சென்னை: தீரன் சின்னமலை பிறத்நாளையொட்டி, அவரது உருவ படத்துக்கு மரியாதை செய்த முதலமைச்சர், ஸ்டாலின், ஆதிக்கவாதி களையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா, இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.அவரது பிறந்த நாளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில் , ”பிரிட்டிஷாரைக் கலங்கடித்த தமிழ் வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள்!அன்று, நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஆங்கிலேய ஆதிக்கவாதிகள் சூழ்ச்சியால்தான் சின்னமலையை வீழ்த்த முனைந்தார்கள்!
இன்றோ, தமிழ்நாட்டுக்குள் நேரடியாக நுழைய முடியாத தில்லி ஆதிக்கவாதிகள் ‘தொகுதி மறுவரையறை’ எனும் சதித் திட்டத்தால் நம்மை அரசியல் வலிமையற்றவர்களாக்க முனைகிறார்கள்.அன்று, சின்னமலையைக் காட்டிக் கொடுத்தான் ஒரு துரோகி. இன்றும் சில அடிமைகள் தங்கள் சுயநலத்துக்காகத் தாய்த்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே ஆர்.எஸ்.எஸ். எஜமானர்களின் காலடியில் அடகு வைக்கின்றனர்.
இந்த ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து தமிழ்நாடு போராடு, வெல்லும் எனத் தீரன் சின்னமலை பிறந்தநாளில் சூளுரைக்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]