’’சிகரெட் புகைக்கும் பழக்கம் கூட கிடையாது’’ நான்கு நடிகைகள் வாக்குமூலம்

Must read

’’சிகரெட் புகைக்கும் பழக்கம் கூட கிடையாது’’ நான்கு நடிகைகள் வாக்குமூலம்

இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை  சி.பி.ஐ. விசாரித்து வரும் நிலையில், இந்தி சினிமா நட்சத்திரங்கள், போதைப் பொருள் பயன்படுத்துவது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கில் சுஷாந்தின் காதலியான நடிகை ரியா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மும்பையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், இந்தி நடிகைகள் ரகுல் ப்ரித் சிங், தீபிகா படுகோனே, ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோர் தனித்தனியாக  ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

 ’’ஒரு நாளும் தாங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது கிடையாது ’’என அதிகாரிகளிடம் நான்கு பேரும்  தெரிவித்தனர்.

நான்கு நடிகைகளும், தங்களுக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் கூட கிடையாது என வாக்குமூலம் அளித்ததாகப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்துக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததா என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் நான்கு நடிகைகளும் கூறியுள்ளனர்.

-பா.பாரதி.

More articles

Latest article