பீஜிங்: அமெரிக்காவின் நடவடிக்கைகள் தென்சீன கடல் பிராந்தியத்தில் அமைதியை ஊக்குவிக்கும் விதமாக அமையவில்லை என குற்றம்சாட்டியுள்ளது சீனா.

மேலும், சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும், சீன ராணுவம் எத்தகைய நிலைக்கும் செல்லும் என்றும் கூறியுள்ளது அந்நாடு.

அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் பேட்ரிக் சனாஹன் தைவான் குறித்து கூறிய கருத்துக்கான பதிலாக இது வெளிவந்துள்ளது.

தென்சீனக் கடலில் சீனா உரிமைக் கொண்டாடும் சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பல் நிறுத்தப்பட்டிருப்பதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.

“தைவான் என்பது சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதை சீனாவுடன் இணைக்க ராணுவம் பயன்படுத்தப்படும் வாய்ப்பிலிருந்தும் சீனா பின்வாங்கியதில்லை. எங்கள் நாட்டின் இறையாண்மையைக் காக்க நாங்கள் எந்த விலையும் கொடுப்போம்” என்று சீனாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.