ட்டாவா

ப்கானில் தாலிபான்கள் ஆட்சியைக் கனடா அங்கீகரிக்காது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் நாட்டை கைப்பற்றி உள்ளது.  இதையொட்டி ஆப்கானிஸ்தான் அதிபர் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்.  தாலிபான்கள் விரைவில் ஆட்சியை அமைக்க உள்ளனர்.

உலக நாடுகளில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்துள்ளன.   ஆனால் பெரும்பாலான நாடுகளின் ஆதரவு தாலிபான்களுக்குக் கிடைக்கவில்லை.  ஆப்கான் மக்களில் பலர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் கனடா நாட்டின் பிரதம்ர் ஜஸ்டின் ட்ரூடோ தாலிபான்கள் ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  அவர் கனடா ஒரு போதும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்காது எனத் தெரிவித்துள்ளார்.