சென்னை:  காவலர்களுக்கு வார விடுமுறை நடைமுறையில் உள்ளது தலைமை காவலர்கள் 4.48 லட்சம் நபர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக ஏப். 21 அன்று  தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறையளிக்கப்பட வேண்டும் என்றுமட, கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை அமல்படுத்த வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட என்கிற அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது

 இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,  காவலர்களுக்கென தனியாக சங்கங்கள் இல்லாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன்,   காவலர்களுக்கு விடுமுறை தொடர்பான அரசாணையை காவல் துறை உயரதிகாரிகள் முறையாக பின்பற்றாதது ஏன்? காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசாணை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது?’ ஆகிய கேள்விகளும் நீதிமன்றத்தால் எழுப்பப்பட்டுள்ளன. ‘தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சங்கங்கள் இருக்கும்போது, காவல்துறையினருக்கு ஏன் சங்கங்கள் அமைக்கப்படவில்லை என்று கூறியதுடன்,  இந்த விசாரணையில், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியதுடன்,   இந்த வழக்கு குறித்து  தமிழக காவல்துறை டிஜிபி விரிவான விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று  சட்டசபையில் காவலர்களுக்கு அளிக்கப்படும் வார விடுமுறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசினார். அப்போது, தி.மு.க. ஆட்சியில் தான் காவலர்களுக்கு அதிக திட்டங்கள்  வழங்கப்பட்டு இருப்பதாகவும்,    இரவு பகலாக மக்களை பாதுகாக்க அயராது பணியாற்றும் காவலர் நலனை தி.மு.க. அரசு பேணி பாதுகாத்து வருகிறது. காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு காவல்துறைக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை காவலர்கள் 4.48 லட்சம் நபர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 67,233 நபர்களுக்கும் வார விடுமுறை வழங்கப்படுகிறது.

முக்கியமான சட்டம், ஒழுங்கு பராமரிப்பு காலங்களில் மட்டும் வார விடுமுறை வழங்க முடிவதில்லை. * காவலர்களுக்கான பதவி உயர்வு குறித்து ஆணையர், எஸ்.பி. மட்டுமே முடிவு செய்ய முடியும்.

காவலர் சேர்மநல நிதி 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

பணியில் இருக்கும்போது காவலர்கள் உயிரிழந்தால் ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.