சென்னை

கோடைக்காலம் முழுவதுமாக தொடங்கும் முன்பே தமிழகத்தில் வெயிலிந்தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

வட கிழக்கு பருவ மழை முடிந்த பிறகு கடந்த மார்ச் மாதம் ஓரிரு இடங்களில் மட்டும் மழை பெய்தது.  திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்ச மழையாக 50 மிமீ மழை பெய்தது.  இந்த மழை இயல்பை விட 64% குறைவானதாகும்.  இதனால் தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படுகிறது.

இதையொட்டி தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.   தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது.  மதுரை 102 டிகிரி கோவை, தர்மபுரி, கரூர், சேலம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி, பாளையங்கோட்டை 99 டிகிரி, திருச்சி, வேலூர், மதுரை 98 டிகிரி, சென்னையில் 95 டிகிரி என வெயில் நிலவியது

தற்போது பசிபிக் கடல் பகுதியில் நிலவும் எல்நினோ என்பது சற்று குறைந்து சமநிலையில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.  எல்நினோ அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சமநிலையில் நீடிக்கும் பட்சத்தில், அடுத்து வருகின்ற தென்மேற்கு பருவமழையும் இயல்பு நிலைக்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.