மேஷம்
மனசுல நல்ல எண்ணங்கள் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது. குறுக்கு வழியில் சம்பாதிக்கவோ … லாபம் பார்க்கவோ யாராவது நண்பர்கள் அல்லது சிநேகிதிகள் ஆலோசனை கூறினால் அவங்க இருக்கும் திக்கைப் பார்த்து.. கையைத் தலைக்குமேல உயர்த்தி, ஒரு கும்பிடு போட்டுவிட்டு உங்க மனசாட்சியின் பேச்சுக்கு மட்டும் காதைக் குடுங்கள், இல்லாட்டி சிரமப்படப்போவது யாருன்னு நான் சொல்லவும் வேணுமா? பட் ஒன் திங்.. உங்களோட பேச்சுல நேர்மையும் உண்மையும் நியாயமும் இருக்கும் என்பதால பிழைச்சீங்க. எந்தக் காலத்துலயோ உங்களுக்கு உதவி செய்த.. உங்க முன்னேற்றத்துக்குக் காரணமானவங்களை மறக்காதீங்க. எடுத்த விஷயம் ஆரம்பத்துல தடைபட்டாலும் பின்னர் நல்லபடியா நடந்து முடியும். மனசுல எதைப் பத்தியாவது சிந்திச்சபடி இருப்பீங்க.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 12 முதல் ஆக்ஸ்ட் 15 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருப்பது நல்லது.
ரிஷபம்
வேளை வந்துவிட்டது.. வேலைக்கும் மாலைக்கும் சேர்த்து ஒரு சேர நேரம் வந்துவிட்டது. அம்மாவின் உடல் நிலையின் மேல் நிறைய அக்கறை வைக்கணும்மா. புது வீடு/ ஃப்ளாட் வாங்கப் போறீங்க, கங்கிராட்ஸ். வேலை மாற எண்ணம் இருந்தால் அவசரம் வேணாம். யோசிச்சு டிஸைட் பண்ணுவது நல்லது. காதல் வலையில் கால்வைத்துச் சிக்க வாய்ப்பிருக்கு. குழந்தைங்களாலயும்.. கணவர் / மனைவியாலயும், சந்தோஷமும் நிம்மதியும் பெருமிதமும் ஏற்படுமுங்க. குழந்தைச் செல்வத்துக்காக ஏங்கிக்கிட்டிருந்தவங்களுக்கு அச்செல்வம் வந்து வயிற்றில்/ மனைவியின் வயிற்றில் குடியேறப்போகுதுங்க. மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற நீங்க அயராமல் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். அதிர்ஷ்டம் கூடுதலா வரும். ஹாப்பியாயிடுவீங்க.
மிதுனம்
உங்களை ராத்திரியும் பகலுமாய்ப் பயமுறுத்திக்கிட்டிருந்த ஆரோக்யப் பிரச்சினையெல்லாம் போயே போச். ரைட்டா? தேவையில்லாமல் கோபமும் வேண்டாத இடத்துல தைரியமும் வந்தால் அதுக்கெல்லாம் குட்பை சொல்லிடுங்கப்பா. ஹஸ்பெண்டுக்கு வங்கிக் கணக்கில் டிஜிட்ஸ் கூடும், கொஞ்சம் தெனாவெட்டாத்தான் பேசுவார், கண்டுக்காம விடுங்க, தானா இறங்கி வருவாரு. நிறையச் செலவு. செலவுக்கு மேல செலவு.. ஏகப்பட்ட செலவுன்னு நெறைய ஏற்பட்டடாலும் மனசுலயும் முகத்துலயும் குதூகலம் நிரம்பி வழியும். ஆமாங்க.. ஒவ்வொரு செலவும் உங்களுக்கு அவ்வ்வ்வ்ளோ சந்தோஷத்தை அள்ளித் தரப்போகுது. வாழ்க்கையை ரசிச்சு அனுபவிப்பீங்க. நீங்க மிகவும் மதிக்கக்கூடிய நபர் ஒருத்தர் ஒங்களைப் பாராட்டுவாரு. பிரதர்/ சிஸ்டர்னா கொஞ்சம் அப்டி இப்டி சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும். அதுக்குப் போயி கவலைப்படுவீங்களாக்கும்?
கடகம்
அடேயப்பா.. அதிருஷ்டம் டெர்ரஸைப் பிச்சுக்கிட்டக் கொட்டப் போகுது பார்த்துக்கிட்டே இருங்களேன். வரவுக்கு மேல் வரவு..லாபத்துக்குமேல் லாபம்.. செம.. ஆனால்… ஆரோக்யத்தை மட்டும் கிள்ளுக்கீரை மாதிரி அலட்சியப்படுத்திக்கிட்டிருக்கீங்களே.. நியாயமா? குடும்பத்துல யாருக்கேனும் மெடிகல் செலவு வர்க்கூடும். எனினும் உங்களுக்கு முன்யோசனை அதிகம். காப்பீடும் இருக்கும். மனசும் ரெடியாக இருக்கும். வாரத்தின் முற்பகுதில, ஒங்களோட உற்றார் உறவினர்களிடையே சுமூக உறவு நீடிக்கும். பிரிஞ்சு இருந்த நண்பர்களையோ, உறவினர்களையோ சேர்த்து வைப்பீங்க. சிலர் வேண்டுமென்றே விஷமப்பேச்சுகளை பேசுவர். கண்டுக்கவே கண்டுக்காம கடந்து போயிடுங்க. கடந்த சில வாரங்களா உங்க நிம்மதியை கெடுத்துக்கிட்டிருந்த சில சில்லறைப் பிரச்சினைகள் மறைந்து, வாரத்தின் பிற்பகுதியில் நிம்மதியான உறக்கம் காணுவீங்க. சிலருக்கு கண் சம்பந்தமான சின்ன டென்ஷன் வந்தாலும் சரியாயிடும்.
சிம்மம்
புது வேலை கிடைக்கும், அல்லது கிடைச்சிருக்குமே? சிஸ்டர் அல்லது பிரதர் வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி இ மெயில் பண்ணுவாங்கம்மா. டாடியோட ஃபைட் சீன் முடிஞ்சாச்சா? மம்மி சப்போர்ட் நிறைய இருக்குமே? டாக்டர்களுக்கு நல்ல செய்தி உண்டு. கட்டம் சம்பந்தமான லாபம் எதிர்பாத்திருந்தவங்களுக்கும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இருக்கறவங்களுக்கும் வீடு வாங்க விக்கறவங்களுக்கும் லாபம்ஸ் உண்டு. அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வாங்க. ஒரு சிலருக்கு அவங்க விரும்பியபடி இட மாறுதல் கிடைக்க சான்ஸ் இருக்கு. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால்பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
கன்னி
செலவு அதிகமாயிருக்கும்தான்.. ஆனால் வரும்படியும் கூடுதலாகப்போகுதேம்மா. அலுவலகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விடும்படி ஆடிட்டிங் முடியும். கடன் கிடன் என்று இப்போதைக்கு எதிலும் இறங்க வேண்டாம். லோன் மனு எதிலும் கையெழுத்து கைநாட்டு என்று ஆட்டோகிராஃப் போட்டுவிட்டு அப்புறம் புலம்பாதீங்க, ஆமாம், சொல்லிட்டேன். பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும். நண்பர்கள் மூலமாய்ச் சில நல்லவங்க அறிமுகமாவாங்க. எவ்ளோதான் நல்லவங்கன்னாலும் ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்தா பிழைச்சீங்க. பல நாள் கழிச்சுப் பழைய நட்பைச் சந்திப்பீங்க.
துலாம்
குழந்தைங்களைப் பற்றி என்னவோ ரொம்பதான் கவலைப்பட்டீங்களே? ஒரு நாள் அப்படி இருந்தால் ஒரு நாள் இப்படியும் வயிற்றில் ரோஸ்மில்க் வார்ப்பாங்க என்று இப்போதாவது புரிந்ததா? அதென்ன உங்களுக்கு பயப்பட வேண்டாததற்கு பயம் வருது? பயப்பட வேண்டிய இடத்தில் அசட்டுத் துணிச்சல் குபீர்னு வருது? ’அஞ்சுவது’ என்று ஆரம்பிக்கும் குரளுக்கு அர்த்தத்தைப் படிச்சு நிற்க அதற்கத் தக. வெளியூர் வெளிநாடுன்னு பர்சனல் காரணங்களுக்காவும் ஆபீஸ் பயணமாவும் போவீங்க. அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேற வேலைக்குச் செல்ல விரும்பறவங்க அதற்கான முயற்சிகள்ல இப்போ ஈடுபடலாம். பிஸினஸ்ல எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கெடைக்கும். ஏன்.. அதையும்விட அதிகமாக் கெடைச்சாலும் ஆச்சர்யப்படாதீங்க. சிலர் வாடகை வீட்டுலேயிருந்து சொந்த இடத்துக்கு மாத்திக்கிட்டுப் போய் அந்தக் கனவு இல்லத்துல ஹாப்பியா போட்டோ எடுத்து சோஷல் மீடியாவுல போட சான்ஸ் இருக்கு.
விருச்சிகம்
ரொம்ப ரொம்ப அழகான வாகனம் அமையுங்க. உங்க கனவு அப்பிடியே கண்முன்னால நிஜமாயிடுச்சில்ல? என்ஜாய். டாடியோட எப்பப்பார்த்தாலும் சண்டை வலிக்காதீங்கம்மா. உங்களுக்கும் அவர் வயசாகும்போதுதான் புரியும். புதிய வேலை தேடவேண்டாம். இருக்கும் வேலையில் நல்ல பெயர் எடுக்கப்பாருங்க, அதை நம்பி இதை விட்டுடாதீங்க. ப்ளீஸ். ரொம்ப மகிழ்ச்சியான வாரம் இது. ஆபீஸ்ல கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். ஆனா அந்த சிரமமே தெரியாத அளவுக்குப் பர்சனல் சந்தோஷங்கள் மனசுல நெரம்பியிருக்கும். வருமானம் இன்கிரீஸ் ஆகும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. ரொம்ப நாளா உங்களை வருத்திக்கிட்டிருந்த உடல் உபாதைகள் இனி குணமாயிடும் பாருங்களேன். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மத்தவங்களிட்ட பேசும்போது பொறுமை தேவை. உங்க திறமை மேல நீங்களே நம்பிக்கை வைக்க மாட்டேன்றீங்களே?
தனுசு
யம்மா .. யம்மா.. லக் என்றால் லக் இதுவல்லவோ அதிருஷ்டம். நாலா பக்கத்திலிருந்தும் பணமென்ன பாராட்டென்ன.. நல்லது.. நல்ல வகையில் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கறீங்க. பாராட்ஸ். மனசுல மென்மையும் கனிவும் கருணையும் அதிகரிக்கும். நன்மை செய்து புகழ் வாங்குவீங்க. 30 வயசைத் தாண்டியவங்களாய் இருந்தால் வாழ்வின் வெற்றிக்கான படிகளில் ஏற ஆரம்பிச்சுட்டீங்க. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரிச்சு நடந்து அவங்களோட நன்மதிப்பை சம்பாதிப்பீங்க. ஒங்களுக்கும் மனசு நிம்மதியாயிடும். உங்களோட வேலைல மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ இந்த வாரம் எதிர்பார்க்கமுடியாது. ஆனா இப்போ நீங்க செய்யற வேலைங்க அந்த நிலைக்கு ஒங்களை உயர்த்திடும். வீட்டு விஷயங்களுக்காகக் கொஞ்சம் அதிகமா உழைக்கவேண்டி இருக்கும். பட்டு ஹாப்பியா இருப்பீங்க.
மகரம்
வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்னா அது ஒண்ணுதான் நம்மால முடியாத விஷயம், என்ன செய்ய? குறிப்பா அண்ணன் தங்கை அக்கா தம்பின்னா தடாலடியா எடுத்தேன் கவிழ்த்தேன், ஏதோ எல்லாரும் உங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போறாங்களோ பிழைச்சீங்களோ. போதும் நிப்பாட்டிக்குங்க. டாடி மூலம் பெரிய நன்மை ஒண்ணு கிடைக்கப்போதுகு. நீங்கதான் எப்பவுமே அவர் செல்லமாச்சே. பிரச்னைங்க இல்லாத வாரம். ஒங்களோட எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும். இந்த வாரம் வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் போக நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் அருமையா இருக்கும். தொழில் வியாபாரத்துல வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், சக்ஸஸ்ஃபுல் வாரமாவே இருக்கும். டோன்ட் ஒர்ரி. தடை தாமதங்கள் இருக்கும்தான். ஆனா, எதுவும் நல்லபடியா முடியும்.
கும்பம்
உங்க பேச்சினால உங்களுக்கு மிகுந்த நன்மைகள் எற்படப்போகின்றன. அப்படியே நேர் எதிராகவும் ஒன்றிரண்டு நிகழக்கூடும். ஆனா அது உங்க மிஸ்டேன் இல்லை. எனி வே… சற்றே வார்த்தைகளை கவனத்துடன் பிரயோசித்தால் பிரச்சினையே நேராது. ஓ.கே? உடன் பிறந்த பிறப்புக்களுடன் சண்டை.. போர்.. லடாய்.. டிஷ்யூம் எதுவும் வேண்டாம். குறிப்பா கேஸ் எதுவும் போட்டு கீட்டு வெக்காதீங்க. கண்டிப்பா அவங்க பக்கம்தான் ஞாயம் இருக்கும். நல்லவங்க நட்பைப் புதுப்பிச்சு நிம்மதியடைவதோட, அதனால மன உறுத்தல் நீங்கும். குடும்பத்துல சமீபகாலமா ஏற்பட்டிருந்த சின்னச்சின்ன டென்ஷன்ஸ் மெல்லச் சரியாக ஆரம்பிக்கும். மனைவி/ கணவர் பணியிடத்துல அவார்ட் ரிவார்ட் வாங்குவாங்க. அது ஒங்களுக்கும் பெருமிதம் தரும். வீட்டில் திருமணம், குழந்தைப் பேறு மாதிரியான ஹாப்பி நிகழ்ச்சிகள் நிறைவேறி உற்சாகம் தரும்.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 8 முதல் ஆக்ஸ்ட் 10 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருப்பது நல்லது.
மீனம்
கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். மேடை மேல் ஏற்றிக் கைதட்டுவாங்க. நீங்கள் புத்திசாலி என்று எல்லோருமே ஒப்புக்கொள்ளும் நேரம் வந்தாச்சும்மா. வார்த்தைகளை கவனிச்சு கவனிச்சு ரிலீஸ் பண்ணுங்க. டாடியை நல்லாக் கவனிச்சுக்குங்க. புது வேலை தைரியமாத் தேடலாம். ஆனா இன்னிக்கு மனுப்போட்டா இன்னிக்கே சேருவீங்கன்னு கற்பனை செய்துக்க வேணாம். எல்லாத்துக்கும் நேரம் காலம் வரும். வேலை பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீங்க. ஆனாலும் முடிச்சுட்டோம் என்ற திருப்தி வரும்.குடும்பத்துல உள்ளவங்களை அனுசரிச்சுப் போவதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஓரிரண்டு வாரங்களா இருந்துக்கிட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகங்களோட எதிர்கால நலனுக்காக முக்கியப் பணிகளை மேற்கொள்வீங்க.
சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 10 முதல் ஆக்ஸ்ட் 12 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருப்பது நல்லது.