மேஷம்

உங்க ஜாப் சார்ந்த விஷயங்களில் நீங்க சவால்களை சந்திக்க நேரலாம். எனினும் ஊதித் தள்ளிடுவீங்க தள்ளி. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயலுங்க, சும்மா தேவையே இல்லாம கற்பனைக் கவலைகள் எதுக்கு? தொழில் ஸ்திரமாக இருக்கும் என்றாலும் நீங்க நிதி ரீதியாக சில மாற்றங்களை சந்திக்க நேரும். மேலும் இந்த வாரம் நீங்க உங்க தொழில் கூட்டாளருடன் ரொம்ப நல்ல முறைல சந்தோஷமா கைகோப்பீங்க. பிகாஸ்… அவர்/அவங்க ரொம்பவே அனுசரணையா இருப்பாங்க. இந்த வாரம் ஆரோக்கியத்தில் கலவையான பலன்கள் இருக்கும். சில சமயங்களில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் சில சமயம் லேசான கவலை இருக்கும். எது எப்படியானாலும் பெரிய அளவில் டென்ஷனாகிற மாதிரி எந்த விஷயமும் இருக்காது. குடும்பம் ஹாப்பியா இருக்கும். வாய்ச்சொல் பெரிய வெற்றியையும் சந்தோஷத்தையும் தேடித் தரும்.

ரிஷபம்

எறும்பு சைஸ் பிராப்ளம்ஸ் எதிர் கொள்ளுவீங்க. மனம் தளராம தைரியமாக நம்பிக்கையோடு பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்க. இது பிரச்சினையின் தீவிரத்தை குறைக்கும். நிகழ்வுகளை எதிர்கொள்ளும் நம்பிக்கை பிறக்கும்.  டோன்ட் ஒர்ரி.. மிகச் சிறந்த பலன் கிடைக்கும். இந்த வார முதல் பாதி மாணவர்களுக்கு அனுகூலமாக உள்ளது. இரண்டாம் பாதியில் மாணவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் கவனச் சிதறல் போன்ற சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். ஒங்களோட ரெக்வஸ்ட் நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பாங்க. வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்துல  சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். பட் அது உங்களை பாதிக்காது. .

மிதுனம்

உங்க செயல்களில் சில தாமதங்கள் காணப்படும். உங்க அணுகுமுறையில் பொறுமை தேவை. கடவுள் வழிபாடு மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் நீங்க ஆறுதல் பெறுவீங்க. ஆண்டவன் குடுக்கற சின்ன டெஸ்ட்தான்னு புரிஞ்சுக்குங்க. மனதை ஒருமுகப் படுத்துவதில் சில சிரமங்கள் காரணமாக மாணவர்களின் தன்னம்பிக்கை குறைய லாம். டோன்ட் அலவ் இட் டியர் ஸ்ட்ன்ட்ஸ்… வெளிநாடு சென்று பயில நினைக்கும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் வரலாம். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும். தந்தையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துக்குங்க. ஆபீஸ்ல ஒங்களோட பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் அன்பாய்ப் பேசி அவங்களைக் கவர்வீங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 4 முதல் டிசம்பர் 7 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

இந்த வீக் நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். சிறிய முயற்சிகள் கூட இன்று வெற்றியை அளிக்கும். ஆபீஸ்ல உற்சாகமாக ஒங்களோட பணிகளைச் செய்வீங்க. ஒரு சிலருக்கு இருக்குமிடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கெடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும். வியாபாரத்துல எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். மனசுல தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். அதிகாரி களிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். எதிர்பார்த்த சலுகை கெடைக்கும். ஒங்களோட மனசுல எழும் புதுப்புது யோசனைகள் காரணமாகவும், திறமையான நடவடிக்கைகள் மூலமாகவும், உங்களுக்கு, ஒங்களோட எதிர்பார்ப்பை விட தொழிலில் அதிக இலாபங்களை அள்ளித் தரும். மனசுல நிம்மதி+ சந்தோஷம் நிலவும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 7 முதல் டிசம்பர் 9 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

உங்களின் தனிப்பட்ட முன்னேற்றம் மற்றும் படைப்பாற்றலில் கவனம் செலுத்துவீங்க. பண விஷயங்களில் நீங்க கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் குடும்ப பிரச்சினைகளை தீர்க்க வேண்டி இருக்கும். எனினும் அத்தனை பிரச்னைங்களும் காணாமல் போகும். மனைவி/ கணவர் கிட்ட சண்டை வேணாம்.  இந்த வாரம் நீங்க அமைதியான தூக்கம் மேற்கொள்வீங்க. பிகாஸ் அலைச்சல் குறையும். ஓட்டம் நிற்கும். நிம்மதி கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிட்டும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கி உங்க ஆரோக்கியம் மேம்படலாம். என்றாலும் இந்த வாரம் நீங்க குடும்பத்தில் சில சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரலாம். . சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கெடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற பலனும் இருக்கும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 9 முதல் டிசம்பர் 11 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

இந்த வாரம் உங்க நிதிநிலை சிறப்பாக இருக்கும். மருந்து வாங்கும் செலவுகள். பயணம் மற்றும் குடும்பத் தேவை நிறைவேற்ற வேண்டி செலவு போன்ற வகையில் எதிர்பாராத செலவுகளை நீங்க சந்திக்கலாம். உங்க வருமானம் மற்றும் பொருளாதார நிலை இந்த வாரம் ஸ்திரமாக இருக்கும். இந்த வார இறுதியில் நீங்க பயணம் போக சான்ஸ் இருக்கு. நீங்க பிசினஸ் செய்யறவங்கன்னா… தொழில் சார்ந்த செலவுகள் அதிகரிக்கும் காரணத்தால் நீங்க கடன் வாங்க நேரலாம். இந்த வாரம் நிதி ரீதியான மாற்றங்களை நீங்க சந்திக்க நேரும் என்றாலும் அவை நீங்க சமாளிக்கும் வகையில் இருக்கும். தொலைதூர செய்திகள் மூலமா இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் எழாது. சுலபமாக வசூலாகிவிடும்.  தம்பதிகளுக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாக இணைந்து பேரின்பம் அடைவர். மிகவும் அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 11 முதல் டிசம்பர் 13 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் நீங்க ஏற்றத் தாழ்வுகளை சந்திப்பீங்க. பணியில் சில சவால்களை சந்திக்க நேரும். பட் சமாளிச்சு வெற்றிகரமாய் நிமிர்வீங்க.  பணி நிமித்தமாக பயணம் செல்ல நேரும். உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. பெண்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். ஆபீசில் உத்யோகம் பார்க்கறவங்களுக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது. இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களாய் நடக்கும். விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியாகவும் இருக்கும். சினிமா, மால்களில் பொழுது போக்குதல் எனச் செலவுக்கும் குறைவிருக்காது. பண விஷயமான சிந்தனைகள் எழும். தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும்

விருச்சிகம்

இந்த வாரம் உங்க பணியில் சில மாற்றங்களை நீங்க காணலாம். உங்க மேலதிகாரிகள் மற்றும் சக பணியாளர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உள்ளது. எனவே பணியிடத்தில் உங்க தகவல் தொடர்பில் கவனமாக இருங்க. யாரைப் பத்தியும் மேலிடத்துல போட்டுக்குடுக்க வேணாம். அரசியல்வாதிகளுக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். ஆனால் அது நன்மைக்கே. சிலரோடு இயல்புகள் புரிஞ்சு அலர்ட் ஆவீங்க. மாணவர்களுக்கு தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள், வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவிகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு போன்ற  முன்னேற்றங்களை அடைய முற்படுவீங்க.

தனுசு

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பது நல்லது. உதயோகத்தில் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கெடைக்கும். பிள்ளைங்களால பெருமை உண்டாகும். உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட சாதகமான வாரம். ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீங்க. வாரக்கடைசில மனசுல நிம்மதி பரவும்.

மகரம்

இந்த வாரம் உங்க உத்தியோகம் மூலம் நீங்க நல்லா சம்பாதிப்பீங்க. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் சில தடைகளை சந்திக்க நேரும். அது இந்த வாரமே நீங்கும். நேர்மையா நியாயமான முறைல பணம் வருதான்னு மட்டும் கவனமா இருங்க. எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் இருக்கும் உறவினர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைங்களால உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொறுமை அவசியம். பேச்சில் ரொம்பவுமே கவனமாய் இருக்க வேண்டிய கால கட்டங்க இது. கமென்ட்ஸ் கூடாது.

கும்பம்

மனசுக்குப் பிரியமான குடும்ப நபருடன் செல்லும் இனிய பயணங்களால் ஹாப்பி ஆவீங்க. இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கெடைக்கும்.  தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும். அரசுப் பணியாளர்களுக்கு ஆணையிடும் அதிகார பதவி கெடைக்கும். இந்த வாரம் வாக்கு வன்மையால் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். பூஜா வழிபாடுகளும், பெரியோர் ஆசிகள் ஆகியவை மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.  சுபச் செய்திகளைக் கேட்டு மகிழ்வாங்க. தொழிலில் புதிய முதலீடுகளால் உற்பத்தி திறன் அதிகரித்து இலாபம் பெருகும். தொழிலில் ஏற்றமான காலம்.. பெரியவர்கள் ஆசிகள், ஆதரவு ஆகியவை எப்போதும் இருக்கும். அறிவு விருத்தி ஆகும். மேலதிகாரிகளின் ஆதரவால் மேன்மை அடைவீங்க.

மீனம்

வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய வாரம். நன்மையும் சந்தோஷமும் அதிகம் இருக்கும். மனசுல பொறாமைக்கு எடம் குடுக்க வேணாம். உற்சாகம் பெருகும். குடும்பத்தோடு கோவில், குளம் புண்ணிய ஸ்தல  யாத்திரைகள் எனச் சென்று மகிழ்வீங்க. பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பணியில் முன்னேற்றங்களை அடைய முற்படுவீங்க. திருமணம், வளைகாப்பு போன்ற சுப காரியங்களுக்கு வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற அளவுக்கு ஆதாயமும் அதிகரிக்கும். இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.  மனசில் அவசியமே இல்லாம பயமோ கவலயோ தோன்றாமல் பார்த்துக்குங்க.