ஐதராபாத்: இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி 100கோடி பேருக்கு மேல் போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களில் இந்த சாதனைகளை படைக்க காரணமாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு இந்தியாவும், இந்திய மக்களும் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

அதே வேளையில், கொரோனா தொற்று குறித்த தகவல்களை, கடந்த 18 மாதங்களாக இணைய தளத்தில் பதிவேற்றி, பராமரித்து அதன்மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த முகம் தெரியாக தன்னார்வளர்களுக்கு இந்திய அரசு நன்றி தெரிவித்துள்ளது. அதுபோல ஒவ்வொரு இந்தியனும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

ஐமராபாத் ஐஐடியைச் சேர்ந்தவர்கள் இந்த பணியில் கடந்த 18 மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் யார் யார் என்பதுகூட தெரிய வகையில், முகமற்ற குழுவாக மக்கள் சேவையாற்றி , இந்தியாவிற்கான கோவிட்-19 தரவைத் தொகுத்து வெளியிடுவதில் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் நீட்டித்த நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்கு நன்றி ….

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்கள், தாங்கள் முகமற்ற குழுவாக இருந்து சேவை செய்து வருகிறோம்,  எப்பொழுதும் தனிநபர்களுக்கு மேலாக முன்முயற்சியை வைத்திருந்தோம். நாங்கள் ‘அநாமதேய’ தொண்டர்களுக்கு ஒரு பக்கத்தை அர்ப்பணிப்பது மட்டுமே சரியானது என்று நாங்கள் உணர்ந்தோம். அதனால்தான் இந்த சேவையை வெற்றிகரமாக செய்ய முடிந்தது.. இந்த வெற்றியானது  COVID19INDIAORG-ன் ஒரு பகுதி என்று தெரிவித்துள்ளனர்.