
மேஷம்
இந்த வாரம் தெளிவான மனநிலை இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீங்க. செயல்திறன் அதிகரிக்கும் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீங்க. குடும்ப ஒற்றுமைக்குக் கொஞ்சம் அதிக முயற்சிங்க எடுக் வேண்டிய கால கட்டம் ஆரம்பமாயிடுச்சு இத்தனை நாள் எதைப் பேசினாலும் அதைக் காவியமா நினைச்சாங்க. இனியும் அப்படி இருக்கணும்னா நல்லா யோசிச்சுட்டுப் பிறகு வாயைத் திறக்கணுங்க. உங்களுடைய பிரபல கோபத்தைக் கொஞ்சம் விட்டுக் குடுக்க வேண்டிய சந்தர்பங்கள் வரும். விட்டுக் குடுத்தா கெட்டுப்போக மாட்டீங்கன்றது பழைய பழமொழிதான். ஆனா அது இப்போ நமக்குப் பொருத்தம்.
சந்திராஷ்டமம் : மே மாதம் 12 முதல் மே மாதம் 15 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ஆபீஸ்ல இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவாங்க. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க. குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மாணவர்களுக்கு ஆர்வம் கூடி படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, சந்தோஷம் தரும். அதிகாரிகளுடன் வீண் சச்சரவுகளை அவாய்ட் செய்தால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். சம்பாதிக்கும் திறன் மேம்படும். மிகக் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாக செய்து முடிப்பீங்க. தடை தாமதங்கள் ஸ்லோவாய் விலகும். கொஞ்சம் எதிர்பார்க்காத பழைய ஃப்ரெண்டை ஒரு விசேஷத்துல மீட் பண்ணி உற்சாகமாவீங்க. பண வரவு இன்கிரீஸ் ஆகும்.
மிதுனம்
இந்த வாரம் தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் மட்டுமில்லாமல் ஃப்ரெண்ஸ்ஸாலும் நன்மை உண்டாகும். உங்களுடைய உற்சாகமான…கடுமையான கூடுதல் முயற்சி காரணமாய் காரிய வெற்றி ஏற்படும். இதனால் மனசுல உங்க மேல உங்களுக்கு உள்ள தன்னம்பிக்க இன்கிரீஸ் ஆகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்துல ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீங்க. வியாபாரிங்களைப் பொருத்தவரையில் நீங்கள் விற்கும் அல்லது டீல் செய்யும் பொருளுக்கு மிகுந்த வரவேற்பும் டிமாண்டும் இருக்கும். நல்ல வேளையாகத் தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். ஆபீஸில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும்.
கடகம்
குடும்பத்துல பல காலம் கழிச்சு அமைந்த சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். லேடீஸ்க்கு, சிக்கலான விஷயங்களைக்கூட சுமுகமாக முடித்து விடலாம். கலைத் துறையினருக்கு, நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. அரசியல்வாதிகள் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து தீவிர யோசிச்சு செய்ங்க. ஸ்டூடன்ட்ஸ், புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது தொடர்பான கவலை நீங்கும். இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். மனசுல நிம்மதியும் அதே அளவுக்கு இன்கிரீஸ் ஆவுங்க. ஒரு வழியா ஆரோக்கியம் சம்பந்தமான பிராப்ளம்ஸ் தீர்ந்து.. ஆஸ்பத்திரி வாசம் மாறும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில செல்லும். நிதி உதவி கெடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம்.
சிம்மம்
சிக்கல்கள் தீர்வதில் இருந்த தாமதம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். எந்த வகைல இன்வெஸ்ட் செய்வதுன்னு குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டும். சட்டென்று கோபம் வரும் ஒங்க குணத்தைக் கொஞ்சம் மாத்திக்குங்க. . தொலைதூரத் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில், வியாபாரத்துல திடீர்ச் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். பட்… எல்லாமே டெம்பரரிதாங்க. இம்மீடியட்டா சரியாயிடும். சில சமயங்கள்ல அசடு வழியக்கூட சான்ஸ் இருக்கு. கவனமா இருந்துக்குங்க. ஸ்டூடன்ட்ஸ், கல்வி பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனை கைகொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.
கன்னி
பிள்ளைகளின் செயல்பாடுகளில் கொஞ்சம் அக்கறையும் கவனமும் செலுத்துங்கப்பா. ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது கேர்ஃபுல்லா இருங்க. யார் எது சொன்னாலும்… உங்களை கமென்ட் செய்தாலம்.. எது பத்தியும் கவலைப்படாதீங்க. பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் ஒங்களுக்கு சூப்பரா உதவி செய்வாங்க. செய்யும் காரியங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் கெடைக்கும். குடும்பத்துல பிரச்சினைங்க இருந்தால் எல்லார்கூடவும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுப்பீங்க. யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீங்க. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து தனவரவு உண்டு. குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும்.
துலாம்
எதிலும் முன்பைவிட சிறிதளவாவது முன்னேற்றம் காணப்படும். எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். சரியான பாதைலதான் போயிக்கிட்டிருக்கீங்க. கவலை வேணாம். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். பேச்சில நிதானம் தேவை. குறிப்பாப் பொது இடங்கள்ல பேசும்போது இரட்டிப்பு கேர்ஃபுல்லா இருங்க. தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்ல திடீர்த் தடை ஏற்படலாம். அதுக்கெல்லாம் சோர்ந்து போயிடாதீங்க. திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு கடின உழைப்பு தேவைப்படும். அன்பு மிக்க பெண்களால் ஆனந்தம் பெருகும். அரசு வகையில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டுங்க. பொறுமையான அப்ரோச் சக்ஸஸ் தரும்.
விருச்சிகம்
ஒங்களோட திறமை மிக்க செயல்களால வெற்றி கிடைக்கும். நீங்களும் உங்க குழந்தைங்களும் செய்யும் காரியங்களாலும் பாராட்டுதல்களும் குவியும். உங்க வாழ்க்கைல மனைவி/கணவர் மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைங்க கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாவும், இலாபகரமாகவும் அமையும். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். நீண்ட காலமா இழுப்பறியா இருந்துக்கிட்டிருந்த ஒரு விஷயத்துல சாதகமான பலன் கிடைக்கும். மத்தவங்களுக்கு நன்8மை செய்யக்கூடிய ஒரு நேர்மையான விஷயம் பத்தி வாதாடி வெற்றி பெறுவீங்க. முன்கோபம் குறையும். பேச்சினால ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவங்க எல்லாம் மீண்டும் நட்பு பாராட்டுவாங்க. அதுவும் பேச்சினாலதான் நிகழும் என்பதுதாங்க வேடிக்கை.
தனுசு
குடும்பத்துல ஒற்றுமை உண்டாகும். இதன் காரணமா அமைதியும் அன்பும் சந்தோஷமும் ஏற்படும். உங்க வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க. பிள்ளைகளிடம் உங்களுக்கும், உங்க கிட்ட அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீங்க. பெண்களுக்கு மனசுல புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். காரியங்களில் நன்மை ஏற்படும். அரசியல்வாதிகள் செயற்கரிய செயல்களைச் செய்வீங்க. கலைத் துறையினர் வெற்றி வாகை சூடுவீங்க. எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்பட சான்ஸ் இருக்குங்க. லேடீஸ்க்கு, காரிய அனுகூலம் உண்டாகும்.
மகரம்
இந்த வாரம் எதிலயும் ரொம்ப கேர்ஃபுல்லா ஈடுபடுங்க. பேச்சில் இனிமை இருக்கும். அதனாலயே பாதி ஜெயிப்பீங்க. எடுத்த காரியங்கள் எல்லாமே நிதானமா முடிஞ்சாலும்கூட உங்களோட தனிப்பட்ட திறமை அண்ட் சாதுரியத்தாலச் சாதகமாக முடியும். ஆபீஸில், தெளிவாகச் சிந்தித்து எதையும் வெற்றிகரமா சாதிப்பீங்க. புதிய பதவிகள் கிடைக்கும். கடந்த சில வருஷங்களா இருந்துக்கிட்டிருந்த பல பிரச்னைங்க தீர்ந்து சரியாப் போயிருக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை நீங்கும். அரசியல்வாதிகள் மேலிடத்தைச் சமாளிக்க வே1ண்டி வரலாம். அரசு விவகாரங்களில் சற்றுக் கேர்ஃபுல்லா செயல்படுவது அவசியம். கலைத் துறைல உள்ளவங்க புதிய ஒப்பந்தங்களில் ஈடுபடும் போது கவனமாக இருந்து சமாளிச்சுடுவீங்க என்பதால கவலை நஹி.
கும்பம்
எதிர்பார்த்த ஹெல்ப் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ், தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டுப் படிப்பது எதிர்காலத்துக்கு உதவும். திறமையுடன் காரியங்களைச் செய்வீங்க. உழைப்புக்கேத்த லாபமும் நன்மையும் கெடைக்கலைன்னு பழைய நட்புகள் உங்களை நாடி வீட்டுக்கு வந்து சந்தோஷமாப் பேசிட்டுப் போவாங்க. சண்டை போட்டுப் பிரிஞ்சவங்க மெல்ல வந்து இணைவாங்க. வேலை உத்யோகம்னு பிஸியா இருந்த நிலை மாறி ஓய்வு, சந்தோஷம், சினிமா, டிராமான்னு ரிலாக்ஸ் ஆவீங்க. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி ஏற்படும். ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் செய்திருந்தவங்களுக்கு எதிர்பார்த்ததை விடவிம் குறைவான லாபம் கெடைச்சாலும், வருத்தப்படும் அளவுக்குக் குறையாது. பேசும்போதும் வாக்குக் குடுக்கும்போதும் பத்து மடங்கு கேர்ஃபுல்லா இருங்க. அல்லது பேசாதீங்க.
சந்திராஷ்டமம் : மே மாதம் 8 முதல் மே மாதம் 10 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
எடுத்த செயல்கள் சற்று நிதானமாத்தான் நடக்கும். ஆனால் கட்டாயம் நடக்கும். திட்டமிட்ட விஷயம் அத்தனையும் நல்லபடியா முடியும். பயந்த விஷயம் நல்லபடியா முடிஞ்சு வயிற்றில் ரோஸ்மில்க் ஊற்றும். குறிப்பா மருத்துவ சமாசாரங்கள் நிம்மதி தரும். உடன் பிறந்தவங்களோட அன்பும் பதிவும் நெகிழ வைக்கும். உறவினர்களுடன் பேசும்போது செம்ம கவனமாப் பேசுவீங்க. அதுவும்கூட நல்லதுதான்ங்க. அவங்க மூலம் வரக்கூடிய விரச்னை ஒண்ணிலிருந்து தப்பிச்சீங்க. வேலைகள் குறைவாகவும் ஓய்வு அதிகமாகவும் இருப்பதோட, ரிலாக்ஸ் செய்து வாழ்க்கையை அனுபவிப்பீங்க. கடமையையும் பொறுப்பையும் சரியா முடிச்சு, நல்ல பெயர் எடுப்பது பற்றி டென்ஷனா இருந்தீங்க. இந்த வாரம் நிம்மதியா உணர்வீங்க. அலைச்சல் அதிகமா இருக்கும். சந்தோஷமும்தான்.
சந்திராஷ்டமம் : மே மாதம் 10 முதல் மே மாதம் 12 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.