மேஷம்

ஹாப்பி வாரமாக அமைந்துள்ளது. மனசுல தெளிவு பிறக்கும். இந்த வீக் வேலையில இருந்துக்கிட்டிருந்த பிரச்னைகள் நீங்கும். புதிய வேலை விசயமாக முயற்சி செய்யலாம். எதிர்பாலினத்தவர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. காதலிப்பவர்கள் பாதுகாப்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டியிருக்கும் காலமிது. பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல்கள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன மன சங்கடங்கள் வரலாம் வெளிப்படையாகப் பேசிப் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். இளைய சகோதரர்களின் உதவி கெடைக்கும். நட்பு விசயத்தில் கவனம் தேவை. பிசினஸ் ரீதியான மாற்றங்கள் ஏற்படும் முன்னேற்றம் வரும். கடன் பிரச்னை நீங்கும். செய்யும் செயல்கள் யாவும் சிறப்படையும், தொழில், வியாபாரத்துல உழைப்புக்கேற்ற ஆதாயம் கெடைக்கும். ஃபேமிலில இருந்த பிராபிளம்ஸ் நீங்கும் கவலைகள் நீங்கி மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 11 முதல் டிசம்பர் 13 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க  

ரிஷபம்

ஆபீஸ்ல / ஃபேக்டரில இடத்தில் சம்பளம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரத் தொனி இல்லாம பாத்துக்குங்க. குடும்பத்துல இத்தனை வாரங்களா  இருந்த குழப்பங்கள் நீங்கும். இளைய சகோதர சகோதரிகளின் உடல் ஆரோக்கியத்துல கொஞ்சமாச்சும் அக்கறை காட்டுங்கள். வார இறுதியில் பேச்சுல தெளிவு பிறக்கும். ஒங்களோட மதிப்பு மரியாதை கூடும். முயற்சி எல்லாத்துலயும் வெற்றி கெடைக்கும். பிரதர்ஸ் மற்றும் சிஸ்டர்ஸின் உதவி கெடைக்கும். திடீர் வருமானம் வரும், அதே போல சுப செலவுகளும் வரும் மனதிற்கு சந்தோஷத்தை தரக்கூடிய வாரமாக அமைந்துள்ளது. ஹாப்பி. ஹாப்பி. ரிலேடிவ்ஸ், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலம் சின்னச் சின்ன உதவிங்க கெடைக்கும். எடுத்த முயற்சி ஒண்ணு வெற்றி அடைய அதிக உழைப்பு தேவைப்படும். பட்.. செய்து முடிச்சுடுவீங்க. வீட்டுல நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீங்க. வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 13 முதல் டிசம்பர் 15 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க  

மிதுனம்

வேலையில சிலருக்கு பிரமோஷன் கெடைக்கும், அலுவலகத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கெடைக்கும். உங்களின் புத்திசாலித்தனம் இன்கிரீஸ் ஆகும். பேச்சுல சூட்டை குறைச்சுக் கோபத்தைக் கட்டுப்படுத்திக்குங்க. பேரன்ட்ஸ் ஆரோக்கியத்துல கவனம் தேவை. புத்திக் கூர்மை அதிகரிக்கும். உங்க உற்சாகமே ஒங்களுக்குக் குதூகலத்தைக் கொடுக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருப்பீங்க. காதல் விஷயங்கள் கை கூடி வரும். எந்த விஷயமானாலும் கவனம் தேவை. பணவரவு அதிகரிப்பது போல், செலவுங்களும் கூடும். மனக் கவலைகள் சிலது இருந்தாலும் குடும்பத்துல உள்ளவங்களோட அன்பான அரவணைப்பு அதையெல்லாம் குறைக்கும். தாயின் ஆரோக்கிய நிலை மற்றும் குழந்தைகளின் செயல்பாடுகளால் உங்கள்  முகத்தில் புன்னகை தவழ்கிறதே ? பணிபுரியும் பெண்கள் சிரமம் ஏதும் இல்லைன்னு ரிலாக்ஸ்டா சொல்லுவீங்க.

கடகம்

உங்க மனசுல ஒரு யோசனை இருக்கும்போது, ​​அதை டிலே செய்யாமல் நிறைவேத்திடறது நல்லது. கொஞ்சம் உங்க பணத்தை சேமிப்பதிலும் அக்கறை காட்டுங்கப்பா. நண்பர்களின் நலன் இப்போ உங்களுக்கு மிக முக்கியமானதா இருக்கும். நீங்க மற்றவ உயர்வுல அக்கறை காட்டி நிறையப் பாராட்டுப் பெறுவீங்க. உங்க பொறுமை இந்த வாரம் குடும்ப அமைதியை பராமரிக்க உதவும்.  யெஸ். ஷூர்லி.  வியாபாரத்துல விரிவாக்கம் பற்றி உங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்று சக்ஸஸ் பார்ப்பீங்க. வீட்ல அமைதியும் நிம்மதியும் சிறப்பானதா இருக்கும். மாணவர்கள் மகிழ்வான கல்விச் சுற்றுலா செல்லும் சான்ஸ் ஏற்படும். வெற்றியும், அரசுத் துறையால் லாபமும் கெடைக்கும். சிலருக்கு புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்பட சான்ஸ் உண்டு. பெண்களால நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்

வார்த்தைகள்ல நெறைய்ய்ய்ய்ய கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. தொழில் லாபம் அதிகரிக்கும், எண்ணியவை யாவும் சூப்பரா நிறைவேறும். திருமண அல்லது அதற்கு இணையான சுப காரியம் தொடர்பாகன பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்க நல்ல வாரம்தான் இது. பிள்ளைங்களோட உடல் ஆரோக்கியத்துல அக்கறை காட்டுங்க. கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வீங்க. இதனால் வீட்டில் நிம்மதி ஏற்படும். தேவை அறிந்து பேசுங்க. அநாவசிய பேச்சுக்களை தவிர்த்துடுங்க. ப்ளீஸ். குடும்பத்துல ஒரு  செல்லப் பிராணி என்டர் ஆகக்கூடும். புதிய நபர்களோட தொடர்பு ஏற்படும். உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்து நட்பு கெடைக்கும். கணவர் / மனைவி மூலம் நன்மை ஒண்ணு கெடைக்கும். கூட்டிக்கழிச்சுப் பார்த்தால் இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான வீக்.  உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீங்க

கன்னி

கவர்மென்ட் ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். தனியார் துறையில வேலை பாக்கறவங்களுக்கு வேலையில திடீர் மாற்றம் ஏற்படும். பதவி உயர்வும் கெடைக்கும். ஆனா அதுக்கு ஏற்றமாதிரிப் பொறுப்பு கூடும்., தொழில் வியாபாரத்தில் திடீர் லாபம் தரும். வீடு மனை வாங்கும் யோகம் வரும், புதுசா வண்டி வாகனம் வாங்குவீங்க. நீங்க நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நியூஸ் ஒண்ணு வந்து சேரும் பேச்சுல இனிமை கூடும். வெளியூர் போறதுக்கு சான்ஸ் வரும். ஒங்களோட தளராத முயற்சி காரணமாப் போட்டி, பந்தயங்களில் சக்ஸஸ் கெடைக்கும். இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்.  கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக பெஸ்ட்டாய்ச் செய்து முடிப்பீர்கள்.  கவர்ன்மென்ட் வேலைக்கு மனு செய்தவர்களுக்கு ஹாப்பி நியூஸ் வரும். இந்த வாரம் பண விஷயத்தைப் பொறுத்தவரை சூப்பர் வாரமா இருக்கும். வரவேண்டிய கடன் பாக்கிங்க வசூலாகும்.

துலாம்

உங்க முடிவுகளை மத்தவங்க மேல திணிக்காதீர்கள். இந்த வாரம் அலுவலகத்தில் நீங்க விரும்பிய விஷயங்கள் நடக்கும். யாராவது புதிய நபர் உங்களுக்கு நெருக்கமாவாங்க. ஒருத்தர் மாதிரி ஒருத்தர் இருக்க மாட்டாங்க. அதாவது இரண்டு டைப்பும் உண்டு. கொஞ்சம் கவனமா இருங்க. அவங்களால் உங்களுக்குச் சில சின்னச் சின்னப் பிரச்னை வந்தாலும்கூட அநாயாசமாச் சமாளிச்சுடுவாங்க. இந்த வாரம் ஸ்டூடன்ட்ஸ்க்கு அதிகம் வெற்றி கெடைக்கும். உங்களுக்குச் சாதகமான நல்ல கிரகங்கள் நல்ல பலன் தரப்போவது உறுதிங்க. அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் பிரயாணத்தை முடிஞ்ச அளவுக்குத் தவிர்த்துடுங்கப்பா.  பெண்களுக்கு பொன் நகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். ஒண்ணு ரெண்டு தடைகள் வரும் தடைகளை தாண்டி முன்னேற யாராச்சு உதவி செய்வாங்க. ஆன்மீக பயணம் மன அமைதியை ஏற்படுத்தும் குல தெய்வ அருள் கிடைக்கக் குல தெய்வ கோவிலுக்குச் செல்வீங்க. யூ வில் கோ.

விருச்சிகம்

விரும்பிய விஷயம் நடைபெற ஒரு ஐம்பது கிராம் பொறுமை தேவைங்க.  அதிகம் வேணும்னு இல்லை. ஒங்களுக்கு வெற்றிகள் கை கூடி வரும். இந்த வாரம் பெரிய அளவில் திட்டங்கள் எதுவும் வெச்சுக்க வேணாம். உத்தியோகத்துல கவனம் தேவை. இந்த வாரம் சாதகமாக உள்ளது. ரிலேடிவ்ஸ் வீட்ல சுப காரியங்கள் நடைபெறும். பண வருமானம் வந்தாலும் சுப காரிய செலவுகளும் பின்னாடியே ஒங்களைத் தேடி வரும். பிள்ளைகளால ஏற்பட்டிருந்த பிரச்னைகள்.. சிக்கல்கள் முடிவுக்கு வந்து அப்பாடான்னு நிம்மதி அடைவீங்க. அப்பாவுக்காகச் செய்யும் செலவுகள் குறையும். அதனால் அவரின் ஆசியைப் பெறுவீங்க. பேச்சில் அதிகாரத்தை கொஞ்சம் குறைச்சுக்குங்க.  பண விஷயத்துல கவனம் தேவை.  தொழில் முதலீடுகளில் லாபம் ஜாஸ்தியாகும். வருமானத்துல லாபம் அதிகரிக்கும். வேலையில் திடீர் இட மாற்றங்கள் ஏற்படும். புதிய திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். ரிலேடிவ்ஸ் கிட்டேயிருந்து  நல்ல செய்திகள் தேடி வரும்.

தனுசு

வாழ்க்கைத் துணையால ஏற்பட்ட பிரச்னைங்க ஒவ்வொண்ணா முடிவுக்கு வர ஆரம்பிக்கும். வேலை பாக்கற எடத்துல ஆபீஸர்களோட ஆதரவு கெடைக்கும். வேகமான செயல்பாடுகளை குறைத்துக்கொள்ளுங்கள். எந்த செயலையும் செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவது நல்லது உழைப்பு அதிகரிக்கும். ஆனா நிம்மதியும், சந்தோஷமும், வருமானமும் கூடும். பெண்களின் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். லாபமும் உண்டு. கங்கிராஜுலேஷன்ஸ். வியாபார வாடிக்கையாளர்களினால் நன்மை உண்டாகும், நண்பர்களுடன் புரிதல் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக இந்த வாரம் முயற்சி செய்யலாம். திடீர் யோகங்கள் வரக்கூடிய வாரமாக அமைந்துள்ளது. குழந்தைகளுக்கு உங்க முயற்சியால நன்மை உண்டு. அப்பாவுக்கு அதிர்ஷ்டம் உண்டாகும். கணவன் / மனைவியால் உங்களுக்கு நன்மை ஏற்படும். குட்லக்.

மகரம்

திருமணம் சுப காரியம் தொடர்பாகப் பேசும் போது  கொஞ்சமாச்சும் யோசிச்சு.. பிறகு பேசுங்க. . நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் வாரமாக அமைந்துள்ளது. புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆனாலும் எது செய்தாலும் யோசிச்சுட்டு அந்தக் காரியத்துல எறங்குங்க. மன சஞ்சலங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலமா நல்ல நியூஸெல்லாம் வந்து சேரும். தொழில் வியாபாரத்துல அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் அதிகரிக்கும். வேலை பாக்கற எடத்துல, உயரதிகாரிகளின் சப்போர்ட் கெடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பும் நெருக்கவும் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகும். பதவி உயர்வு தேடி வரும் வருமானம் அதிகரிக்கும் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செயல்களில் கவனம் தேவை. வீடு நிலம் போன்றவற்றில் முதலீடுகள் செய்வது லாபத்தை தரும். இன்வெஸ்ட்மென்ட்ஸ்,  திடீர் லாபம் வரும்.  சொந்தமாக செய்யும் தொழில் சிறப்படையும்.

கும்பம்

வண்டி வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கேர்ஃபுல்லாப் போங்க. ஸ்டூடன்ட்ஸ் புதிய கல்வியை செலக்ட் செய்யறதுக்கு முன்பாக பேரன்ட்ஸ் மற்றும், ஆசிரியர்களை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து முடிவு செய்துடுங்களேன். லேடீஸ்க்கு குடும்பத்தில் சுப விரயம் ஒன்று வரும். பட் டோன்ட் ஒர்ரி  . பாதிப்புகள் எதுவும் இருக்காது. நல்ல ஜாப் கெடைக்கும். வேலையில இருந்துக்கிட்டிருந்த சின்னச் சின்னக் கொசுக்கடி மாதிரியான மினி நெருக்கடிகள் நீங்கும்  தொழில் கூட்டாளிகளுடன் பேச்சுல கவனம் தேவை. செய்யும் தொழிலில் கவனமும் நிதானமும் தேவை. செலவுகளைப் பற்றிய பயம் வேண்டாம். பிகாஸ் ஒவ்வொரு செலவும் மகிழ்ச்சியையும் நன்மையையும் தருவதோட சில செலவுகள் உண்மைல நீங்க முதலீடு செய்யற தொகையாயிடும். மகான்களோட ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். பயம் தீரும்.

மீனம்

சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நல்லபடியா ஆரம்பிச்சு, நல்லபடியாத் தொடர்ந்து, நல்லபடியா முடியும். சந்தோஷமான செலவுகள் அதிகரிக்கும். திடீர் திருப்பங்களும் எதிர்பாராத பண வரவும் வரும். வேலைல உங்களுடைய பொறுப்பை தட்டிக் கழிக்காமல் கவனத்தோடயும் விழிப்புணர்வோடயும் இருப்பதும் அவசியம். உறவினர்களிடத்தில் சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம் கோபத்தைக் குறைச்சுக்கிட்டு நிதானமாப் பேசணுங்க. குடும்பத்தார் கிட்ட அனுசரிச்சுக்கிட்டுப் போயிட்டீங்கன்னா இந்த வாரம் நிம்மதியா இருக்கும். வியாபாரிங்களுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும். லாபம் கொறையாது. குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளின் முன்னேற்றங்கண்டு ஹாப்பினஸ் அதிகரிக்கும். பெரியவங்க ஆசியால நீங்க எடுக்கற எல்லா முயற்சிங்களும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 8 முதல் டிசம்பர் 11 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க