சென்னை
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தமது ஆதரவு இல்லை எனத் தமிழக வணிகர் சங்க பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

வரும் 6 ஆம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக, பாஜக, மநீம, அமமுக மற்றும் நாதக ஆகியவை களத்தில் உள்ளன. அனைத்து அணிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளன. ஒவ்வொரு அணியும் பல கட்சி சாரா அமைப்புக்களை தங்களுக்கு ஆதரவாக இழுத்து வருகின்றன.
நேற்று சென்னை பெரம்பூரில் ஒரு திருமண மண்டபத்தில் தமிழக வணிகர் சங்க பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பிறகு அமைப்பின் தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களிடம், “தொடர்ந்து சில்லறை வியாபாரிகள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகின்றனர் அரசு ஆன்லைன் வர்த்தகத்தை அரசு நெறிமுறை படுத்தவேண்டும் நாங்கள் வணிகர்களின் நலன் காக்கின்ற அரசைத் தான் எதிர்பார்க்கின்றோம்
ஆகவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் எங்களது ஆதரவு கிடையாது. மேலும் நாங்கள் அரசியல் ரீதியான அமைப்பு கிடையாது எங்களது வணிகர்களின் நலன் சார்ந்த பயணம் தொடரும். எங்களைப் பொறுத்த வரை வணிகர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் வணிகர்களின் நலன் காக்கின்ற அரசை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]