மேஷம்

உங்களின் கவர்ச்சி அம்சம் இன்கிரீஸ் ஆகுமுங்கோ. படிப்பு பற்றிய செலவுக்கு கார்டைத் தேய்ப்பீங்க. லவ் பண்ணுவீங்க. வயிறு சம்பந்தமான உபாதைகளை ஜுஜூபியாக நினைக்காதேங்கோ. டாடிக்கு திடீர் லக் அடிக்கும். அம்மா வெளிநாடு போவாங்க. அல்லது, நீங்களே மேல் படிப்புக்காக வெளிநாடு போக வாய்ப்பு வரும். அரசாங்க/ வங்கி லோன்கள் மின்னல் வேகத்தில் கிடைக்கும். குடும்பம் சுப நிகழ்ச்சிகளால் விரிவடையும். பேச்சினால் அலுவலகத்திலும், குடும்பத்திலும், நண்பர்கள் மத்தியிலும் சமரசம் ஏற்படுத்துவீங்க.

ரிஷபம்

முன்பைவிட லாபங்களும், வருமானமும் அதிகரிக்கும். குறிப்பாக கவர்ன்மெண்ட் கிட்டேயிருந்து நீங்க எதிர்பார்த்துக்க்கிட்டிருந்த நன்மைகள் உங்க முயற்சி இல்லாமலேயே உங்களை வந்தடையும். சகோதர சகோதரிகளுக்கு நீங்க நன்மையும் உதவியும் செய்வீங்க. நேர்மை, நீதி, நியாயம் எங்கிற ரீதியில் சிந்தனை மற்றும் செயல் அமையும். மனைவி/ கணவரின் ஆரோக்கியத்தை அவர் அலட்சியம் செய்தாலும் நீங்க செய்யாதீங்க. குழந்தைகள் கல்வியில் உங்களைப் பெருமிதப்படுத்துவாங்க.

சந்திராஷ்டமம்:  06.04.2018 முதல் 08.4.2018 வரை

மிதுனம்

புதுசா வேலை கிடைக்கும்னு காத்துக்கிட்டு இருந்தவங்க கொஞ்சமே கொஞ்ச காலம் காத்துக்கிட்டு இருந்தால் போதுமானது. அதுவரை மனசில் சிறிது பொறுமையைப் பூசிக்குங்க. குழந்தைங்க படிப்பில் சாதனை செய்து மேடையில் கைதட்டல் வாங்குவாங்க. ஒருவேளை மகனோ, மகளோ யாரையாச்சும் லவ் பண்றதா சொன்னால் வேறு வழியில்லாமல் தலையாட்டுவீங்க. ஏனென்றால் செலக்‌ஷன் சூப்பரா யிருக்கும். லோன்களுக்கு மனு செய்ய இது உகந்த நேரம் இல்லை. கொஞ்சம் பொறுங்க. புதிய வருமானம் வரும்.

சந்திராஷ்டமம்:  08.4.2018 முதல் 11.4,2018 வரை

கடகம்

இப்போதைக்கு திடீர் லக் எதையும் எதிர்பாக்க வேணாங்க. முயற்சியும், உழைப்பும்தான் உங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு போய் நிக்க வைக்கும். உங்களின் அலுவலகச் சூழலில் உங்கள் கம்பீரம் குறையாமல் வழக்கம்போல வளையவருவீங்க. குழந்தைங்க உங்களைப் பெருமிதம் கொள்ளச் செய்வாங்க.  நீங்க எதிர்பார்த்த வருமானங்கள் மட்டுமில்லாமல், எதிர்பாராத லாபங்களும் கிடைப்பதால் சந்தோஷத்தில் திணறித்தான் போவீங்க. அலுவலகச் சூழலில் எதிர்பாலினத்தினரின் உதவி கிடைக்கும். திடீர் செலவுகளும் உண்டு.

சந்திராஷ்டமம்:  11.4.2018 முதல் 13.4.2018 வரை

சிம்மம்

நண்பர்கள் பகைவர்களாவதும் பகைவர்கள் நண்பர்களாவதும் வாழ்க்கைல சகஜமப்பா. இப்போதைக்கு யார் கிட்டயும் கடன் கொடுக்காதீங்க; அதே போல யாரிடமிருந்தும் கடன் வாங்கவே வேண்டாம். அம்மாவிடமிருந்து நன்மைகளும், லாபங்களும் மட்டுமின்றி அறிவுரைகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். ஒருவேளை நகைகளும், சொத்தில் பங்கும்கூடக் கிடைக்கலாம். மாணவர்கள் பள்ளியிலும், கல்லூரியிலும், ஜமாய்ப்பீங்க. பொதுவாகவே இந்த ராசிக்காரர்களுக்கு இழந்திருந்த மதிப்பும், மரியாதையும் கட்டாயம் மீளும்.

கன்னி

புதுசா வண்டி, வாகனங்கள் வாங்கி ஷெட்டில் நிறுத்தப்போறீங்க. ஏற்கனவே இருந்து வந்த பிரச்சினை களை உங்களோட புத்திசாலித்தனமான செயல்கள் மற்றும் பேச்சுகள் மூலம் சரிக்கட்டிடுவீங்க. தாய் மாமன் வழி உறவினர்கள் தாங்களாக முன்வந்து உதவிகள் செய்வாங்க. மாணவர்கள் புதியவகை முன்னேற்றம் காண்பீர்கள். உங்க அம்மா உங்களுக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்காங்களோ அதே அளவுக்கு நீங்களும் அவங்களுக்கு ஹெல்ப் செய்வீங்க. குடும்பத்தில் காதல் நிலவும்.

துலாம்

உங்களுக்கு ஏற்கனவே உள்ள கவர்ச்சி அம்சம் இப்போ மிகவும் கூடுதலாகும். பேச்சில் மென்மை மட்டு மின்றி, உண்மைத்தன்மையும் அதிகரிக்குங்க. கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாவதுடன் நல்ல அன்னியோன்னியம் உண்டாகும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். பகை வர்கள் ஓடி ஒளிந்து காணாமல் போவார்கள். அலுவலகத்தில் அவார்ட் அல்லது ரிவார்ட் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் தீர்ந்து இனிமையான ஒற்றுமை நிலவும். இத்தனை காலம் உங்களை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த நோய்கள் தீரும்.

விருச்சிகம்

திடீரென்று திருமணம் கைகூடி உங்களை சந்தோஷ நதியில் தூக்கிப்போடும். வாயை மட்டும் மூடிக்கிட்டு கவனமாய் வேலை பார்த்தீங்கன்னா அலுவலகத்தில் எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாமல் தப்பிச்சுடுவீங்க. குழந்தைங்களைப்பற்றி பயம் ஏற்படும் வகையில் ஓரிரண்டு நிகழ்ச்சிகள் நடந்தாலும்கூட சீக்கிரத்தில் அவை சரியாகி நிம்மதியளிக்கும். குடும்பத்தில் திடீர்ன்னு சில சம்பவங்கள் நடந்து உங்களுக்கு டென்ஷன் அளிக்கும் என்பதால் கவனமுடன் மனிதர்களைக் கையாளுங்கள்.

தனுசு

மம்மிகூட எந்தவிதமான சண்டையோ அல்லது சச்சரவோ கூடாது. குழந்தைகளின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். அவர்களில் சிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள்.  மகிழ்ச்சியுடன் வாழ்த்தி அருளுங்கள். நன்மை அவர்களுக்கு மட்டுல்ல உங்களுக்கும்தான். புதிய வருமானங்கள் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும். குடும்பத்தில் யாரேனும் மேடையேறி கைதட்டலும், பாராட்டும் பெற்று உங்களைப் பெருமிதப்படுத்துவார்கள். கலைத்துறையில் உள்ளவங்க அட்டகாசமான லாபத்தைப் பலநாள் கழிச்சுப் பாக்கறீங்க. கங்கிராட்ஸ்.

கும்பம்

நல்ல நண்பர்களும், உற்ற உறவினர்களும் நன்மை செய்வதால் வழ்க்கை சுலபமாகவும், சுவையாகவும் ஓடும். மனதில் இத்தனை காலம் இருந்துவந்த விரக்தி மனப்பான்மை தீர்ந்து கலகலப்பான உற்சாகம் நிலவும். பலவிதமான வருமானங்கள் வரும். கொடுத்த கடன்கள் மீண்டு வரும். குடும்பத்தில் யாருக்கேனும் அரசாங்கத்தினால் ஏதாவது நன்மை கிடைக்கும். பெரிய அளவில் சர்ஜரி ஆகும் என்று நீங்கள் பயந்துகொண்டிருந்த பிரச்சினைகள் வெறும் மருந்து மாத்திரைகளால் தீரும் என்ற நல்ல செய்தியை டாக்டர் சொல்வார்.

மீனம்

பேச்சில் கவர்ச்சி கூடும். குறிப்பாக மேடைப் பேச்சாளர்கள், பாடகர்கள்/ பாடகிகள், நாடகம் மற்றும் சினிமாத்துறையில் உள்ளவர்கள் அட்டகாசமான வெற்றியைச் சுவைப்பீர்கள். திடீரென்று புதிய வேலை கிடைத்தாலும் அதை ஏற்பதற்குமுன் ஒன்றுக்குப் பலமுறை யோசனை செய்யுங்கள். குழந்தைகளுக்குக் கல்வி மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றமும், வெற்றியும் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே உள்ள கடுகு சைஸ் பிரச்சினைகள் மற்றவர்களுக்கு பூதாகாரமாகத் தெரியாதபடி நடந்துகொள்ளவேண்டியது அவசியம்.