தஞ்சை:
ஞ்சை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 96 பள்ளி கட்டிடங்கள் ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான சாஃப்டர் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 4 மாணவர்கள் மருந்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்ய முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 96 பள்ளி கட்டிடங்கள் ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தஞ்சை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 96 பள்ளி கட்டிடங்கள் ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படும் என்றும் 2000 பள்ளிகளின் கட்டிட உறுதி தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.