டில்லி

ந்தியாவில் இன்னொரு அவசர நிலை பிரகடனத்தை அனுமதிக்க மாட்டோம் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 34 வருடங்களுக்கு முன்பு 1975 ஆம் வருடம் ஜூன் மாதம் 25 ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்போது கடும் அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த அவசர நிலை 19 மாதங்கள் தொடர்ந்தது. கடந்த 1977 ஆம் வருடம் மார்ச் மாதம் 21 ஆம் தேதி அவசர நிலை திரும்ப பெறப்பட்டது. அதன் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியை தழுவினார். அப்போது அமைந்த கூட்டணி அரசு வெகு விரைவில் கவிழ்ந்தது. மீண்டும் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்திரா காந்தி பிரதமரானார்.

இன்று அவசரநிலை பிரகடனம் செய்த நாள் என்பதால் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்ரை வெளியிட்டுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால், “34 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் அப்போதைய பிரதமர் அவசர நிலை பிரகடனம் மூலம் ஜனநாயகத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தினார். மீண்டும் அது போல் மற்றொரு அவசர நிலை பிரகடனம் செய்வதை அனுமதிக்க மாட்டோம் என நாம் அனைவரும் இன்று உறுதி கொள்வோம்” என பதிந்துள்ளார்.