திடீர் பண வரவு உண்டாகும். எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் ஓடியே போய் மறையும். அறிவுக் கூர்மையால் வெற்றி பெறுவீங்க.

மகரம்

போட்டி பந்தயங்களில் சக்ஸஸ் கெடைக்கும். ஷேர் மார்க்கெட் பிசினஸ் அமோகமா நடக்கும். அலுவலக ஊழியர்களுக்கு இடம் மாற்றம் ஏற்பட சான்ஸஸ் இருக்குங்க. தனியார் துறையில் உள்ளவங்க அக்கறையுடன் வேலை பார்க்கணுங்க. கலைத்துறையினர் சிரமப்படாம வெற்றி பெறுவாங்க.  அலங்காரப் பொருட்களின் விற்பனை ரொம்பவே லாபத்தை கொடுக்கும். கோபத்தை குழி தோண்டி ஆழத்துல புதைச்சுடுங்கப்பா.

விட்டதை பிடிக்க வேண்டும் என்கிற விடாமுயற்சியோட இரவு பகலாய்ப் பாடுபடுவீங்க. குடும்பத்துக்குத் தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பீங்க. தடைகள் அண்ட் எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி வியாபாரத்தை சீராக நடத்துவீங்க. ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வீங்க. கமிஷன் வியாபாரம் நல்ல பலனை கொடுக்கும். நீங்க எதிர்பார்த்ததையும்விட நல்ல பலன்! மனசுல இருந்த கவலைங்க மெல்லக் குறைஞ்சுக்கிட்டே வரும், சீக்கிரத்தில் முழுசா காணாமல் போயிடும்.

கும்பம்

தொழிலில் புதிய புதிய திட்டங்களைச் செயல்படுத்துவீங்க. வேலை இடத்தில் மேல் அதிகாரிகளின் அன்பும் சப்போர்ட்டும் கெடைக்கும். ஆனா சும்மா இல்லீங்க. எல்லாமே உங்களோட விடா முயற்சியோட சிறு தடை தாமதங்களுக்குப் பிறகுதான் நடக்கும். பட்… நடக்கும் ! நினைச்ச விஷயம் ஒண்ணு ஆச்சர்யகரமாய்த் தடையில்லாம நடக்கும். ஃபாரின் செல்வதற்கான சான்ஸ் ஏற்படும். வாக்கு சாதுரியத்தால் புதிய  ஒப்பந்தங்களைப் பெறுவீங்க. தொழில் காரணமாய் வெளியூர் பயணங்கள் போவீங்க. பெரிய மனிதர்களின் சந்திப்பு வியாபாரத்திற்கு தேவையான உதவி கிடைக்கும். கேது நான்காம் வீட்டில் இருக்கிறார். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீங்க. கலைத்துறையினருக்கு புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். ஜவுளிக்கடை, ஹோட்டல்/ ரெஸ்டாரென்ட்ஸ் அமோகமா நடக்கும்.

மீனம்

வீடு கட்டும் எண்ணம் இருந்தால் உடனே செயல்படுத்துங்க. ஆடம்பரமாக செலவு செய்து அந்தஸ்தை உயர்த்திக்குவீங்க. ஒங்களோட சொல்லுக்கு குடும்பத்திலும் வெளியிலும் மரியாதை கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்துலயெல்லாம் கவனமா இருக்க வேண்டும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் இருந்து வந்த சுணக்க நிலையும் தடை தாமதங்களும் நீங்கும். பொதுவாகவே வாழ்வில் முன்னேறுவதற்கான எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் பெறுவீங்க. ஆலயத் திருப்பணி மாதிரியான தர்ம காரியங்களுக்கு உதவி செய்கின்ற சான்ஸ் உங்களுக்கு ஏற்படும். துணிச்சலுடன் காரியத்தில் இறங்கி மற்றவர்களுக்கு உதவி செய்வீங்க குறுக்கு வழியில் லாபம் பார்க்க நினைக்காதீங்க. ஒரு ரூபாயை போட்டு பத்து ரூபாய் சம்பாதிக்கலாம்னு சிலர் ஆசை காட்டுவாங்க. ஏமாந்துடாதீங்க. மகன்/ மகள் வாழ்வில் நிம்மதியும் அமைதியும் கூடுதலாகும். பணவரவு தொடரும்.

சந்திராஷ்டமம் : மார்ச் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.