மேஷம்
நீங்கள் பல காலம் முயன்று முடியாமல் மறுபடியும் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவாங்க. மறைமுக எதிர்ப்புகள் திரும்பிக்கூடப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடியே போயிடும். பணவரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் இருந்து வந்த தேக்கநிலை மாறும். வழக்குகளில் இருந்துக்கிட்டிருந்த தொய்வு நீங்கி ஸ்பீட் எடுக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிங்க ரெட்யூஸ் ஆகும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீங்க. உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த ஹெல்ப்ஸ்கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க. பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். பட் யூ வில் வின்.
ரிஷபம்
பணவிஷயத்துல சிக்கனத்தைக் கடை பிடிப்பீங்க. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தந்தை மூலம் செலவு உண்டாகலாம். பட் அது வருத்தம் தரும் செலவா இருக்காது. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். தொழில் வியாபாரத்துல எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு வேலைபளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணியை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உங்கள் வாக்கு வன்மை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடை நீங்கும். ஆரோக்கிய குறைபாடு நீங்கும். மனசோர்வு அகலும். யூ வில் பி ஹாப்பி திஸ் வீக்.
மிதுனம்
தொழில் வியாபாரத்துல கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீங்க. வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்யோகத்துல உள்ளவங்களுக்கு வேண்டிய ஹெல்ப்ஸ் மேலதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீங்க. குடும்பத்தில் திடீர் பிரச்சினை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளால் செலவும் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்துப் போவது நல்லதுங்க. கோபத்தைக் கொஞ்சம் மூட்டை கட்டிப் பரண்ல போடுங்க. ஆல்வேஸ் ஸ்மைல் திஸ் வீக்,
கடகம்
உங்க கிட்டே இருக்கும் நிதானம் அதிகரிக்கும். அடுத்தவங்க செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீங்க. மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண்கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். அழகும், பொலிவும், அறிவுத் திறனும் கூடும். தள்ளிப் போன திருமண வாய்ப்புகள் தேடிவரும். இதற்கு முன் இருந்துக்கிட்டிருந்த கெடுபிடிகள் சில இடங்களில் நீங்கும். இதுநாள் வரை இருந்து வந்த பய உணர்வுகள் குறையும். பண விஷயங்களில் யாரையும் நம்பி ஏமாறாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது பெட்டர். தெய்வீக சிந்தனைகள் மூலம் மனசுல அமைதி நிலவும். இதுநாள் வரை இருந்துக்கிட்டிருந்த இன்னல்கள் நீங்கி, ஓரளவு, விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். யூ வில் என்ஜாய் திஸ் வீக்.
சிம்மம்
நல்லவங்களோட ஏற்படும் பழக்கத்தால நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் நீங்கிப் படிப்புல உற்சாகம் இன்கிரீஸ் ஆகும். உயர் அதிகாரிகள் ஆதரவால் பணியில் இருந்துக்கிட்டிருந்த அலைச்சல்கள் குறையும்.. புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். கவனச் சிதறல்கள் காரணமாக ஆபீசில் ஆர்வம் குறையும். எனவே நல்லா உன்னிப்பா வேலை செய்யப் பாருங்கப்பா. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் பயணத்தால நன்மையும் சந்தோஷமும் லாபமும் ஏற்படும். பயணம் கொஞ்சம் சோர்வும் களைப்பும் தந்தாலும்கூட நன்மைகள் அதிகமா இருக்கும். ஆடை, ஆபரணங்கள் பற்றிய சிந்தனைகள் குறையும். மனைவியின் / கணவரின் கைவண்ணத்தில், உங்களுக்கு ரொம்பவும் பிடித்தமான நல்ல உணவு கிடைக்கும். மால்கள், மூவீஸ்னு சுத்துவீங்க. மொத்தத்துல யூ வில் என்ஜாய் திஸ் வீக் வெரி வெல்.
கன்னி
தொடர் முயற்சி செய்வதால், வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் நினைச்சபடியே கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்துல மிகுந்த கவனமா இருப்பீங்க என்பதால பிரச்னை இல்லாத வாரம். வீட்டிலேயே, பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வீட்டில், குடும்பத்துடன், நல்லுணவு சாப்பிட்டு சந்தோஷமா இருப்பீங்க. நல்லோர் சேர்க்கையால எல்லாம் நல்ல விதமாவே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தடைக்கு பின் முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்த இனங்களில் இருந்து தாமதமாகவே, தனவரவுகள் வந்து வந்து சேரும். பலசரக்கு மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு சிரம்மான காலம். தயாள குணம் உள்ளவர்கள், தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து, புண்ணியம் தேடி கொள்வீங்க. இன் ஷார்ட்.. இட் இஸ் எ ஹாப்பி வீக்.
துலாம்
இந்த வாரம் வீட்டில் நடைபெற இருந்த சுப காரியங்கள் அனைத்தும், தடை, தாமதங்களுக்குப் பிறகு, சிறப்புற, சிம்பிளாக நடக்கும். முக்கிய பணிகளில் சுறுசுறுப்பு குறைந்து, சோம்பல் அதிகரிக்கும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது நல்லது. தீவிர முயற்சி செய்தாலும்., இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கத் தாமதமாகும். . வியாபாரத்துலபுதிய விரிவாக்கத் திட்டங்களை ஒத்திப் போடுவது நல்லது. வெளியூர்ப் பயணங்கள் போகும் போது எதிர்பாராத போக்குவரத்து பிரச்சனைகள் ஏற்படலாம். தாய்வழி உறவுகளால் எவ்வித உதவியும் இருக்காது. சிலருக்குக் காரியத்தடைகள், கால தாமதங்கள் காரணமாகப் பின்னடைவுகள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீங்க. வேலைப்பளு கூடும். அதனால என்னங்க? யூ வில் பி சக்ஸஸ்ஃபுல் திஸ் வீக்.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 8 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
உங்க முகத்துல மட்டுமில்லாத செயல்பாடுகளிலும் அழகும், பொலிவும், அறிவுத் திறனும் கூடும். தள்ளிப் போன திருமண வாய்ப்புகள் தேடிவரும். ஆபீசில் இதற்கு முன் இருந்துக்கிட்டிருந்த கெடுபிடிகள் சில இடங்களில் நீங்கும். இதுநாள் வரை இருந்துக்கிட்டிருந்த பய உணர்வுகள் குறையும். பண விஷயங்களில் யாரையும் நம்பி ஏமாறாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. யாரையும் நம்பிக் கடன் குடுக்காதீங்க. அவசரப்பட்டுக் கடன் வாங்காதீங்க. ஒங்க செயல்பாடுகனி விளைவா நல்லதே நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவால் பணியில் இருந்துக்கிட்டிருந்த அலைச்சல்கள் குறையும்.. புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும். மாணவர்களின் கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும். எதிர்பாராத இடமாற்றம் இருக்கலாம். ரிலாக்ஸ்டான வீக். .
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி10 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தெய்வீக சிந்தனைகள் மூலம் மனசுல அமைதி நிலவும். இதுநாள் வரை இருந்துக்கிட்டிருந்த இன்னல்கள் நீங்கி, நீங்க ரொம்ப காலாம நீங்க விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றிகரமாக முடியும். முன்பு மாதிரி எடுத்த விஷயங்கள்ல எல்லாம் தடையும் தாமதமும் ஏற்படாதுங்க. தொடர் முயற்சி செய்தால், வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் தாமதமாகவே கிடைக்கும். ஸன்/ டாட்டர் ஆரோக்கியத்துல மிகுந்த கவனமா இருப்பீங்க.. அவங்களும் இருப்பாங்க. எனவே நோ பிராப்ளம். . வியாபாரிகள், திட்டமிட்டு வியாபாரம் செய்தால் இலாபம் பார்க்கலாம்., அரசு கெடுபிடிகளும் குறையும். அரசாங்கத்து மூலமா நன்மைகள்கூடக் கெடைக்க சான்ஸ் இருக்கு. எதிர்பார்த்த இனங்களில் இருந்து தாமதமாகவே, தனவரவுகள் வந்து வந்து சேரும். இட் இஸ் எ குட் வீக்.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 12 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
நிதானப்போக்கான வாரம். ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனாம எடுத்து வைச்சா சூப்பரான வாரம். இந்த வாரம் குடும்பத்துல மிக மிக முக்கியமான பெரியவர்கள் சகாயத்தால் பெருவாழ்வுக்கான அஸ்திவாரம் அமையும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும் ஒங்களோட உடலில் சுறுசுறுப்பு குறைந்து, சோம்பல் அதிகரிக்காம கவனமா இருங்க தொழில், வேலைப் பளு குறையும். மற்றவர்கள் உயர்வைக் கண்டு பொறாமை கொள்ளாதிருப்பது பெட்டர். சிலருக்குக் காரியத்தடைகள் , கால தாமதங்கள் ஏற்படும். நண்பர்களிடம் கோபத்தோட சத்தமா பேசாதீங்க. சுமுகமாக இருப்பது நல்லது. பயணத்தின்போது எச்சரிக்கையுடன் இருங்க. வீட்டுக்கான பொருட்கள் வாங்க செலவுகள் ஏற்படும். வேலை விஷயமாக அலைச்சல்கள் ஏற்படும். ஆபீசில் வாடிக்கையாளர்கள் கிட்ட நெறையப் பேசுவீங்க. என்ஜாயபிள் வீக்.
சந்திராஷ்டமம் : பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 15 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கும்பம்
கணவன் மனைவிக்குள்ள டாம் அண்ட் ஜெர்ரி உறவு நிலவும். சில பழைய துரோகங்களை மறக்க முடியாம திண்டாடுவீங்க. நிறைய ரெஸ்ட் கெடைக்கும். ஹெல்த்தை கவனமாப் பார்த்துக்குவீங்க. அடிப்படையில் பக்தி உணர்வு இருந்தாலும் பல காரணங்களால உஙகளால வழிபாட்டு ஸ்தலங்களுக்குப் போக முடியாம இருக்கலாம். என்ஜாய் பண்ணி சாப்பிடுவீங்க. வெளி நாட்டில் இருக்கும் உறவுங்க கிட்ட இருந்துக்கிட்டிருந்த பகை மெல்ல விலகும். பெரியவங்க ஆசி கிடைக்கப்பாடு படுவீங்க. குடும்ப உறவுங்க சில இர்ரிடேட் செய்தாலும் உங்க வாழ்க்கை சீராகத்தான் போகும். நி……..றையத் தங்கம் வாங்குவீங்க. சின்னதா ஒரு இன்வெஸ்ட்மென்ட் செய்வீங்க. அது ஷேர் மார்க்கெட்டா இருக்க அதிக சான்ஸ் இருக்கு. சகோதர சகோதரிங்க டென்ஷன் குடுப்பாங்க. தேர் வில் பி எ பிளெஸன்ட் சர்ப்பிரைஸ் திஸ் வீக்.
மீனம்
இந்த வாரம் மனசுக்கு மிகவும் பிடித்தமான பழைய உறவுகளின் வரவு இதயக் கோட்டையில், தென்றல் வீசும். மணமேடை ஏறும் மங்கல நாளும் வந்து, மனசுல மகிழ்ச்சி மலர்கள் பூக்கும். சிலர் வீட்டில் அள்ளி அணைக்கப் பிள்ளைச் செல்வம், துள்ளி விளையாடுவதற்கான அறிகுறிகள் அறிவிக்கப்படும். பக்தி மார்க்கத்துல ஈடுபாடு அதிகரிக்கும். பிஸினஸ் அல்லது தொழில்ல இருந்துக்கிட்டிருந்த மந்த நிலைகள் மாறி ஸ்பீட் பிறக்கும். அதன் காரணமாக லாபமும் இன்கிரீஸ் ஆகும். வீண் அலைச்சல்கள் இருந்தாலும் டென்ஷனோ சோர்வும் இருக்காது. பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தால் உயர் பதவிகள் கிடைக்கும். பணமும் வந்து சேரும். லைஃப்ல முன்னேற்றம் ஏற்படும். சுற்றுவட்டாரத்துல நல்ல புகழும், கௌரவமும் உண்டாகும். பொறுப்புணர்ச்சி அதிகாமகும். இட் இஸ் எ ரெஸ்பான்சிபிள் வீக்.