சென்னை:
நாகை மாவட்ட மக்களின் வாழ்வியல் சூழல், வாழ்க்கை முறை, உணவு, கலை, பண்பாடு, ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.

இந்த் அரசாணையில், பண்டைய தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் ரூ.2 கோடியில் 3.06 ஹெக்டர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்படும். நெய்தல் பாரம்பரிய பூங்காவில் பனைக்குடில்கள், பவளப்பாறை, முத்துச்சிற்பி மற்றும் மூங்கில் குகைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

நெய்தல் நிலத்திற்குரித்தான புன்னை மரம், பனை மரம், நாவல் மற்றும் தென்னை மரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மீன் மற்றும் இதர கடல் வளங்களான பவளப்பாறை, முத்து சிற்பி போன்றவற்றை செடிகளால் அழகு வடிவங்களில் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.