மேஷம்

விருந்து நிகழ்ச்சிகளால் உறவினர்கள் வருகை அதிகரிக்கும். வீட்டில் மகிழ்ச்சி களை கட்டும். உங்க பழைய பொறுமைக்கெல்லாம் ரிவார்ட் கெடைக்கப் போகுதுங்க. மத்தவங்களை எந்த அளவுக்கு நம்பலாம்னு புரிஞ்சுக்கிட்டு அதன்படி நடந்துக்குங்க. மனசில் இருக்கறதையெல்லாம் நண்பர்கள்னு நினைக்கறவங்க கிட்ட கொட்ட வேணாம். யாரு நண்பர் யாரு எதிரின்னு புரிஞ்சுக்க முயற்சி செய்ங்க. இந்த வாரம் தாராளமான தனவரவு உண்டு. நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிங்களிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும். வீட்டு வாடகை வசூல் திருப்திகரமாக இருக்கும். வியாபாரிகள் புதிய யுக்திகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களை கவர்ந்து, அதிக இலாபம் பெற முயற்சி செய்வாங்க. சிலருக்குக் காரியத்தடைகள் நீங்கி நிம்மதி ஏற்படும்.

சந்திராஷ்டமம் : ஜூலை 6 முதல் ஜூலை 9 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்       

தொழில் முன்னேற்றம் ஏற்படும். இழந்த நட்பைப் புதுப்பிச்சு நல்லவங்களோட அன்பை மீட்டு சந்தோஷம் அனுபவிப்பீங்க. ஆன்மிகச் சுற்றுப்பயணம் உண்டு. சாமிகிட்ட கோவிச்சுக்கிட்டு நிறுத்தி வெச்சிருந்த பிரார்த்தனைங்களை இப்போ அவர்கிட்ட பழம் விட்டு நிறைவேத்துவீங்க. அரசுப் பதவியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன்பெறுவர். இந்த வாரம் மனதிற்கினிய சுபசெய்திகள் வந்து சேரும். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும்.வீட்டுக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்கி மகிழ்வீங்க. வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்து மனிதர்களின் நட்பு கிடைத்து நன்மை தரும். மனைவி மூலம் கிடைக்கும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் வந்த  பழைய உறவுகளின்  வரவால் நன்மை நிகழும்.

சந்திராஷ்டமம் : ஜூலை 9 முதல் ஜூலை 11 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள அதிகம் செலவிடும் சூழ்நிலை ஏற்படும். எச்சரிக்கையாக இருந்து வியாபாரத்தில் வெற்றியை காண வேண்டும். எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிப்பீங்க. எதிர்பாராத பண வரவால் பழைய கடனை அடைப்பீங்க. இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்றம் காண்பீங்க… உற்சாகத்துடன் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுவீங்க.  கடின உழைப்பால் நீங்க பெறும் வெற்றிகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீங்க. மங்கையரால் மன மகிழ்ச்சியும், அரசாங்கத்தால் இலாபமும் ஏற்படும். சம்பாதித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீங்க. பணிபுரியும் லேடீசுக்குத் தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் சான்ஸ்கள் அமையும். இந்த வாரம் சிலருக்குத் திருமணம் போன்ற சுபகாரிய விரயங்கள் ஏற்படும்.

சிம்மம்

வீடு கட்டவோ, தொழிலை விரிவாக்கவோ, சந்தோஷமான பயணத்துக்கோ, தேவையான பணத்தைத் திரட்டத் திட்டம் தீட்டுவீங்க‌. வங்கிக் கடனுக்கு அப்ளிகேஷன் போடுவீங்க. எதையும் ஒரு நடைல முடிக்க முடியாமல் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். எனினும் விஷயங்கள் நல்லபடியா முடியும். வெயிலுக்குப் பிறகு குளிர் நிழல் கிடைப்பதுபோல் போல், துன்பங்கள் மறைந்து, இன்பம் பெருகும்.  சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். வாகனங்கள் பழுது ஏற்படும். பிறர் தயவை நாட வேண்டிய சூழல் உருவாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது, அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகள் பாராட்டுதல்களப்  பெறுவீங்க. பயங்கள் நீங்கும் அல்லது அட்லீஸ்ட் குறையும்.

கன்னி

மத்தவங்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். கவனமுடன் செயல்பட வேண்டிய வாரம். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருந்தா நல்லதுங்க. பண நெருக்கடியால் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்கும் சூழ்நிலை உருவானாலும் கடைசி நிமிஷத்தில் ஏற்பாடு செய்து சமாளிச்சுடுவீங்க. இந்த வாரம் பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும்.  அரசாங்கத்திடமும் எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகள் வெற்றியடையும். கவர்ச்சிகரமான பொருட்களை பரிசாக அறிவித்து வியாபாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வர். பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.  சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்

விரயங்களிலிருந்து விடுபட விழிப்புணர்ச்சி தேவை. உறவினர் பகை ஏற்படாமல் பார்த்துக்குங்க. முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்துடுங்க. ஏதோ எல்லாரும் உங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போறாங்களோ பிழைச்சீங்களோ. திடீர்னு இத்தனை காலம் இல்லாத நல்ல பலன்கள் வந்து சேரும். நிதி நிலைமை திருப்தியா இருக்கும். அது நிம்மதி  தரும்.  பெண்களால் நன்மை உண்டுங்க. உதிரி வருமானங்கள் அங்கே இங்கே கிடைச்சுடும். எடுத்த காரியம் ஈஸியா முடியும். மாமன், வகை ரிலேடிவ்ஸ் கிட்டேயிருந்து மகத்தான ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த வாரம் புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும் காலம் கனிந்து வரும்.  பக்தி மார்க்கத்தில் செல்ல மனைவியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்

விருச்சிகம்

மனசில் நல்ல எண்ணங்கள் மட்டுமே இருக்குமாறு பார்த்துக்கறது நல்லதுங்கப்பா. குறுக்கு வழியில் சம்பாதிக்கவோ  … லாபம் பார்க்கவோ யாராவது நண்பர்கள் அல்லது சிநேகிதிகள் ஆலோசனை கூறினால் அவர்கள் இருக்கும் திக்கைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டுவிட்டு உங்க மனசாட்சியின் பேச்சுக்கு மட்டும் காதைக் கொடுங்க போதும். இந்த வாரம் சம்பாதிக்கும் திறன் மேம்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். நவநாகரீக ஆடைகள் வாங்கி உடுத்தி மகிழ்வதோடு, உறவுகள் வருகையால் உள்ளம் மகிழ்ந்து, உறவுகளுடன் உயர்தர உணவகங்களில் உணவருந்தியும் மகிழ்வீங்க. வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிறைவேறி மகிழ்வு தரும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். தொலைதூரப் பயணங்களால் ஆதாயம் உண்டு.

தனுசு

இந்த வாரம் தெய்வ தரிசனம், தெய்வீகப் பயணங்கள் தேடிவரும். பணவரவுகள் அதிகரித்தாலும் தான, தர்மம் எனக் கைப்பணம் கரைந்தாலும் மனசில் நிம்மதியும் சந்தோஷமும் நிறையும். .  அலுவலகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விடும்படி சில விஷயங்கள் நிறைவாக முடியும். பெரிய ரிஸ்க்கயான விஷயம் என்று இப்போதைக்கு எதிலும் இறங்க வேண்டாம். லோன் மனு எதிலும் கையெழுத்து கைநாட்டு என்று ஆட்டோகிராஃப் போட்டுவிட்டு அப்புறம் புலம்பாதீங்க, ஆமாம், சொல்லிட்டேன். இலாபமும் வருமானமும் வரும்போது சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. அப்போதுதான், வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீங்க.  மாணவர்களுக்கு புத்தி சாதுர்யமும், அறிவு விருத்தியும் ஏற்படும். உடன்பிறப்புகளிடம் நெருக்கமும் பாசமும் அதிகரிக்கும். –

மகரம்

இந்த வாரம் தன்னம்பிக்கை உயரும். பலவழிகளிலும் பணவரவு அதிகரிக்கும். சிலருக்குக் கார் போன்ற சொகுசு வாகனங்கள் வாங்கும் உயர்வு நிலை ஏற்படலாம்.  தெய்வ சிந்தனைகள் மனதில் பூரண அமைதி நிலவும்.  தந்தை வழி ஆதரவு உண்டு. பிள்ளைங்ளால பெருமை சேரும். வெளி மனிதர்கள்கிட்ட கொஞ்சம் கவனமாக செயல்படணுங்க. மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதுசிறப்பாக நடைபெறுமா என்பது சந்தேகம்தான். அல்லது அவ்வப்போது கவனிச்சுக்கிட்டே இருக்கணுங்க.  முன்பிருந்த நிதானப்போக்கு தடை தாமதமெல்லாம்   விலகி நன்மை ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். நீங்க எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருந்த நிலை மாறி சந்தோஷமாக இருப்பீங்க.. நல்ல நண்பர்கள் சேர்க்கையால்  மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு

கும்பம்

இந்த வாரம். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். தொலைதூர சுபச் செய்திகள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். பழைய கோப தாபங்கள் மறைஞ்சு மனசில் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் நண்பர்கள்கிட்ட பழகுவீங்க. ரொம்ப ரொம்ப அழகான வாகனம் அமையுமுங்க. உங்க கனவு அப்பிடியே கண்முன்னால நிஜமாயிடுச்சில்ல? என்ஜாய். டாடியோட எப்பப்பார்த்தாலும் சண்டை வலிக்காதீங்களேன்.   உங்க திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும்.. மாணவர்களுக்கு படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். சிலருக்குசி சிறு சிறு செலவுகள் ஏற்படலாம். குலதெய்வ வழிபாடுகள் சிறக்கும். உறவுகள் வருகையால் விருந்து, மகிழ்ச்சி கொண்டாட்டம் என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகள் எதிர்பார்க்கலாம். புதிய நண்பர்களால் நன்மை ஏற்படும்.

மீனம்

இந்த வாரம் வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும்.புதிய வேலை தேட  நினைச்சால் அதைக் கொஞசம் தள்ளிப்போடுங்க. இருக்கும் வேலையில் நல்ல பெயர் எடுக்கப்பாருங்க, அதை நம்பி இதை விட்டுடாதீங்க. ப்ளீஸ். ஜாலியான வாரம் என்பதை மறுப்பதற்கில்லை. நண்பர்களோ, குடும்பத்தினரோ, அலுவலகமோ… பக்குவமாகப் பேசிக் காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய வாரம். இடமாற்றம் இனிமை தரும். மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் தகவல் இந்த வாரம் வரலாம். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நல்ல நண்பர்கள் சேர்க்கையால்  மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்க, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அனுசரித்து நன்மை காண்பீங்க.

சந்திராஷ்டமம் : ஜூலை 4 முதல் ஜூலை 6 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.