ண்டிகர்

னி அரியானாவுக்கு காஷ்மீரில் இருந்து மணமகளைக் கொண்டு வரலாம் என அம்மாநில முதல்வர் மனோகர்மேல் கட்டார் கூறியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த விதி எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை மத்திய அரசு நீக்கி உள்ளது. முன்பு காஷ்மீர் பெண்கள் வெளி மாநில ஆண்களை மணந்தால் சொத்து உரிமை கிடையாது. அதனால் அம்மாநில பெண்கள் வெளி மாநில ஆண்களைத் திருமணம் செய்யத் தயங்கி வந்தனர். தற்போது இந்த விதி எண் விலக்கிக் கொள்ளப்பட்டதால் இந்த நிலை மாற உள்ளது.

இதை ஒட்டி முசாபர் நகர் தொகுதி சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் இனி காஷ்மீர் மாநில வெள்ளைத் தோல் பெண்களை அனைவரும்  மணக்கலாம் எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. தற்போது அதே சர்ச்சை மற்றொரு உரையின் மூலம் மீண்டும் எழுந்துள்ளது. இம்முறை அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் இவ்வாறு பேசி உள்ளார்.

மனோகர் லால் கட்டார், “முன்பு அரியானாவில் ஆண் பெண் விகிதாச்சார குறைவால் அமைச்சர் ஒரு யோசனை தெரிவித்தார். அவர் நாம் பீகாரில் இருந்து மணமகள் கொண்டு வரலாம் என அறிவுரை வழங்கினர். தற்போது காஷ்மீரில் இருக்கும்  பெண்களையும் மணமகளாகக் கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது. இந்நேரத்தில் நகைச்சுவைக்கு அப்பால் ஒரு கருத்தைச் சொல்கிறேன்.

ஆண் பெண் விகிதாச்சாரம் சீராக இருந்தால் ஒரு சமூகம் நேர்த்தியாக இருக்கும். நமது அரியானா மாநிலத்தில் முன்பு பாலின விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 850 பெண் என்னும் நிலையிலிருந்தது. அதிக அளவில் பெண்  குழந்தைகள் கொல்லப்படுவதா செய்திகள் வந்ததால் பெண் குழந்தைகளைக் காப்போம் என்னும் பிரச்சாரத்தைத் தொடங்கி தற்போது 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்னும் விகிதாச்சாரத்தை அடைந்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். இது மக்களிடையே கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.